Tuesday, April 28, 2009

இயக்குநரின் உளி

சென்ற வருடம்
என் முதல் படம் வெளியானது
முதல் படமே வெற்றியடைந்ததை
இன்றும்
ஒன்றிரண்டு பத்திரிகைகள்
பேசிக்கொண்டிருக்கிறது
ஒளிப்பதிவு அருமை
கதாநாயகன் அறிமுகத்திலேயே அசத்தியிருக்கிறார்
வித்தியாசமான முயற்சி
இப்படி பல பல பாராட்டுக்கள்
இந்த பண்டிகை நாளில்
ஏதோ ஒரு தனியார் தொலைக்காட்சி
அதை ஒளிபரப்புகிறார்கள்
நானும் பார்க்கிறேன்
கதாநாயகன் பாறையில் எதையோ
வரைந்து கொண்டிருக்கிறான்
முகத்தில் சோகம் அப்பியிருக்கிறது
மிகவும் மோசமான உடல் நிலையில்
அம்மா தவிக்கிறாள்
வைத்தியம் பார்க்க இயலாத பண முடை
பக்கத்து வீட்டு பெண்ணை
பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு
அம்மன் சிலை செய்ய
ஏதோ ஒரு ஊருக்கு பயணமாகிறான்
கோவில் வேலை மும்முரமாய் நடக்கிறது
இவன் அம்மன் சிலை வேலையில்
தன்னை ஆழ்த்திக்கொள்கிறான்
அம்மனின் கண்கள்
அம்மாவின் கண்களை ஒத்திருக்கிறது
பார்த்து பார்த்து செதுக்குகிறான்
கோவில் வேலை முடிந்து
கும்பாபிஷேகம் நடக்கிறது
இவன் ஊர் திரும்பிகிறான்
பேசாத சிலையாய்
அம்மா இறக்கிறாள்
படம் முடிந்திருந்தது
நான் அழுகிறேன்

Wednesday, April 22, 2009

மிச்சம்

ஒவ்வொன்றாக
கடந்த கால பக்கங்களை
புரட்டிப் பார்க்கையில்
அடிக்கோடிட்டிருக்கும் பக்கங்களில்
உன்னோடிருந்த எல்லாமே பதிவாகி இருக்கிறது
மெல்ல வருடி பார்க்கிறேன்
மேடிட்டிருந்த காயங்களில்
இன்னும் வலி மிஞ்சி நிற்கிறது

Saturday, April 18, 2009

தொடரும் கதை - பாகம் இரண்டு

இனிய என்னவருக்கு,

நமக்குள் ஏதேதோ குழப்பங்கள் நிகழ்ந்து விட்டது. நமது உறவு நம்மிடமிருந்து சொல்லாமலே விடை பெற்றுக்கொண்டது. எதையுமே வெளிப்படையாய் பேசிக்கொள்ளாமலே இருந்து விட்டோம். பேசிய பிறகோ பேசாமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. எத்தனையோ முறை பட்டு பட்டு துளிர்த்திருக்கிறது இந்த உறவு. தவறான புரிதலுக்கு பிறகு மனம் நிலைகொள்ளாமல் தவிக்கும். பின் வெளிப்படையான உரையாடல்களுக்கு பிறகு பிணைந்து கிடக்கும். அப்படியான ஒவ்வொரு முறையும் நாம் நம் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறோம். அந்த உங்களுக்கான எனது உருகலும் எனக்கான உங்களது பரிவும் எத்தனை இனிமையாய் இருந்திருக்கிறது.

நம் அனுமதியின்றி நம் மேல் திணிக்கபட்டிருக்கும் நிறைய விதி முறைகள் நம்மை பிரிக்கிறதா? இதுதான் அனுமதிக்கப்பட்ட அன்பு செலுத்தல்கள் இந்த முறையில் தான் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொள்ள வேண்டும். இப்படிதான் உறவு முறைகளை அமைத்து கொள்ள வேண்டும். இப்படியான நிறைய வாழ்வியல் நியதிகள் சேர்ந்து நம் உறவை ரத்து செய்து விட்டது. நம் உறவு உடல் கடந்த அழகியல் சேராத ஒரு அற்புத உறவு. அதை இன்ன பெயரிட்டு அழைக்கவும் தேவையில்லை. நமக்கு மட்டுமே புரிகிற ஒரு புது உறவுமுறை. அது அன்பின் அடிப்படையில் அமைந்தது.

நீங்கள் தான் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தீர்கள். என் கஷ்ட காலங்களில் உங்கள் அன்பே என் துணை இருந்தது. உங்களோடு பேசி பேசியே நான் நிறைய பக்குவப்பட்டேன். என் வழிகாட்டியாய் உங்களை மட்டுமே என் மனம் ஏற்றது. என் கோபங்களையெல்லாம் உங்கள் நகைச்சவை நிமிடத்தில் துடைத்தெடுத்து விடும். நேரத்தை பற்றிய பிரக்ஞை இல்லாமல் நீங்கள் என்னோடு பேசுவீர்கள். உங்கள் நெஞ்சோடு சாய்ந்து கொண்டு அத்தனையும் கேட்டுக்கொள்ள ஆசைபட்டிருக்கிறேன்.
எத்தனை பேசினாலும் நாம் இந்த சமூகத்தில் வாழவேண்டி இருக்கிறது. இஷ்டம் இல்லாவிடிலும் நாம் பிரிவதை தவிர வேறு வழியில்லை. நான் இனி உங்களின் ஊமை உறவாய் உங்களை விட்டு போகிறேன். அதைதான் நீங்களும் விரும்புகிறீர்கள்.

நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு முழுக்க எனக்கு புரிகிறது. அதை முழுமையாக காட்ட முடியாத நிலையில் நீங்கள் இருப்பது எனக்கு தெரிகிறது. என்னிடம் பேசும்போதெல்லாம் நீங்கள் எல்லா அன்பையும் உள்விழுங்கிக் கொண்டு பேச திணறுகிறீர்கள். அதனாலேயே என்னை தவிர்கிறீர்கள். முன்பு போல இந்த உறவை இனி தொடர முடியாது எனக்கு தெரிகிறது. இந்த புரிதலெல்லாம் சேர்ந்து என்னை ஒரு இயலாமை நிலைக்கு தள்ளுகிறது. அந்த இயலாமை எனக்கு ரணமாய் இருக்கிறது. இருந்தாலும் என்னுள்ளேயே எல்லாவற்றையும் புதைத்துக்கொள்ள முயல்கிறேன். இதை யாரோடும் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை.

நாம் பிரசவித்து அனாதையாக்கிவிட்ட இந்த உறவை யார் தத்தெடுக்க கூடும். நம் வாழ்க்கையை யார் வாழக்கூடும். விடை இல்லாத கேள்விகள் சேர்ந்து கொண்டு என்னை முற்றுகை இடுகிறது. யோசனைகளின் வீதியில் மனம் அலைந்து அலைந்து ஓய்ந்து போகிறது.

ஈடுகட்டமுடியாத பேரிழப்புகளுக்கு பின்னும் வாழ்கை நகரத்தான் செய்கிறது. நம் வாழ்கையும் அப்படியே. என் தனிமையில் எனக்கான என் நேரத்தில் உங்கள் நினைவுகள் நிறைந்திருக்கும். இந்த நினைவுகளை என்னோடேயே வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்து நுகர்ந்து கொள்வேன்.

முற்றிலும் உங்களிடமிருந்து விலகுவதற்கு முன் இந்த என் கடைசி கடிதத்தை எழுதி விட நினைத்தேன். எப்போதாவது மானசீகமாய் நலம் விசாரித்து கொள்கிறேன். நீங்களும் என்னை நினைத்து கொள்வீர்களா?

உங்கள்,
அம்மு.


கடிதத்தை வாசித்து முடிக்கையில் தான் கண் விழித்தேன். நான் என்ன முயன்றாலும் உன் கடைசி கடிதம் என்னை துரத்துகிறதே அம்மு.
--முற்றும்--

Thursday, April 16, 2009

தொடரும் கதை

நான் இந்த வெயில் காலத்தின் மாலை நேர காற்றை சற்று சுவாசித்து வரலாம் எனக் கிளம்பினேன். இன்று சற்று சீக்கிரமே வேலை முடிந்து விட்டது. தெருவின் முடிவில் இருந்த அந்த ஏரியை ஒட்டியிருந்த பூங்காவுக்குள் நுழைந்தேன். சில குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தார்கள். இங்கு குழந்தைகள் எல்லோரும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறார்கள். எல்லா மாநிலங்களும் கலந்திருப்பதால் அவர்களுக்கு அதுவே சாத்தியமாகிறது.

அவர்களை கடந்து சென்று சற்று நேரம் ஏரியை பார்த்திருந்தேன். எத்தனை விதமான வாத்துக்கள். அதில் ஒன்று தன்னையே சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இன்னொன்று தண்ணீரில் மூழ்குவதும் சற்று தள்ளி எழுவதுமாய் வித்தை காட்டிக் கொண்டிருந்தது. எனக்கு பார்த்து கொண்டிருப்பது சுவாரஸ்யமாய் இருந்தது. இந்த மாதிரி சமயங்களில் என்னை அந்த காட்சிக்குள் தொலைத்து கொள்வதில் எனக்கு என்னவோ மகிழ்ச்சி. நான் எல்லாம் மறந்து எத்தனை நேரம் நின்றேன் தெரியவில்லை.

ஏரியின் அக்கரையில் உயர உயரமான ராட்சச கட்டிடங்கள் ஒவ்வொன்றாய் ஒளிரத் துவங்கியது. அங்கிருந்து என்னை விடுவித்து கொண்டு புல் தரை நோக்கி நடந்தேன். பச்சை புற்களின் மேல் அமர்ந்தேன். அது என்னை தாங்கிக்கொண்டது. கைகளை தலைக்கடியில் கொடுத்து படுத்தேன். காற்று சுகமாய் இருந்தது. மெல்ல கண் மூடி என்னென்னவோ யோசித்தேன். பூங்காவின் விளக்குகளும் ஒளிரத் துவங்கியது. ஒரு புத்தகம் எடுத்து வந்திருக்கலாமோ இப்போது யோசித்தேன். மறுபடியும் கண் மூடினேன். என்னவோ வெறுமையாய் இருந்தது இப்போது. எதுவுமே யோசிக்காமல் இருப்பதே நன்றாய் இருக்கும் போல் தோன்றியது.

