Sunday, March 29, 2009

ஒரு தெய்வம் தந்த பூ

இந்த பயணம் மனதுக்கு மிக நெருக்கமாய் இருந்தது. என் செல்ல மகளோடு கழித்த/ களித்த ஒவ்வொரு கணமும் நெஞ்சில் பொங்கி வழிகிறது. அவளோடு இந்த முறை நிறைய பேசினேன். புரிந்ததோ இல்லையோ இமைக்காமல் என்னையே பார்த்திருந்தாள் . அவள் தண்ணீரில் எத்தனை குசியாய் விளையாடினாள். அம்மம்மா எனக்கு கண்கள் போதவில்லை. அப்போது நானும் அவளோடு குழந்தையாகி போனேன். அவளின் சந்தோச குரல்கள் என்னை தொற்றிக்கொண்டது. என் முகமெல்லாம் அவள் விளையாடி தெறித்த நீர் முத்துக்கள் மனமெல்லாம் சந்தோஷ மொட்டுக்கள். எனக்கு அவள் எச்சில் முத்தங்கள் கொடுத்தாள். என்னை அவள் குட்டி பற்கள் கொண்டு கடித்தாள், சின்ன நகங்கள் கொண்டு கிள்ளினாள். என் கண்கள் முழுக்க அவளே நிரம்பி கிடக்கிறாள். மனம் முழுக்க பூவாய் பூத்து சிரிக்கிறாள். எனக்கு நிறைவாய் இருக்கிறது. தாய்மையின் பரிபூரணம் கொடுத்த என் குட்டி கண்மணி.

3 comments:

ராஜா சந்திரசேகர் said...

... என் கண்கள் முழுக்க அவளே நிரம்பி கிடக்கிறாள்...தாய்மை சுடர் விடும் வரிகள்.வாழ்த்துக்கள் சுகி

Sugirtha said...

நன்றி ராஜா!

Maddy said...

ஒரு தெய்வம் தந்த பூ!!! என்ன அழகான நினவு. வாழ்த்துக்கள் உங்கள் குட்டி பூ க்கு

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...