Thursday, December 29, 2011

The Adventure way

Well, this is how this trip was planned. One fine day I got a call from Shri saying I've booked my tickets to Nellai, so and so date arrival... so and so date departure etc., etc., so let us meet there then. I was like what,pp..lleease give me a break as we'd just gotten back from one long ride in the hills. Although I thought like that I just said oookkay...I dragged that okay so much in which she noticed my hesitation and asked further why, is there a problem? I said no, no problem. Then she said if there is no problem you better book the tickets now itself. Though the journey was planned this hastily we still had one month in hand to plan what we wanted to do there.


We have developed interest in Nellai not just because of famous Halwa but also to go and see the forest. I have heard there is a forest through one of my friends as her friend Abhi was assisting researchers there. Shri and I like to be lost in woods. We keep saying how nice it would be to live amidst trees and see birds. Having seen hills already, this time we chose forest because there we get to accomplish both our wishes - to live amidst trees and also to see birds. We had been planning to go to Nellai from the time we both got introduced and when I mentioned there is a forest there. But the base for this sudden trip was laid when we went to attend one of our friend's wedding.

After attending the wedding we rode to the pertol bunk in the night to fill the tank for our early morning trip. There she suddenly noticed a Van with a banner ' Koondakulam Bird Sanctuary - Tirunelveli'. She asked me if that is okay to go and make an enquiry to that person and check if it is possible to visit this santuary. We can go and see this place also when we plan to go to Nellai in future. I said that should be fine. We slowly went near and stopped the vehicle and asked the driver about the sanctuary and asked if we are allowed to visit and stay there. They were a little taken aback and gave a look like what on earth these girls are asking, coming from no where. We further explained we like birds very much and we want to come and see. The person who sat next to the driver started telling it is a small place and we will not have a comfortable stay and food is again a problem. But we assured we are fine with that kind of accommodation and food and if suppose we are going who should we contact. The driver pointing towards the next person said he is the officer and he is the one who would be approving. We were very glad and asked if he would give his number. He said we can give a call and gave his number and name. Within 2-3 days from meeting this person she booked the tickets and made me book as well. This all might look crazy indeed it is.

In the mean time I had one of my friends from Nellai so I called and asked if it is fine to go and stay at her house. She said it is fine and not a problem. I sounded too desperate that I did not give a chance for her to say no. If I remember correctly I'd never been this desperate before. But now I've become one for wanting to see places which I love. I did this because I was very sure we would not disturb them. Because all we needed was a little space to just stretch and rest safely in the night. I told her the same and she said not to worry as she has a bigger house. My friend added her place is Ambasamudram (Ambai) and I should take another bus to reach her place and it would take about one hour from Nellai.

Then I called Abhi who is familiar with the places to ask where we can see birds. She clearly told if we want to see birds we can go to Vagaikulam and also Thirupudai Maruthur a 400 year old temple. And most importantly we will have to go either in the morning or in the evening to spot birds. And also she said we can go to Papanasam, Mundanthurai and Kariar dam. These three places are on the same way so we can go one day and see all three places she suggested. She added there is a famous temple in Papanasam and then next place is Mundanthurai which is a forest which also has' Sori Muthian temple' an old temple. After seeing these two, the next place we can go is Kariar dam and if boating is allowed in the dam at this point of time we can go to Banatheertham to see a beautiful fall she said. She added Ambai is a center place and we get a lot of buses from Ambai to Papanasam but buses till Kariar is not that frequent so she suggested better we can go to Kariar first finish the boat ride and then on our way back we can see Mundanthurai and Papanasam. I have noted down everything clearly. Although Shri kept telling me to call the officer who we met in the petrol bunk that idea of calling him drifted away because I already had plans for 2 days and my friend anyway was going to accommodate us.

The day arrived and we left for Nellai. We anticipated her train would reach first and then within half an hour or so my bus would reach. So we planned that she can wait in the station and then when I also reach we can take a bus to Ambai together. When I started I was so thrilled about this trip because I had never been to that part of Tamilnadu before. Our friends warned not to go near water bodies since there was heavy rain in that place and public was restricted from entering water bodies two weeks back. I was hoping to see Thamirabarani flowing through paddy fields and full greenery because of the rain.

She reached first as we expected and she said she would wait in the new bus stand from where we were to take a bus to Ambai and anyway I was going to get down at new bus stand directly as my bus would go via new bus stand further to Nagerkoil. She reached new bus stand and then I reached and we met finally at the bus stand. We took a bus to Ambai and my friend came to the bus stand to receive us. She took us home and we inquired her father about the places we wanted to see. Somehow Papanasam, Mundanthurai and Kariar dam was fixed in my mind while Shri still was trying her chance with Kunthakulam. After we showered and had breakfast her father suggested us to reach the bus stand fast and take the Kariar bus because if we leave that then we would get only after 2 hours. He also advised us to come before 5 PM in the evening because of lunar eclipse. We nodded yes and Shri whispered to me take your brush and leave your bag here if we get a chance we will stay in the forest. I took the brush and paste in my handbag and little cash. Her father came with us till the bus stand and upon reaching we learned that Kariar bus left by then. So he suggested we could take Papanasam bus and by the time we finish seeing the temple Kariar bus would come there and we could take it from there. This suggestion made sense and we climbed Papanasam bus. (More to come)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------I am going to write this in parts as this is a big adventure story---------------------------------------------

Monday, December 26, 2011

Nature lover cum Amateur traveller's experience at Navadarshanam

I have heard of Navadarshanam (Nd) through my friend Suma few years back. She mentioned to me that she had been to that place once for a gathering and she found the place very good. She also mentioned if we like we can go and stay over a weekend to understand the activities they carry out there including organic farming. Although she might have given few more details my brain got stuck with the word organic farming and it immediately visualized Navadharsanam (Nd) inside. Since I have participated in their health food sale in Bangalore, my brain visualized a vast farming land with all the plants which gave grains/fruits/vegetables that I bought/saw in the sale. So it had paddy fields, turmeric plants, groundnuts etc., etc., Though I showed interest then to visit Nd, we could not go due to lot of other reasons. Over time I forgot about visiting the place completely but continued to participate in their monthly sale in Bangalore once in a while .
Once I got the link of Nd and I went through the entire website. Having seen the website, I realized this place is not just what or how I visualized but has much more and more. Some how a thought came 2 weeks back to visit Nd and last Tuesday I asked my friends Suma and Sangee if they are available to pay a visit to Nd over this weekend. In addition to which I sent Sangee the link http://www.navadarshanam.org/ of Nd as this is totally new for her. After going through the same she called me and said she liked it very much and she wanted to visit this place. We decided we four including my husband will go on 24th evening and will return to Bangalore on 25th December. I followed the procedure mentioned in the website and as per the same I called Nagarajan on 92430-49163 and checked with him if it is possible for four of us to visit Nd over the weekend. He asked if we are visiting for the first time and asked why we want to visit this place. We briefly spoke and he informed that it is possible to accommodate four of us. He also told it has very basic facilities and I told him we are completely fine with the same. On 24th Morning I received an sms from him saying 'please bring warm clothes for the night'. We packed extra blankets and left bangalore at 3 PM and reached Nd by 4:45 PM.
After we parked the vehicle at the Nd gate and started walking towards the building we met Om on the way. He welcomed us and asked Suma if she had been there before. She mentioned that she had been there for a gathering in 2009. She felt happy to know that he remembered her. We went in and asked the first person we met in health food counter for Nagarajan. He came along and showed us the home Chandan that we were going to stay and gave the keys to us. We all were totally taken over and transformed to be the members of Nd family the moment we stepped in. It had a very soothing ambience and naturally air-conditioned.




After we all shared how each other felt about the home, I came out  and was trying to see what few women were doing at a drying platform near the building. I turned back when I heard a voice 'always keep the doors closed otherwise unwanted guests will enter'. That's how Nagarajan uncle introduced himself . After we all got introduced I asked him if we can go and see around or any special permission is required. He said nothing of that sort is required and we can go and explore ourselves. He took us to the kitchen and got us hot tea. I noticed the kitchen and it more felt like the one we had at my grandma's. Although the look might differ I could feel similar warmth and love.




When we finished our tea and washed our glasses, we met Ananthu outside the kitchen and Nagarajan uncle introduced us to him. He asked how we knew Nd and we explained. Nagarajan offered he will show us around. While we started walking I mentioned to him that I learned from the website Honge oil is used for engines wanting to know more information. But he replied we tried using but after few years engines gave up so we could not continue.


When we kept walking it was very difficult to believe that this place was once a waste land. It has grown into a rich forest now. 





We met Gopi who was watering the farm, Nagarajan uncle introduced us to him. We asked him about the names of the different plants that we saw in the farm. 





We saw tiny plants of Palak, Beetroot and other greens. After we spoke we started walking and we also saw a house getting constructed and checked with him how those bricks are made. It was surprising to know that only very limited percentage of cement is being used for the making of such strong bricks.