காற்று சட்டைக்குள் புகுந்து கொண்டு ஒளிந்து விளையாடியது. பிறகு அது தன்னை நிதானித்து கொண்ட பொழுதில் என் அருகில் ஏதோ படபடப்பதை உணர்ந்தேன். வெள்ளை காகிதம் ஒன்று ஒரு செடியில் மாட்டிக்கொண்டு அல்லாடியது. அதை எடுத்து ஏதாவது கிறுக்கலாம் என்று பாக்கெட்டில் பேனாவை எடுத்தேன். காகிதத்தை கையில் எடுத்து பார்க்கையில் என்னவோ எழுதி இருந்தது. கடிதமா? படிக்கலாமா? யோசிக்கையிலேயே கடிதம் என்னை உள்வாங்கத் துவங்கியது.
--- தொடரும்---

Tuesday, April 14, 2009

அன்புள்ள அப்பா

அப்பா அப்பா அப்பா....சொல்லி சொல்லி பார்க்கிறேன். என் இனிய அப்பா. முதலில் எல்லாம் எத்தனை பயம் அப்பாவை பார்த்து. அப்பாவிடம் நான் கல்லூரிசெல்லும் வரை முகம் பார்த்து கூட பேசினது கிடையாது. Might look weird but it's true. We had tons and tons of love for each other. But he was so strict with me becaue I was the eldest. என்னமோ என்ன பார்த்துதான் என்னோட siblings ஒழுக்கமா இருப்பாங்கன்னு He was so particular about lot of stuff. Even with dressing, talking to guys, going to places, talking to friends(girls only) over the phone and so many things. I hardly had spoken to any guys till my UG. I used to fight a lot with him during my college days. But now everything has changed. I value lot of stuff because of him. I love you pa.

இன்னமும் கொஞ்சம் பயம் இருந்தாலும் நிறைய பாசம்தான். கல்யாணத்திற்கு பிறகு அடிக்கடி நடு ராத்திரியில் எழுந்து இப்போவே அப்பாவை பார்க்கணும் என்று அழுவேன். That time my hubby used to console me. போன வாரத்திலும் அது நிகழ்ந்தது. நான் Love comes softly series பார்த்துகொண்டிருந்தேன். No one was at home. I love watching movies when I am alone. So that I can react and cry when I feel like crying. Coming back to the movie Love comes softly - A love between a father and daughter was wonderfully shown there. She was separating from her father after marriage. That scene when she was going to board with her hubby in the cart she says my heart is breaking pa. He also says mine too. I couldn't proceed any longer. I just paused d movie and ran to the bed and cried, cried and cried. I remembered how I cried when I was leaving home with my hubby. Poor thing he didn't know what to do ;) tears were in his eyes too. Perhaps he will know the pain when his daughter gets married. It's the difficult thing in the world.
I still sleep in his lap whenever I go to my native. I am still the same kutty ponnu for him. நான் என் குட்டி மகளை கொஞ்சும் போதெல்லாம் he teases me. இப்போ தான் ....போட்டுட்டு அங்கயும் இங்கயும் ஓடிட்டிருந்தே நீயெல்லாம் பொண்ண கொஞ்சற. I feel so embarassed ;) But I'd like to be the same kutty ponnu for you pa forever and ever.

Monday, April 6, 2009

துயிலா இரவு

நினைக்கிற பொழுதில்
வந்துவிடுவதில்லை நீ
நடு இரவில் மெல்ல உரசிப் போகிறாய்
அகல கண்கள் கொண்டு விகசித்து விவரிக்கையில்
என்னை உன் காட்சிகளால் நிரப்புகிறாய்
அவசரமாக எழுந்து
உன்னை எழுத முயல்கையில்
எங்காவது ஓடி ஒளிந்துகொள்கிறாய்
நெருங்கையில் வெட்கி விலகும்
இளம் காதலி போல
விளக்கை அணைத்து உறங்கலாம் என்று
படுக்கையில் தலை சாய்க்கையில்
என்ன சொல்லி போனாய்
யோசித்து யோசித்தே
விடிகிறது என் இரவு

Saturday, April 4, 2009

என் செல்லமே

என்ன நிந்தனை இது
உன்னை இடை கிடத்தி
உறங்கிடத்தான் ஆசை எனக்கும்
உன் பிஞ்சு விரல்களை
முத்தமிட்ட படியே தூங்கிடவும்
நீ தூங்கிடும் அழகை ரசிக்கவும்
எத்தனையோ ஆசை தான் எனக்கும்
நீ செய்யும் செல்ல
குறும்புகள் அனைத்தையும்
நீ வளர்ந்தபின்
உன்னிடம் சொல்லிட
கதைகள் இருக்குமா என்னிடம்