Wednesday, April 22, 2009

மிச்சம்

ஒவ்வொன்றாக
கடந்த கால பக்கங்களை
புரட்டிப் பார்க்கையில்
அடிக்கோடிட்டிருக்கும் பக்கங்களில்
உன்னோடிருந்த எல்லாமே பதிவாகி இருக்கிறது
மெல்ல வருடி பார்க்கிறேன்
மேடிட்டிருந்த காயங்களில்
இன்னும் வலி மிஞ்சி நிற்கிறது

10 comments:

யாத்ரா said...

நல்லா இருக்குங்க கவிதை,

காயங்களில் மட்டுமல்ல, எவ்வளவு காலமானாலும் காயங்களின் தழும்புகளில் கூட வலி இருந்து கொண்டே தான் இருக்கிறது.

TKB காந்தி said...

அழகா இருக்கு :)

மண்குதிரை said...

நல்ல இருக்கு சுகிர்தா.

ஏதாவது இதழ்களுக்கு அனுப்புங்கள் சுகிர்தா.

நிறைய கவனம் பெற உதவும் அல்லவா.

Sugirtha said...

நன்றிங்க யாத்ரா.

Sugirtha said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றிங்க காந்தி.

Sugirtha said...

@ மண்குதிரை

நன்றி நண்பரே! இதழ்களுக்கு அனுப்பும் அளவுக்கு நான் எழுதுகிறேனா தெரியவில்லை? ஆலோசனைக்கு என் மனமார்ந்த நன்றி.

Maddy said...

இதயம் கணக்கும் வரிகள்

Sugirtha said...

@ Maddy

உங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் என் நன்றிகள். உங்கள் எல்லா comments க்கும் என் நன்றிகள்.

இராவணன் said...

ஆழமா இருக்குங்க கவிதை.

Sugirtha said...

ராவணனின் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...