Since this place is very close to forest we asked if they saw any animals. He mentioned elephants would come at times. That explained why such big coconut tree fell. By now we had reached his house amidst trees and bushes and he offered if we would like to come in. We were very glad to go in and see around the eco-friendly house personally designed by him and very pleased to meet Padmini aunty. She received us as if she was expecting us and showed us all the rooms and her lovely garden. She also had put lovely arisi mavu kolam in the front and at the back doors.






She had lot of herbal plants in her garden. For the first time I smelled lemon grass in her garden and was pretty amazed. She offered we could take the saplings if we liked. We got talking for a while and then we reached Chandan.
While we were inside we heard voices in the verandah. When we came out there was a small group of people who came to Nd from calcutta. They asked if it is okay to use the verandah and we were very pleased to meet them. Other people were arranging for a bonfire in the rock near Chandan and also were arranging to have dinner along. They had lighted candles and all of us joined to have Christmas dinner filled with delicious healthy food and cake without sugar yet very tasty. It was a special Christmas eve with all the carols and little gifts that was hand made by the children from Nd. We parted after dinner and slept peacefully in the lap of Nd.




We got up by 6:00 in the morning and went for a walk to see birds. 


We explored the place ourselves but all the buildings looked similar. We kept coming to same way over and over and it had nice fun. We saw cow shed and was glad to see natti cows.





We found art on the walls and leaf imprints on the floor of one of the houses at Nd








Nagarajan uncle joined us in between and he took us to a different path and told us you find the way and come to the kitchen for the breakfast. It was interesting and also easy to find our way out. We met Nd residents during breakfast and also Ananthu. After breakfast again we started walking and collected few leaves from the fallen coconut tree. We tried our art work using them that once we learned as a child. 




The children who came from near by hamlet to Nd fancied them and my husband enjoyed making them leaf snakes.
Although we thought we would start by 12:00 in the noon to Bangalore we left around 4:30 PM on Sunday as it was difficult to part with Nd. We thoroughly enjoyed the stay and it was wonderful to be in a vision once a group of people had that came true in every way. Nagarajan uncle and the whole Nd members ensured we had a great stay. Thanks to everyone at Nd for having given a chance to be part of such a beautiful family.

Tuesday, December 6, 2011

பயணங்கள் முடிவதில்லை - 2

சமீபத்தில் பணி நிமித்தமாக ஓரிடம் சென்றபோது அந்தக் குழுவில் பாலா என்ற ஒருவரை பார்க்க நேர்ந்தது. ஒவ்வொருவரும் தங்களை குறித்த பத்து நல்ல விஷயங்களை கூறி தங்களை விற்க வேண்டும். அதாவது நேர்முகத்தேர்வில் எப்படி ஒருவர் தன்னை பற்றிய strengths ஐ கூறி விற்பாரோ அது போல. பாலாவின் முறை வந்தபோது அவர் என்னை ஒரு பேனாவை போல சட்டை பையில் குத்திக் கொண்டு எங்கும் எடுத்து செல்லலாம் என்றார். என்னிடம் எந்த நிபந்தனைகளும் இல்லை, I am very adaptable என்றார். 'ஒரு பேனாவை போல' எத்தனை அழகாய் சொல்லி இருக்கிறார் என்று நினைத்தேன். அப்படியான என் பேனா என் தோழி ஸ்ரீ http://shriprajna.blogspot.com/ அவள் ஒரு பீனிக்ஸ். அவள் ஒரு பறவை. எனக்கு ஊர் சுற்ற மிக சரியான ஒரு கம்பானியன். அவளோடு போன ஒரு அற்புத பயணத்தை இங்கே பதிவு செய்ய நினைக்கிறேன்.

என்னை ஆட்கொள்ளும் பயணங்களின் முக்கிய அம்சம். எங்கு போகிறோம் என்று தெரியாமலே, எந்த எதிர்பார்ப்பும் அற்று கிளம்பி, மனதுக்கு தோன்றிய இடத்தில் எல்லாம் புகுந்து பார்த்து வர வேண்டும். அப்படியான ஒரு பயணம் தான் இது. முதல் நாள் இரவு வரை வேறோர் இடம் செல்ல நினைத்திருந்து காலையில் எழுந்ததும் ஒரு மலைப் பிரதேசத்தின் பெயரை சொல்லி இங்கு செல்லலாமா என்றேன். அவளும் ஒரு நொடியும் யோசியாமல் போகலாம் என்றாள். ஏன் அந்த இடம் மனதிற்கு வந்தது என்று தெரியவில்லை. இது முழுக்க முழுக்க intuitive trip.

பயணங்களின் போது எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், ரோட்டோர டீ கடை. அதுவும் காலை வேளையில் மங்கிய வெளிச்சத்தில் ஏதாவது பாடல் கேட்டுக் கொண்டே விழித்திருக்கும் டீ கடைகள். மலைப்ரதேசம் துவங்கும் முன்பே அப்படி ஒரு ரோட்டோரக் கடையில் நிறுத்தி டீ சாப்பிட்டு அது நல்லா இருந்தது என்று கூறி விட்டு கிளம்பினோம். எப்படியோ வழி கேட்டு கேட்டு ஒரு வழியாக அந்த மலைபிரதேசத்தை நெருங்கத் துவங்கினோம். மலை ஏறத் துவங்கிய முதல் கால் மணிநேரத்திலேயே ஒரு பாம்பு அந்தப் பகுதியின் குளிருக்கு இதமாய் நடு ரோட்டில் அப்போதுதான் முளைத்த இள வெயிலில் காய்ந்து கொண்டிருந்தது. எனக்கு பாம்புகள் மிக பயம் என்பதால் பாம்பு என்று கத்தி நான் அனிச்சையாய் கால்களை தூக்கிக் கொண்டேன். அவளும் பயந்து எங்கே எங்கே என்று சற்றே நிதானித்து பிறகு மீண்டும் தொடர்ந்தாள். வண்டி அதன் மேல் ஏறிவிட்டதோ என்று பயந்து திரும்பி பார்த்தேன். அது ஷேமமாக நெளிந்து நெளிந்து ரோட்டின் அந்தப் பக்கம் சென்றது. இந்த அதிர்வு அடங்கா இன்னும் சற்று தூரத்தில் இன்னொரு பாம்பு அதே போல. எனக்கு இந்த பயணம் திகிலாய் இருந்தது. அவள் தான் பாம்பை பார்கவில்லை பார்க்கணும் என்றதும் திரும்ப வந்து அதைப் பார்த்துப் போனோம். அதே இடத்தில் சற்றும் அசையாமல் இருந்தது இரண்டாவது பாம்பு. அதற்கு பிறகு சற்று நேரத்திற்கு கிடந்த குச்சிகளெல்லாம் எனக்கு பாம்பாய்த் தெரிந்தன. ரோட்டின் மேல் நீண்டிருந்த கிளைகளிளெல்லாம் பாம்புகள் தான் நெளிந்தன. அங்கே இருந்து மேலே விழுமோ என்ற எண்ணம் தேவை இல்லாமல் எழுந்தது.

ஆனால் அதையே நினைத்துக் கொண்டிராமல் செய்ய, வழி இன்னும் நிறைய ஆச்சர்யங்களை வைத்திருந்தது. மலை என்றாலே குரங்குகள் இருக்கனும் இல்லையா, அதற்கு சற்றும் முரணாமல் இப்போது பக்கத் தடுப்பு சுவர்களெல்லாம் நிறைய குரங்குகள் தென்பட துவங்கின. இந்தக் குரங்கு குட்டிகள் தான் எத்தனை அழகு நான் வியந்தேன். அது அத்தனை அழகாக நம்மை immitate பண்ணிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டு செல்லயிலேயே பல வண்ணத்து பூச்சிகள் வழியோரம் முளைத்திருந்த சிறு சிறு மலர்களில் அமர்ந்து அமர்ந்து சென்றன. கொஞ்சம் நிதானித்து அதன் வண்ணங்களை பார்த்து கொண்டே சென்றோம். இந்த பயணத்தின் இன்னொரு முக்கிய அம்சம் நினைத்த இடத்தில் நிறுத்த முடிவது. இது ஒரு புதிய உலகம். இதுவரை நான் அறிந்திராத உலகம். இங்கே அழைத்து வந்த என் தோழிக்கு நிறைய நிறைய நன்றிகள் என் மனம் சொல்லிக் கொண்டது. நான் அவளிடம் சொன்னேன் இந்த இடத்தை விட அருமையான விஷயம் உன் அறிமுகம் எனக்கு கிடைத்தது.

