அன்று ஏன் சொல்லவில்லைஎன்பதற்கு
என்னிடம் காரணம் எதுவும் இல்லை.
இன்று ஏன் சொன்னேன் என்பதற்கும்,
என்னிடம் காரணங்கள் ஏதுமில்லை.
மன்னிக்கவும், உன்னைக் காயப்படுத்தியிருந்தால்...
அன்று குழப்பங்கள் சூழ்ந்து நின்றேன்,
அதனால் சொல்லவில்லை.
இன்று உன்னிடம் சொல்லி விட்டேன்.
சொல்லிய பின் குழப்பங்கள் சூழ்ந்து நிற்கிறேன்.
அன்று சொல்லியிருந்தால் என்னவாகியிருக்கும்? தெரியவில்லை.
இன்று சொன்னதாலும் எதுவும் மாறிவிடவில்லை.
எனினும் சில விஷயங்களை மட்டும்...
இன்றும் உன்னிடம் சொல்ல முடியவில்லை.
உனக்கும் எனக்கும் மட்டும் புரிந்தது,
ஊருக்கு புரியாது, புரியவும் வேண்டாம்.
நமக்கு மட்டும் புரிந்த, நமக்குள் மட்டும் இருந்து விட்டு போகிற,
இந்த அழகை நான் ரசிக்கிறேன்.
நான் உணர்ந்ததை நீயும் உணர்ந்ததில்
எனக்கு நிறைய மகிழ்ச்சி.
இந்த அழகு, இப்படியே, இப்போதுபோலவே
எப்போதும் ரசனைக்குரியதாய் நம் மனதுக்குள் மட்டும் பேசிக்கொண்டே இருக்கட்டும் ...
1 comment:
ரொம்ப அழகான கவிதைங்க, இந்தக் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நல்லா எழுதறீங்க, நிறைய எழுதலாம் அல்லவா
Post a Comment