Monday, April 6, 2009

துயிலா இரவு

நினைக்கிற பொழுதில்
வந்துவிடுவதில்லை நீ
நடு இரவில் மெல்ல உரசிப் போகிறாய்
அகல கண்கள் கொண்டு விகசித்து விவரிக்கையில்
என்னை உன் காட்சிகளால் நிரப்புகிறாய்
அவசரமாக எழுந்து
உன்னை எழுத முயல்கையில்
எங்காவது ஓடி ஒளிந்துகொள்கிறாய்
நெருங்கையில் வெட்கி விலகும்
இளம் காதலி போல
விளக்கை அணைத்து உறங்கலாம் என்று
படுக்கையில் தலை சாய்க்கையில்
என்ன சொல்லி போனாய்
யோசித்து யோசித்தே
விடிகிறது என் இரவு

8 comments:

மண்குதிரை said...

good one. rasiththeen.

Sugirtha said...

Thanks for dropping by and for your comments.

யாத்ரா said...

நல்லா இருக்குங்க கவிதை

Li. said...

இந்த கவிதைக்கு தலைப்பு 'கவிதை' ! :-)

Really nice!

Sugirtha said...

நன்றிங்க Yatra!

Sugirtha said...

Li க்கு - You are right! Am surprised :-) Thanx!

இராவணன் said...

நல்ல கவிதைங்க.

Sugirtha said...

ராவணனின் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...