இதோ இப்போது தான் கொண்டை ஊசி வளைவுகள் ஒவ்வொன்றாய் முளைக்கத் துவங்கின. அந்த வளைவுகளை கடக்கும் போதெல்லாம் கீழிறங்கும் வாகனங்களின் வேகம் அச்சமூட்டுவதாய் இருந்தது. சமீபத்தில் பெய்திருந்த மழையில் சீர் குலைந்திருந்த இடங்களெல்லாம் இப்போது சீர் செய்யும் வேலை ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தது. இன்னும் சற்று தூரம் சென்றதும் தேயிலை தோட்டத்தின் ஊடே ஒரு சிறு நீர் ஊற்று வழிந்து கொண்டிருந்தது. அதை ஒட்டி ரோட்டோரமாய் ஒரு சிறு கோயிலும். அங்கே ஒரு சிறு பாலம் அதன் ஓரமாய் வண்டியை நிறுத்தி, மேடேறி தோட்டத்தின் அடிவாரத்தில் இருந்த சிறு மேட்டில் அமர்ந்து சுற்றிலும் பார்த்தோம். கண்ணுக்கு எட்டிய இடமெல்லாம் தேயிலை தோட்டங்களும் ஊடே சில்வர் ஓக்குகளுமாய் இருந்தது. அப்படியே ஆழமாய் ஒரு முறை மூச்சை இழுத்துக் கொண்டேன். பச்சை தேயிலை மணம். ஒரு அறை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு திரும்ப தொடர்ந்தோம்.

முழுதுமாய் வேறு உலகத்திற்கு சென்றதை இன்னும் இன்னும் பூரணமாக நான் உணர்ந்தேன். வழியெல்லாம் கூடவே இப்போது மஞ்சள் பூக்கள். கொடி போல் இருந்த அந்த செடி, மலை சரிவை முழுதாய் ஆக்கிரமித்து பூத்துக் குலுங்கியது. சூரிய காந்தியை ஒத்திருந்த அது ஏதோ ஒரு காட்டுச்செடி என அறிந்தோம்.







அங்கங்கே தோட்டத்தின் ஊடே நீர் வடிந்து கொண்டிருந்தது.





இப்போது இடப் பக்கம் பார்க்கையில் ஒரு பெரும் பள்ளத்தாக்கு. பக்கசுவரை தாண்டி விழுந்தால் ஒரெலும்பு கூட தேறாது என்று நினைப்பு ஓடியது. அப்போது தொற்றிய பயம் பயணத்தை இன்னும் திகில் நிறைந்த சுவாரஷ்யம் ஆக்கியது. இதையெல்லாம் மீறியும் பள்ளத்தாக்கின் அமானுஷ்யம் ஒரு நிறைவான அழகாய் இருந்தது.











பார்த்து நிமிர்கையில் கவனம் யானைகள் சாலையை கடக்கும் பகுதி என்று ஒரு எச்சரிக்கை போர்டு வைக்கப் பட்டிருந்தது. சற்று முன் இருந்த செக் போஸ்டில் நிறுத்தி வரி செலுத்திவிட்டு யானை வருமா என்று கேட்டோம். வரி வசூலகர் மிக இனிமையாக பேசினார். இப்போது வராது நேற்று தான் ஒரு குட்டி யானையோடு நாலைந்து யானைகள் வழியில் நின்று இருந்தது. நாம் எதுவும் செய்யாவிட்டால் அது எதுவும் செய்யாது என்றார். பிறகு தனக்கு முன்னே இருந்த இடத்தை காட்டி இங்கே தான் பைசன்கள் காலையில் மேயும் என்றார்.

மறுபடியும் மேலேறத் துவங்கினோம்.வழியிலிருந்த சிறு சிறு ஊருகளை கடந்து மேலேறிக் கொண்டிருந்தோம். நிறைய நிறைய அழகு தாண்டி ஒரு வியூ பாய்ண்டை அடைந்தோம். அதில் மேலேறி சற்று நேரம் நின்று பார்த்து கீழிறங்கி செல்ல முயல்கையில் இன்னுமொரு வாகனத்தில் வந்திருந்த சில ஆண்கள் தங்களுக்கு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். சொல்லுங்க பாக்காம போகப் போறாங்க என்றார்கள். பிறகு ஒருவர் இன்னும் கொஞ்சம் அந்தப் பக்கம் கீழிறங்கி பாருங்க ஒரு பள்ளத்தாக்கு இருக்கு. ரொம்ப நல்லா இருக்கும் என்றார். எங்களுக்கு மிகுந்த தயக்கமாய் இருந்தது. எங்கே பார்த்தாலும் ஆண்கள் மட்டுமே. எங்கள் தயக்கத்தை உணர்ந்து அவரே ஒரு பாமிலி கூட போயிருக்கு ஸேப் தான் போகலாம் என்றார். நாங்க அந்த வழியில் இறங்கத் துவங்கினோம். கீழே போக போக சட்டென இறங்கும் பள்ளம், கண்ணெட்டும் தூரத்தில் ஒரு அருவி, கீழே தெரிந்த கிராமங்கள். அத்தனை அழகு அழகு அழகு. அங்கே ஒரு செக்யூரிட்டி இருந்தார். நீங்கள் இங்கேயே இருப்பவரா என்றதற்கு ஆமாம் என்றார். கார்ல வந்தீங்களா கேட்டார் நாங்கள் டூ வீலேரில் வந்தோம் என்றதும் ஆச்சர்யத்தில் சட்டென முகம் மலர அப்படியா என்றார். நாங்கள் அங்கேயே அமர்ந்தோம். சற்று நேர அமைதிக்குப் பிறகு I am the happiest person in the world என்று கத்த வேண்டும் என்று சொன்னேன். நீ சொன்ன பிறகு தான் நாம் இங்கிருந்து கிளம்பலாம் என்றாள் ஸ்ரீ. எனக்கு சங்கோஜமாக இருந்தது. சற்று நேரத்தில் வெளிநாட்டு தம்பதி தங்கள் காரோட்டியோடு வந்திருந்தார்கள். ஹலோ என்றேன். அவர் மைக்கல் என்று தன்னையும் லூயிஸ் என்று மனைவியையும் அறிமுகப் படுத்தினார். பிறகு என்னோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறாயா என்றார் நானும் சரி என்று எடுத்துக் கொண்டேன். பிறகு இந்தியன் டிரைவிங் பார்த்து பயந்ததை சொன்னார். கூட வந்த டிரைவர் இதுல தாம்மா நம்ம ஆளுங்க பேரக் கெடுத்துக்கறாங்க என்றார். நான் மெதுவாதாம்மா போவேன் ஏன்னா இவங்க போய் நெட் ல எழுதிட்டா என் பேரு கெட்டு போயிடும் என்றார். சற்று நேரம் பேசி விட்டு அவர்கள் சென்ற பிறகு இன்னொரு வட இந்திய குடும்பம் வந்தது. இப்போது  ஸ்ரீ எழுந்து குன்றின் உச்சியில் நின்று கொண்டு 'I am the happiest person in the world' என்று சத்தமாய் சொன்னதும் நாங்கள் கீழிறங்கத் துவங்கினோம்.

Saturday, October 8, 2011

ஏவாளின் ஆதாம்

திருத்தி எழுதப்பட்ட
இப்புத்தகத்தில்
ஆதாமல்ல இந்த ஏவாளே
முதல் மனுஷி

தனியே இருந்த அவளை
சிசு தாங்கு சுவருதிர்ந்து
கசியும் அடர் உதிரமாய்
இடையற்ற வெறுமை
துவாரம்தோரும் துளிர்த்து
கிளைத்தூர்ந்து துரத்த

ஏதேன் தோட்டத்தின்
வசந்தங்களை கொய்து
குழைத்து தீட்டிய ஓவியத்தில்
முளைத்த ஆதாம்
இப்போது ஏவாளில்
பருவங்களை விதைக்கிறான்

