திருத்தி எழுதப்பட்ட
இப்புத்தகத்தில்
ஆதாமல்ல இந்த ஏவாளே
முதல் மனுஷி
தனியே இருந்த அவளை
சிசு தாங்கு சுவருதிர்ந்து
கசியும் அடர் உதிரமாய்
இடையற்ற வெறுமை
துவாரம்தோரும் துளிர்த்து
கிளைத்தூர்ந்து துரத்த
ஏதேன் தோட்டத்தின்
வசந்தங்களை கொய்து
குழைத்து தீட்டிய ஓவியத்தில்
முளைத்த ஆதாம்
இப்போது ஏவாளில்
பருவங்களை விதைக்கிறான்