Wednesday, January 21, 2009

நான் மற்றும் தனிமை...

தனிமை ஒரு இனிய அனுபவம்,
அதன் மௌனம் இப்போது இனிய சுகம்,
என்னோடு அது...
வானம் ரசிக்கிறது,
தேன் ருசிக்கும் பட்டாம்பூச்சி பார்க்கிறது,
வீடடையும் குருவியின் குதூகலம் காண்கிறது,
சமயங்களில்
என்னோடு அழுகிறது,
என் நிஜம் புரிகிறது,
தேற்ற முடியாமல் தள்ளி நிற்கிறது,
என் மௌனம் அதற்கு புரிகிறது,
என்னோடு அதையும் அனுபவிக்கிறது,
என்னை எனக்காகவே நேசிக்கிறது,
என்னை விட்டு விலகாமல் எப்போதும் துணை வருகிறது...

No comments:

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...