Friday, June 24, 2011

பித்து

அவளுக்கு காலையில் எழுந்ததுமே கடு கடுவென இருந்தது. கிளம்பி அலுவலகத்திற்கு செல்ல பாதி வழி வந்தாயிற்று. ஆனால் இப்போது அலுவலகம் செல்ல சுத்தமாய் விருப்பமில்லை அதற்கான மனமுமில்லை. இந்த நிலையில் சென்றால் ஒரு வேலையும் ஓடாது என்று நிச்சயமாய் தெரியும். எதாவது தான் மட்டுமே செய்யும் வேலையாக இருந்தாலாவது காதில் இயர் போனை மாட்டிகொண்டு, ஏதாவது பாட்டைக் கேட்டுக் கொண்டு,எதையும் சட்டை செய்யாமல் தன் போக்குக்கு எதையாவது செய்து கொண்டிருக்கலாம். இன்றைக்கு இருக்கும் மீட்டிங்குகள் அதற்கு இடம் கொடாது. மீட்டிங்கில் மனிதர்களை எப்படி தவிர்க்க முடியும்? மீட்டிங்கே மீட்டிங்குக்கு தானே. பேசாமல் விடுமுறை எடுக்கலாம் என்றாலும் போதுமான லீவ் பாலன்ஸ் வேறு இல்லை. அதையும் மீறி விடுப்பு எடுத்தாலும் தான் புழங்கும் இடத்தில தேவையான தனிமையும் கிடைக்காது. எந்த வகையில் யோசித்தாலும் ஏன் இப்படி முட்டிகொள்கிறது. இருந்தாலும் என்னவென்று தெரியவில்லை ரொம்ப தீர்மானமாக இன்று யாரையுமே பார்க்கக் கூடாது என்று தோன்றியது. அலுவலகத்திற்கு போனால் ஏன் இப்படி இருக்கிறாய் என்ற அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல மட்டுமல்ல, அந்த கேள்வியே எரிச்சலாய் இருக்கும். எப்போதும் ஒரே மாதிரி இருந்து விட்டால்/ இருக்க முடிந்தால் பிரச்சனை இல்லை. சந்தோஷம் வந்தால் கட்டுக்கு அடங்காமல் குதிப்பதும், துக்கமென்றால் செத்தவன் கையில் வெத்தல பாக்கை கொடுத்ததை போல இருப்பதையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எத்தனை முறை முயன்றாலும் முடிவதில்லை. அதுவும் தினமும் பார்க்கும் முகங்கள், தன் முகத்தைப் பார்த்ததும் உஷாரில்லை என்பதை அப்படியே கண்டு பிடித்து விடுகிறதுகள். கண்டுபிடிப்பதோடு விடாமல் கேட்கவும் செய்யும்போது ஏன் எல்லோரும் நாகரீகம் அற்று இருக்கிறார்கள் என்று தோன்றியது. அப்படி யாரும் கேட்காமல் விட்டால் தன்னை யாருமே கண்டு கொள்ள வில்லை, தனக்கு யாருமே இல்லை என்று சுய இரக்கத்தில் மருகுவது. இப்படிதான் நிறைய வேளைகளில் குளிருமற்ற வெப்பமுமற்ற ஒரு தன்மை தனக்கு. இத்தனையும் இருக்க,திடீரென்று தன்னை யாரும் பார்க்க கூடாமல் உலகமே இருண்டு விட்டால் நன்றாய் இருக்கும் என தோன்றியது. இன்றைக்கு தனக்கு யாருமே தேவை இல்லை என்று தோன்றத் துவங்கியது. இப்படி வாழ்க்கையே சூனியம் ஆகுமளவுக்கு என்ன நடந்து விட்டது என்றால் அப்படி ஒன்றுமே நடக்க வில்லை. காரணமற்ற மனப் பிராந்து தான் பிரச்சினையே.

மனசு முழுக்க இப்படி சூறாவளி அடிக்கும் நிலையில் உள்ளே போக விருப்பமில்லை சுபத்ராவிற்கு. அலுவலகத்திற்கு கொஞ்சம் முன்னாடியே ஆட்டோவை நிறுத்தச் சொல்லி இறங்கினாள். செல்போனையும் சுவிட்ச் ஆப் பண்ண நினைத்து அதற்கு முன் இன்றைக்கு அலுவலகம் வர தாமதமாகும் என்ற ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு கால் போன போக்கில் நடந்தாள். ஒரு கட்டத்தில் ரோடு முடிந்தது அந்த முக்கிலிருந்து நான்கு ரோடுகள் விரிந்தது. எப்படி செல்லலாம் என்று யோசிக்கையில் அங்கே ஒரு பால் பூத் இருந்தது தெரிந்தது. அங்கே சென்று ஒரு சாக்கோபார் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டாள். ஏன் அவளுக்கு அதை வாங்க தோன்றியது தெரியாது. ஒரு வேளை தினமும் செய்வதிலிருந்து மாறுபாடாக ஏதாவது செய்தால் அவளுக்கு மன மாற்றம் கிடைக்கலாம். அதை சாப்பிட்டுக்கொண்டே ஒரு தெருவை தெரிவு செய்து நடக்கையில் ஒரு வீட்டின் குட்டை கேட்டின் வழி அங்கே இருந்த தோட்டத்தை அவளால் பார்க்க முடிந்தது. அப்போதுதான் நீர் விட்டு இருக்கவேண்டும், ஈர மண், இலை இடுக்குகளின் வழியே நுழைந்து ஈரம் உறிஞ்சும் சூரியன். அவளை சுற்றிலும் யாரும் இல்லை. அப்போது அவளுக்கு உள்ளே நுழைய அத்தனை ஆவலாயிருந்தது. உள்ளே நுழைந்து செருப்பை கழற்றி ஒரு மதில் சுவரின் ஓரத்தில் விட்டு விட்டு வந்து, அந்த ஈரமண்ணில் தன் பாதத்தை பதிய வைத்துக் கொண்டு, செடிகளை ஒட்டி இருந்த சற்றே உயர்ந்த அந்த காரைத் திண்டின் மேல் உட்காரத் தோன்றியது. பார்த்துக் கொண்டே இருக்கையில் இலைகளுக்கு இடையே ஊடுருவும் வெளிச்சத்தின் பிரதிநிதியானாள் முதலில், பிறகு தானே வெளிச்சமானாள், பிறகு செடிகளின் கால்களைச் சுற்றிய ஈரமானாள். ஈரம் வட்டமாக சுருண்டு செடிக் கால்களுக்குள் ஊடுருவி வேருக்குள் மறைந்தது. அப்போது வண்டியை தள்ளிக் கொண்டு பழம் விக்க வந்தவர்களை, அவர்களின் பார்வைகளை தவிர்க்க வேண்டி மேலும் அங்கே நில்லாது திரும்பவும் நடக்கத் துவங்கினாள். தான் கைபேசியை சுவிட்ச் ஆப் செய்யாதது நினைவு வந்து அணைக்க எடுக்கையில் மிக சரியாக அழைப்பு வந்தது.

இவள் சுரத்தே இல்லாமல் பேச அவன் மறு முனையில் என்னாச்சு என வினவினான்.

எப்படியோ இருக்குது டா என்றாள் இவள்.

எப்படியோன்னா எப்படி இருக்குது?

அது தெரியாமதான எப்படியோன்னு சொல்றேன். அப்றோம் இதென்ன கேள்வி.

அதெப்படி எப்படியோ இருக்கும். என்ன மனநிலைல நீ இருக்கேன்னு கூட தெரியலையா உனக்கு.

ஆமா அப்டிதான் வெச்சுக்கோயேன்.

நீ என்ன லூசா?

ஆமா நான் லூசு தான். நான் பைத்தியம் தான் அதுக்கென்ன இப்போ.

நீ பயங்கரமா சண்டை போடற மூட்ல இருக்கே. எதுக்கும் நான் நாளைக்கு கூப்டறேன்.

பயந்துட்டியா? அதெல்லாம் சண்டை போட மாட்டேன் இன்னிக்கு.

அப்டியா?

ஆமா.

ஏன்?

ஏன்னா?

ஏன் சண்டை போடற மூட்ல இல்லேன்னு கேட்டேன்.

என்னதிது இப்போ இத்தனை கேள்வி. உனக்கே தெரியும் எனக்கு கேள்வி கேட்டா பிடிக்காது. அதிலயும் இத்தனை கேள்வி கேட்டே அவ்ளோ தான், இப்போ நான் பேசற மூட் ல இல்லே. நான் அப்றோம் பேசறேன்.

என்னாச்சு பா என்றான் அவன்.

போடா எனக்கு பேசப் பிடிக்கல.

என்கூட கூடவா பேச பிடிக்கல.
......
கேக்கறேன் இல்ல பதில் சொல்லு.
......
என்னாச்சு. பேசு எல்லாம் சரியாயிரும்.

என்ன சொல்வது. இது என்ன மனநிலை, காற்றின் போக்குக்கு உருண்டு கொண்டிருக்கும் காகித குப்பைகளைப் போல பிடிப்பற்று அலைகிற மனது. தொடர்ந்து ஒரே இடத்திலேயே சுற்றிகொண்டே எங்கேயும் நகராமல் முரண்டு பிடிக்கிறது. உலகத்தின் எல்லாக் குப்பைகளும், மணலும், துகளும் தன்மேல் ஒட்டிக் கொண்டிருப்பது போல ஒரு பிரமை வேறு பிடித்துக் கொண்டது அவளை. மனசெல்லாம் என்னென்னவோ எண்ணங்கள் வந்து சுழித்து சுழித்து அடிக்கிறது. இதை எதோடு ஒப்பிட்டு, எப்படி என புரிந்து கொள்ளவது. என்ன சொல்லி விளக்குவது. என்னென்னவோ கேள்விகள், குற்ற உணர்வுகள் என இன்னதென இனம் பிரித்துப் பார்க்க முடியாத சாத்தான்கள் உள்ளே புகுந்து கொண்டு ஆட்டம் போடுகிறது. இப்படி ஓராயிரம் உணர்வுகள் அலைகழிக்கையில் சொற்கள் தொலைந்து போதல் எத்தனை அநியாயம். என்னை எது என்ன செய்கிறது. இப்படியான நிலையில் தனக்கு தன்னை விட்டு விட்டு கண்ணுக்கு தெரிகிற பச்சயையோ,வானத்தையோ, முகிலையோ பார்த்துக் கொண்டிருப்பது தான் தோது படும். இந்த மாதிரியான சமயங்களில் எனக்கு நானே அன்னியமாகிப் போவேன். எனக்குள் நானே போக அஞ்சுவேன். இத்தனை வருடங்களாக அப்படிதான் இருந்திருக்கிறேன்.

இப்படியான நிலையில் அவளுக்கு என்ன நிகழ்கிறது என அறிந்து கொள்ள விளைகிற எண்ணத்தோடு அவன் எழுப்பும் கேள்விகளை சுபத்ரா சந்திக்க தயாராக இல்லை. இதே ரீதியில் யோசனைகளை தூண்டுகிற அவன் கேள்விகளை சந்திப்பது அவளுக்கு மிகுந்த கடினமாய் இருக்கிறது. மூளையின் மேல் ஏறி அமர்ந்து கொண்ட அந்த பாறாங்கல்லை என்ன முயன்றும் அவளால் தள்ள முடியவில்லை. மாறாக மூச்சுத் திணறல் வந்தது. அவனில்லாத முந்தைய பொழுதுகளில் எண்ண அலைகள் புரட்டும் நாட்களை ஏதாவது பாடல்கள் கேட்டுக் கொண்டோ, இலக்கில்லாமல் நடந்து கொண்டோ, நினைவுகளைக் கிளறிக் கொண்டோ, எதையாவது கிறுக்கிக் கொண்டோ கடந்து வந்திருக்கிறாள் அவள். எதையுமே யோசித்ததில்லை. சொல்லிக்கொள்ளாமல் வருவது போல அந்த மனநிலை சொல்லிக் கொள்ளாமல் போய்விடும். பிறகு அவளுக்கு தெரிந்த அவள் அவளிடமே திரும்பி வந்துவிடுவாள்.

ஏய் என்னாச்சு? ஏன் பேச மாட்டேன்ற?

அவளுக்கு பதில் சொல்ல உதடுகள் பிரியவில்லை. மாறாக கண்களில் நீர் துளிர்த்தது. அவளுக்கு தெரியும் இப்படியான நிலையில் அவள் தான் பேசி எத்தனை உறவுகளை இழந்திருக்கிறாள் என்று. தனக்கு அவள் எப்படி அன்னியமாகிப் போகிறாளோ அதே போல தன்னோடு எவ்வளவு நெருங்கி வந்த ஒருவரையும் தனக்கு யாரென்றே தெரியாததைப் போல அவளால் தள்ளி நிறுத்தி பேச முடியும். அவளிடம் அத்தனை உருகலும் பாசமும் நேசமும் இருந்த சுவடே தெரியாது அந்த நேரத்தில். தான் ஏன் இப்படி இருக்கிறோம் என்று தெளிவாய் இருக்கும் சில வேளைகளில் அவள் யோசிப்பதுண்டு. அவளுக்கு மனிதர்களை தான் அப்போது அறவே ஒதுக்க முயல்வது ஏன் என்பது பற்றி புரியவே இல்லை. தன்னை யாரும் தீண்ட முடியாத இடத்துக்கு ஏன் தன்னை நகர்த்துகிறாள் பிறகு அதற்காக ஏன் வருந்துகிறாள் என அவளுக்கு புரியவே இல்லை. எப்படி அவளால் ஒரே வாய் கொண்டு உருகி உருகி பாசத்தை பொழிய முடிகிறது, அதே வாய் கொண்டு எப்படி அவர்களை தூக்கி எறிய முடிகிறது என்று எவ்வளவு முயன்றும் கண்டு கொள்ள முடியவில்லை. எதுவுமே தன் கட்டுபாட்டில் இல்லாதது போல தோன்றியது அவளுக்கு. இனி மேல் யாரோடு பழகினாலும் ஒரு போர்டு மாட்டிக் கொள்ள வேண்டும், நாய்கள் ஜாக்கிரதை மாதிரி, நான் ஜாக்கிரதை போர்டு. பழகிய நாய் எந்த நேரத்தில் கடிக்கும் என்று யாருக்கும் தெரியாது அது போல தான், தான் என்று அவளுக்கு தோன்றியது. தெரு நாயை விட பழகிய நாய் கடிப்பது தான் வலி.

இந்த மௌனத்தை அவனால் கடக்கவே முடியவில்லை. இன்று ஏன் இப்படி இருக்கிறாள் இவள் என அவன் குழம்பினான்.

என்னாச்சும்மா என்றான்

தனக்கு இப்போது இருப்பது அவன் ஒரே ஒரு ஜீவன். அவனையும் விரட்டி விட்டால் தனக்கு யாருமே இல்லை என்ற உணர்வும் அவளுக்கு வந்தது. எப்படியும் தான் கடிக்கப் போவது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. இருந்தாலும் தவிர்க்க வேண்டி அவனிடம் அப்பறோம் பேசுகிறேன் என்றாள்.

அவனுக்கு பெரும் குழப்பமாய் இருந்தது. என்னவென புரிந்து கொள்ளும் வேகமும் ஆர்வமும் அவனுள் கேள்விகளாய் முளைத்தது.

இப்போ பேசப் போறியா இல்லியா என்றான்

எனக்கு இப்போ இந்த போனை போட்டு உடைக்க தோணுது.

என்னாச்சு, நீ இப்டி எல்லாம் பேசி நான் கேட்டதே இல்லை. எது உன்னக் கஷ்டபடுத்துது?

எனக்கிப்போ பேச பிடிக்கல. தயவு செஞ்சு போனை வெச்சுரு. இல்லேன்னா நான் உன்ன காயப் படுத்துவேன்.

அவனுக்கு சற்று பயம் வந்தது. தான் முந்தைய நாள பேசிய ஏதோ ஒன்று தான் அவளை காயப் படுத்தி இப்படி எல்லாம் பேச வைக்கிறது என்று நினைத்தான். நினைத்தான் என்பதை விட நம்பினான். இதற்கு முன்னும் இப்படி நடந்திருக்கிறது. இவளிடம் பிரச்சினையே எதையும் மனசை திறந்து பேசாததுதான். ஒரு ஆயிரம் கேள்வி கேட்டு குடைந்து தான் அவளை பேச வைக்க வேண்டும். எப்படியும் இன்று இதை வளர விடக் கூடாது. என்னவானாலும் இதை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

பரவால்ல பேசு. எது உன்ன ரொம்ப பாதிச்சது. நான் எதாச்சு தப்பா பேசிட்டேனா என்றான்.

இல்ல. நீ ஒண்ணுமே சொல்லல. நான் கொஞ்ச நேரத்துல சரியாயிருவேன். எனக்கு அப்போப்போ இப்டி இருக்கும். நான் கூப்டறேன் இன்னும் கொஞ்ச நேரத்துல.

இல்லே நீ சொல்லு என்னாச்சு உனக்கு. ஏன் இப்டி பேசறே? என்கிட்டே சொல்ல மாட்டியா. நான் சொன்னது ஏதோ தான் உன்ன பாதிச்சிருக்கு. ஏன் என்கிட்டே மறைக்கற?


அவள் எதையோ வேண்டுமென்றே மறைப்பதாகவும், வெளிப்படையாய் இல்லாதது போலவும் அவளை நம்பாமல் அவன் கேட்டது அவளுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுத்தது. அவள் எத்தனையோ முறை அவனிடம் சொல்லி இருக்கிறாள், தன்னை யாரும் இவ்வளவு நெருங்கி வந்ததில்லை என்றும், அவனிடம் மட்டும் தான் அவள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறாள் என்றும். அப்படி இருக்க ஒரு நிமிடத்தில் அவன் அத்தனையும் பொய்யென புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அப்படி அவளை கேட்டது அவளுக்கு மிகுந்த கோபத்தை கொடுத்தது.

நீ போன வைடா என கத்தினாள்.

ஒரு நிமிடம் அவனுக்கு ஒன்றுமே புரிய வில்லை. இவள் எப்போதும் தன்னிடம் குரலை உயர்த்திக் கூட பேசியதில்லை. இன்று எல்லாமே வேறாக, புதிதாக இருந்தது.

அவளுக்கும் தான் கத்தியது புரிந்தது. ஆனால் ஒரு நிலையில் அவள் இல்லை. கொஞ்ச நேரம் அங்கே மௌனம் நிலவியது.

மௌனத்தை உடைத்து அவன் மிகுந்த பதட்டத்துடன் கேட்கிறான். என்னாச்சு நீ ஏன் இப்டி பேசற. உனக்கென்ன பண்ணுது?

எனக்கு தெரியலையே எனக்கு என்ன நடக்குதுன்னு புரியாத இந்த நிலை என்னை எங்கேயோ இழுத்துப் போகிறது. எனக்கு பெருங்குரலெடுத்து கத்த வேண்டும் போல் இருக்கிறது. வியர்க்கிறது. என்னால் எதுவும் பேச முடியவில்லை. இப்படியாய் ஓடிய எண்ணங்களை தாண்டி அவளால் எதுவும் பேச முடியவில்லை. அவன் தன்னை தன் நிலையை தான் எதுவுமே சொல்லாமல் புரிந்து கொள்ள மாட்டானா என்று இருந்தது. இதற்கு மேல் எதுவும் கேளாமல் இப்படியே விட்டு விட மாட்டானா என்று இருந்தது.

சற்று ஆசுவாசமாக நான் உன்கூட இருக்கேன் சுபா, உனக்கு ஒண்ணுமில்லே என்கிறான்.

இப்போது அவளுக்கு அவன் தான் எல்லாம் என்று அவன் மேல் அத்தனை அன்பு பொங்குகிறது. அவன் தன்னோடிருக்கிறான் எந்த நிலையிலும் தன்னோடு இருப்பான் என்று நிம்மதி அடைகிறாள்.

மறுபடியும் கேட்கிறான் நீ பேசினா சரியாகும் சொல்லு.

ஐயோ இவன் மீண்டும் தன்னை பேச சொல்கிறான். அவளுள் வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறுகிறது.

எனக்கு எதுவுமே பிடிக்கல. யாரையும் பிடிக்கல. யாரோடையும் பேசவும் பிடிக்கல.

என்கூட கூடவா?

இந்த நேரத்திலா அவன் இந்த கேள்வியை கேக்கணும்? அவள் இல்லையென சொல்ல நினைக்கையிலேயே 'ஆமாம்' வெளியேறிவிட்டன வார்த்தைகள். இந்த சொல் அவனை நிச்சயம் காயப்படுத்தும் என தெரிந்தும் அது உண்மை இல்லை என புரிந்தும் அவள் அதை சொன்னாள். அவளுக்கு தன்னை மிக நெருங்கிய அவனை அப்போது காயப் படுத்த தோன்றியது ஏன் என தெரியவில்லை.

அவன் அந்த பதிலில் மிகுந்த அதிர்ச்சி அடைந்தான். அவனால் மீள முடியாது அங்கே ஒரு நீண்ட மௌனம் நீள்கிறது, பிறகும் அவன் நம்ப முடியாமல் மறுபடியும் உறுதிபடுத்திக்கொள்ள கேட்கிறான், என்னோடு கூடவா?

அவள் மறுபடியும் அதே பதிலை மிக தெளிவாக, உறுதியாக சொல்கிறாள். சொன்னதும் மனது உள்ளே கதறுகிறது ஐயோ என்னை இப்டி விட்டுட்டு போயிடாதேயேன் டா, இப்போது பேசுவது நானல்ல, என்னை பிடித்திருக்கும் எதுவோ ஒன்று, என்னை அதோடு விட்டுவிட்டு போயிடாதே. அவள் மனதின் குரல் அவனுக்கு கேட்கவில்லை.

அவன் நொறுங்கிப் போனான். தன்னோடு எப்படி எல்லா அளவளாவிய அவள், தான் தான் எல்லாம் என்றவளால் எப்படி இப்படி பேச முடிகிறது. தன்னை எப்படி ஒரே அடியாக தள்ளி விட முடிகிறது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அழுகையாக வந்தது.

அத்தனைக்கும் பிறகு அவன் சொன்னான் .சரி பாத்துக்கோ நாம அப்றோம் பேசலாம்.

அவளுக்கு எதுவுமே பேசாமல் அப்படியே அவன் தன்னோடு இருக்க மாட்டானா என்று இருந்தது.

இருந்தும் எதுவும் சொல்லாமல் ம்ம் என்றாள்.

மறுபடியும் வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு வைத்தான்.

ஓடிப் போய் அவன் கைகளை போக வேண்டாம் என்று பற்றிக் கொள்ள துழாவினாள், காற்றே மிஞ்சியது. பேச என உதடுகளை பிரிப்பது அவளுக்கு மிகுந்த சிரமமாயிருக்கிறது இப்போது. இந்நிலையை மௌனத்தாலேயே பகிரணும். அதற்கு அவன் இவள் அருகில் நேரில் வேணும். அது இல்லாத வெறுமை அவளை பைத்தியம் கொள்ள வைக்கிறது. அவளுக்கும் இயலாமையில் கண்கள் நீர் கோர்க்கிறது. இது வேறு ஒரு எரிச்சல், சட் சட்டென்று முட்டிக்கொண்டு வருகிற இந்த கண்ணீர் இனி அவ்வளவு தான். ஒன்றிரண்டாய் உதிரும் சொற்களும் அடைத்துக் கொள்ளும் தொண்டையிலேயே.

இவ்வளவு காயப் படுத்திய பிறகு தன் மேல் மிகுந்த எரிச்சல் அடைந்தாள். அவளுக்கு அவனிடம் கேட்கத் தோன்றியது. உனக்கு இப்படி இருந்ததே இல்லையா. காரணங்கள் இல்லாத சோகம், அழுகை. இதை புரிந்து கொள்ள முடியாமல் நீ கேள்விகளால் குடைகிறாய். ஆனால் நீ கேட்காமலும், நான் சொல்லாமலும் உனக்கெப்படி புரியும்.

அவன் வைத்து விட்டான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் உடைந்து போனான் என்பது இவளுக்கு புரிந்தது.
இப்போது காற்று அவள் முகத்தில் மோதுகிறது அவள் அப்படியே அமர்ந்திருக்கிறாள். ஒரு சில நிமிடங்களில் அவளுக்குள் பதபதைப்பு அவனை இப்படி காயப் படுத்தி விட்டோம் எப்படி சரி செய்வது. அவளுக்கு வேறெல்லாம் மறந்து விட்டது. அவன் மிகுந்த பாதிப்படைந்து விட்டான். தன்னை விட்டுப் போய்விடுவான் என்று ரொம்பவும் பயந்தாள். என்ன விட்டுட்டு போயிடாதடா, என் கூடவே இரு, எனக்கிப்போ தேவை எல்லாம் உனக்கு ஒண்ணுமில்ல மா நான் இருக்கேன் என்கிற உன் வார்த்தைகள் தான் அதை சொல்லேன் அதை மட்டும் சொல்லேன் என கெஞ்ச வேண்டும் போல் இருந்தது.

தன்னிச்சையாய் நடந்து அலுவலகம் வந்தாள். இந்த இடைவெளியில் அவன் இவளுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தான்.

சுபா நீ இப்டி இருக்கற என்னால பாக்க முடியல சுபா, இது உன்னோட இயல்பே இல்ல, அட்லீஸ்ட் நீ என் கிட்ட எல்லாத்தையும் மனச விட்டு பேசிடற விதமா தான் நாம பழகியிருந்திருக்கோம், நீ இப்டி இருக்கறது என்னை ரொம்ப கஷ்டப்படுத்துது, எனக்கு அழுகை தாங்க முடியாம வருது சுபா, நீ கஷ்டப்படறத பாக்க முடியல சுபா, நீ சந்தோஷமா இருக்கனும் சுபா எப்பவும் சிரிச்சிகிட்டே என் சுபாவா எப்பவும் சிரிச்சிகிட்டே இருக்கனும் சுபா, எதுவா இருந்தாலும் மனசவிட்டு பேசு சுபா சரியாயிடும், எனக்கு இப்போ உன்கூட பேசிட்டே இருக்கனும் போல தான் மனசு அடிச்சிக்குது, உன்னை பேசி சரிப்படுத்திட முடியும் அப்டின்னு நினக்கறன், ஆனா நீ என்னைக்குமில்லாம இன்னைக்கு இந்த தருணத்துல யார் கூடவும் என் கூடவே பேச விருப்பமில்லன்னு சொல்றே, இது எனக்கு கஷ்டமா இருக்கு சுபா, நீ என்னைக்குமே இப்டி இருந்ததில்ல என்கிட்ட, உனக்கு என்ன ஆச்சின்னு எனக்கு தெரியல, நான் உன் பக்கத்துல இருக்ககனும் னு நினக்கறன் இந்த நாள், நான் எதுவும் பேசலன்னா கூட உனக்கு ஆறுதலா உன் பக்கத்துல அமைதியா இருக்கனும னு நினக்கறன் சுபா, ரொம்ப கஷ்டமாயிருக்கு சுபா உன்னை இப்டி பாக்கறது, என்னால தாங்க முடியல சுபா, நான் எதாச்சு உன்னை காயப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடு சுபா தயவு செஞ்சி, சுபா நான் எதயுமே உன்னை கஷ்டபடுதனும்ன்னு பேசவோ செய்யவோ மாட்டன் சுபா, சும்மா விளையாட்டுக்கு தான் பேசியிருக்கன், சுபா நீ பேசு சுபா என்ன பிராபளம் னு, என்னால சரி பண்ண முடியுமா ன்னு சுபா ப்ளீஸ்

படிக்க படிக்க அழுது கொண்டே படித்தாள். அவளுக்கு அவனை இறுக கட்டி பிடித்து அழணும் போல் இருக்கிறது. இத்தனை அன்பானவனை ஆறுதலாய் இருப்பவனை எப்படி காயப் படுத்திவிட்டேன் பார். ஐயோ நான் ஏண்டா இப்டி இருக்கேன். எனக்கொருவேளை பைத்தியம் பிடிச்சுருச்சோ. எனக்கு யாருமே இல்லடா உன்னைத் தவிர இப்போ. நீயும் என்ன விட்டுப் போயிடாதடா. அவளுள் ஆற்றாமை பொங்கி பொங்கி வருகிறது. அவனை அழைக்கிறாள்.

சொல்லு சுபா எப்படி இருக்கு இப்போ?

ம்ம் இப்போ கொஞ்சம் பரவால்ல.

ம்ம்.
...
நான் உனக்கு மெயில் பண்ணேன்.

ஆமாம் கண்ணா பார்த்து உன் அன்பில் செத்தே போனேன்னு சொல்ல நினைத்தாலும் வார்த்தைகள் 'ம்ம் பார்த்தேன்' என்றே வெளி வந்தது. உணர்வுகளை சரியாய் சுமக்காத, நேரத்திற்கு கைவராத வார்த்தைகளைக் காட்டிலும் மௌனம் பெரிதே என நினைக்கிறேன். ஆனால் மௌனம் இப்போது சரியல்ல அது கொன்றுவிடக் கூடும் என்றும் அஞ்சுகிறேன். எப்படி தான் செய்ததை சரி செய்வது என்பதை சுற்றியே அவளின் எண்ணங்கள் சுழன்றது. சரியான வார்த்தைகள் கிடைக்காது தவித்தாள்.

சொல்லு சுபா.

தேம்பி தேம்பி அழத் துவங்கினாள்.

Thursday, June 16, 2011

அதீத மயக்கம்

நெடுநேரம் போராடி
நடுநிசியில் துய்த்த அவளுக்கு
அவனும்
நீராடியும் வடிந்திராத அவனுடற் சூடும்
கலைந்த சிகையும்
மதுவுண்டு சிவந்த விழிகளும்
அதை மறைக்காத இமைகளும்
காதோரம் இறைக்கும் நாசியும்
கிளர்த்தும் மீசையும்
சூழ்ந்த புகைக்கிடையில்,
சற்றே நடுங்கும் உதடுகளும்
அது கொடுத்த புகை முத்தமும்
அதன் சுகந்தமும்
இதழ் கடித்த பற்களும்
அதை தடவும் நாவும்
தன்னை சுமந்த மார்பும், அங்கே குருமுடிகளும்
விரல் துளைக்கும் விரல்களும்
கால் பின்னும் கால்களும்
துவங்கும் மிதமும்
வெடிக்கும் வேகமும்
முனகும் மோகமும்
கொடுத்த விழிப்பை
ஊளையிட்டு சபித்தன
உறக்கம் பிடிக்கா நாய்கள்

Thursday, June 2, 2011

பயணங்கள் முடிவதில்லை

அது என்னவோ தெரியவில்லை ஒரு காட்டை பார்த்துவிட்டால், ஓவியத்திலோ, புகைப்படத்திலோ அது எங்கேயானாலும் சரி பட்சியாகி விருட்டென்று அங்கே பறந்துவிடுகிறது மனது. அது மனதா, ஆத்மாவா,உயிரா,உள்ளா எதுவோ, ஆனால் நம்முள் உயிர்த்துக் கொண்டிருக்கும் ஒன்று. பறப்பது என்றால் பறப்பதே தான். ஒரு காடு காணக் கிடைக்கையில் புலன்கள் கூர்மையாகிறது. அப்பொழுது உணர்வதற்கு உடலெனும் ஊடகம் தேவைப் படுவதில்லை. அடர் இருள் கானகமோ, வெயில் சுமந்த காடோ, அருவி நனைக்கும் காடோ அந்தக் காட்சிக்கேற்ப ஆத்மாவால் அப்படியே இருளை, வெயிலை, குளுமையை உணர முடிகிறது. ஒரு நிமிடம் காடுகளை சுமக்கும் தொடர் மலையென அமைதி காக்கும் ஆத்மா, அடுத்த நிமிடம் எதற்கோ பறவையின் மிரளும் கண்களோடு காட்டிலேயே அடர்ந்து உயர்ந்த மரம் ஒன்றுக்குள் சென்று ஒளிந்துகொள்கிறது. என்னுள் தற்போது இருக்குமாத்மா ஒருவேளை காட்டுக்குள் அற்ப ஆயுளில் இறந்துபோன ஒரு பறவையின் ஆத்மாவாக இருக்கலாம். அதனால் தான் காடு பெரும் போதையாய் உள்ளிறங்குகிறது. இப்படி பைத்தியம் பிடித்துக் கொண்டிருந்த ஒரு தினத்தில் எனக்கொரு அழைப்பு வருகிறது, காட்டுக்குள் இரவு பயணம் வர விருப்பமா?

இரு தினங்களாகவே அப்படி ஒரு எதிர்பார்ப்பு. காட்டுக்குள் இரவு பயணம் இது இரண்டாவது முறை. முதலில் சென்றிருந்தாலும் அது கொஞ்ச தூரம் தான். இப்போது பயணம் முழுக்க இரவில் தான். நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. பயணத்திற்கு வேண்டியவைகளை தயார்படுத்திக் கொண்டிருந்தோம். பயண நாள் வேனுக்காக எம் ஜீ ரோடு லைப் ஸ்டைல் முன்னே காத்திருக்கையில் பெரிய பஞ்சு மிட்டாய் ஒன்றை வாங்கிக் கொண்டோம். தித்திப்பாய் இருந்தது. பிறகு கீது அவளுடைய ஆதர்ஷ சுட்ட சோளத்தை வாங்கி காரத்தில் ஸ் ஸ் என்று கொண்டே கொறித்தாள். மிக சரியாக ஒன்பது நாற்பதிற்கு வேன் வந்தது. நானும் கீதுவும் டிரைவருக்கு இடப்பக்கம் இருந்த இரண்டாவது சீட்டில் அமர்ந்தோம். கடைசீயாக எங்கள் மூவரை ஏற்றிக் கொண்டு வேன் பெங்களூரை விட்டு மைசூர் ரோட்டில் சென்றது. வேனில் எல்லோருமே சிறு சிறு குழுவாக இருந்தார்கள். பத்து பன்னிரண்டு வயதில் இரு சிறுவர்கள் கூட இருந்தார்கள். இந்தப் பயணத்தை ஒட்டிய அவர்களின் எதிர்பார்ப்புக்கு சற்றும் குறைந்ததல்ல என்னுடையது.

செல்லும் வழியில் ஓரிடத்தில் நிறுத்தி இரவு உணவை ஒரு குழு முடித்துக் கொண்டது. வேன் உள்ளே ஆங்காங்கே ஆங்கிலத்தில் தோய்த்த தமிழ் குரல்கள் கேட்டது. வாகனத்தின் ஹெட் லைட் வெளிச்சம் இருளை கொஞ்சமே கொஞ்சம் ஊடுருவி விரைந்தது. மெயின் ரோட்டில் இருந்த பாதை பிரிந்த இடத்தில் மலைவாழ்/காடுவாழ் மக்களின் சிறு வீடுகள் இருப்பது தெரிந்தது. இப்பொழுது சிறு பாதையில் வாகனம் செல்கையில் ஒரு சுமைதாங்கிக்கல் மேல் வெளிச்சம் விழுந்தது. அங்கே ஒரே ஒரு பெண் மட்டும் அமர்ந்திருந்தாள். அதுவும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள். இங்கிருந்துதான் சுவாரசியம் துவங்கியது. அந்த பெண் வெள்ளை சேலை உடுத்தி இருக்காவிட்டாலும் கண்களுக்கு முதலில் புலப்பட்டது அவளது விரிந்த கூந்தல்தான். அந்த வேளையில் வாகனம் வருகிறதென்ற சிறு துணுக்குறல், திரும்பிப் பார்க்கும் ஆர்வம் கூட இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தது வெகு விநோதமாய் இருந்தது. ஒரு வினாடி வாகனத்துள் பெரும் அமைதி நிலவியது. ஒரு குரல் கோஸ்ட் என்றது மறு நொடி எல்லோரும் ஒரு சேர சிரிக்கத் துவங்கினோம். அன்றிரவு தங்கள் தங்கள் குழுக்களுக்கு வெளியாய் எல்லோருமாய் சேர்ந்து நடத்திய முதல் கூட்டு சம்பாஷனை அந்த சிரிப்பு.

சரியாக பனிரெண்டு மணிக்கு இடத்தை அடைந்தோம், வாகனம் நின்றது. சற்று முன் மலையும் கோவிலின் நுழை வாயில் கதவும் தெரிந்தது. கைடு எல்லோரையும் வாகனத்தை விட்டு இறங்க சொன்னார்கள். பேக்கை எடுத்துக் கொள்ள வேண்டாமா என்று கேட்டோம். இப்போது எடுக்க வேண்டாம் நான் சொல்கிறேன் கீழே இறங்குங்கள் என்றார். பேக் இல்லாமல் எப்படி என்று குழம்பிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கீழே இறங்கினோம். வெளியே கும்மிருட்டு. வாகனத்தின் உள்ளே இருந்த வந்த வெளிச்சம் ஒருவர் மேல் ஒருவரை இடித்துக் கொள்ளாமல் காப்பாற்றியதே தவிர முகங்களை காட்டிக் கொடுக்கவில்லை. கைடு அவர் பெயர் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டு இன்னொரு கைடையும் அறிமுகப் படுத்தினார். பெயர்களைத் தவிர இருவருக்கும் பெரிய வித்யாசம் தெரியவில்லை. எங்களை, எங்களால் ஒரு வட்டம் உருவாக்கச் சொன்னார். கலைந்து கிடந்த எல்லோரும் இப்படியும் அப்படியுமாய் நகர்ந்து வட்டமானோம். ஒவ்வொருவராய் அறிமுகப் படுத்திக் கொள்ள சொன்னார். இந்த இருட்டுல போய் என்ன அறிமுகம் என்று நான் நினைத்தேன், யாரோ கேட்டார். பரவால்ல பெயரை தெரிந்து கொள்ளலாம் என்றார். ஒவ்வொருவராய் அறிமுகப் படுத்திக் கொண்டோம். கூட்டத்தில் ஒருவர் டார்ச்சை அறிமுகப் படுத்திக் கொள்ளும் ஒவ்வொருவர் மீதும் அடித்தார். அவர் முறை வந்தபோது தெரிந்தது அந்த சிறுவர்கள் அவரோடு தான் வந்திருக்கிறார்கள். அவர் பெயரை சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டே இந்த சிறுவர்கள் காட்டுக்குள் தொலைந்து போனால் தயவு செய்து என்னிடம் கூட்டி வந்து விடுங்கள். ஏனென்றால் இவர்கள் என் மைத்துனர்கள் பிறகு என் மனைவிக்கு பதில் சொல்ல முடியாது. ஐ கேன்'ட் டேக் சான்செஸ் வித் தெம் என்றார். எல்லோரும் சிரித்தார்கள். ஒரு சற்றே பெரிய குழு க்ரைஸ்ட் காலேஜில் இருந்த வந்திருந்தார்கள். பொதுவாகவே இள வட்டங்களின் குதூகலமும் உற்சாகமும் பிடிக்கும் என்றாலும் இம்மாதிரியான இயற்கை பயணங்களில் அமைதியாக இருக்கவே விரும்புவேன். கல்லூரி மாணவர்கள் இருக்கும்போது இந்த பயணம் எப்படி இருக்கும் என்பதாய் ஒரு சிறு அசௌகரியம் தோன்றியது. தற்போது ஒருவழியாக முப்பத்தி இரண்டு பேரின் அறிமுகமும் முடிந்தது.

இப்போது கைடு நான் உங்களை ஒரு மணி நேர பயணமாக காட்டுக்குள் கூட்டி செல்லப் போகிறேன். பிறகு திரும்பி வந்து உங்கள் பைகளை எடுத்துக் கொண்டு மலை ஏறலாம் என்றார். ஒரு டார்ச் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். ஏதாவது புலி சிங்கம் காட்டுக்குள் இருக்குமா என்று யாரோ கேட்டதற்கு ஆமா முப்பத்திரண்டு புலிகள் இருக்கின்றன என்று கைடு சொன்னார். எல்லோரும் சிரித்தபடி வாகனத்திற்குள் ஏறி தண்ணீரும் டார்ச்சும் எடுத்துக் கொண்டு திரும்பினோம். முந்தின இரவு பெய்த மழையில் மண் இன்னுமே ஈரமாக இருந்தது. கடைசியில் யாரும் தனியாக பின் தங்கி விடாதீர்கள் தொடர்ந்து நடங்கள் என்றபடி அவர் முன்னே நடக்க அது பெரிய பாதை இல்லாததால் எல்லோரும் பிரிந்து அவர் பின்னே நடந்தோம். விறுவென நடந்து போகும்போது ஆங்காங்கே பறவையின் சிறகுலர்த்தல் சத்தம் போல் கேட்டது. கல்லூரி மக்கள் கொஞ்சம் உரக்க பேசியதாலோ என்னவோ வேறு மென் ஒலிகள் கேட்கவில்லை. தொடர்ந்து நடந்து ஒரு இடம் அடைந்தபிறகு எல்லோரும் வந்து சேரும் வரை அங்கே அமர்ந்தோம். பிறகு திரும்ப நடக்கத் துவங்கினோம். இந்த பயணத்தில் ஒரே இடத்தில் சற்று நின்று நிலவைப் பாரதத்தை தவிர பெரிதாக எதுவும் ஈர்க்கவில்லை. அங்கே ஒரு பத்து நிமிடமேனும் தனியாக எந்த சத்தமும் இல்லாமல் கும்மிருட்டுக் காட்டை பார்த்து கொண்டிருந்திருந்தால் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும். திரும்பி வாகனத்தை வந்தடைந்தோம். என் ஜெர்கின் முழுக்க நனைந்து விட்டிருந்தது. உள்ளே சென்று அவர்கள் கொடுத்த ஸ்லீபிங் பாக் மற்றும் எங்களின் பாக் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து ஒரு மரத்தின் சுற்றுசுவரில் எல்லோரும் கூடும் வரை அமர்ந்தோம்.

எல்லோரும் வந்ததும் கோவில் நுழை வாயில் வழியாக மலை ஏறத் துவங்கினோம். மலையில் ஒரு கோவில் இருந்ததால் படிக்கட்டுக்கள் இருந்தது. கொஞ்ச தூரம் போனதும் என்னால் ஏற முடியவில்லை கொஞ்சம் ஓய்வெடுத்து பிறகு நடந்தோம். யாரோ ஒருவர் இன்னும் எவ்ளோ தூரம் என்று கேட்க இன்னும் ஒரு மணி நேரம் என்றார். சொல்ப கம்மி மாடி (கொஞ்சம் கம்மி பண்ணிக்குங்க) என்றதும் சிரிப்பு வந்தாலும் ஒரு மணி நேரமா என்று தோன்றியது . சுத்தமாக நடக்க முடியவில்லை வியர்த்துக் கொட்டத் துவங்கியது. நிஜமாகவே கொட்டத் துவங்கியது. கொஞ்ச தூரம் ஏறியதும் திரும்ப என்னால் ஏற முடியாததால் ஒரு படியில் அப்படியே அமர்ந்தேன். ராஜும் கீதுவும் ப்ரூட்டி குடிக்க சொல்லிக் கொடுத்தார்கள். அது குடித்ததும் சற்றும் தெம்பு வந்ததென நம்பிக்கொண்டு ஏறக்குறைய படிகளை தாவிக் கடந்தேன். பிறகு மறுபடியும் ஓயும் நிலையில் படிகள் முடிந்தது. படிகள் முடிந்ததும் என்னால் மலைப் பாதையில் ஏற முடிந்தது. கிட்டத்தட்ட இடத்தை நெருங்கிய நிலையில் ஒரு பெரிய குன்றை ஏறிக் கடந்து உச்சியை அடைய வேண்டும். அங்கே படிகள் இல்லை பாதிப் பாதங்கள் மட்டும் பதியும் வகையில் மலையில் குழி பறித்திருந்தார்கள். எனக்கு ஏறி வந்ததில் கால்கள் திறனிழந்து நடுங்கத் துவங்கி இருந்தது. இதில் எப்படி அல்லையில் இருக்கும் கடப்பாரைகளைப் பற்றிக் கொண்டு படி கூட அல்லாத குழியில் கால் ஊன்றி நடப்பது என்று பயமாக இருந்தது. அதில் எச்சரிக்கை பலகை வேறு இருந்ததை பார்க்கையில் ஒரே ஒரு முறை கிளம்புவதற்கு முன் மகளை கடைசியாக பார்த்து வந்திருக்கலாம் என்று தோன்றியது. மேலே ஏறி உச்சியில் நின்று கொண்டிருந்த கைடு பார்த்து வாருங்கள் ஏறும் போது கீழே பார்க்க வேண்டாம் என்றார். முதலில் கீது ஏறினால் அவள் பின் நான் சென்றேன். ராஜின் டார்ச் கொஞ்சம் வழி காட்டியது. எனக்கு இதை ஏறுவது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. இருட்டில் இடது பக்கமிருந்த பள்ளத்தாக்கு பெரிதாய் பயமுறுத்த வில்லை. எல்லோரும் உச்சியை அடைந்தோம். கைடு காலையில் நான்கு மணிக்கு கீழிறங்க வேண்டும் என்றார்.

நாங்கள் ஸ்லீபிங் பாக்கை பிரித்து விரித்தோம். ஜெர்கின் நனைந்து விட்டிருந்ததால் குளிரத் துவங்கியது. எடுத்து வந்திருந்த பிஸ்கட் கொஞ்சம் கொறித்து விட்டு கீது உறங்கினாள். நானும் படுத்தேன் சிறிது நேரத்தில் எனக்கு தாங்க முடியாது குளிரியது. குறுகிக் குறுகிப் படுத்தாலும் முடியவில்லை. முதலிலெல்லாம் எத்தனை முறை மழையில் நனைந்திருக்கிறேன். ஒரு முறை கல்வீராம்பாளையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பல்கலைக் கழகம் வரை நானும் காயுவும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து கொண்டே சென்றிருக்கிறோம். அப்போதெல்லாம் குளிர் ஒரு பொருட்டாகவே இல்லை. இப்போது தாங்க முடியும் என்று தோன்றவில்லை எழும்புக்குள் வரை குளிர்ந்தது. யாரோ பேசிக் கொண்டிருந்ததுபோல் கேட்டது. எனக்கும் கீதுவோடு பேசிக் கொண்டிருந்தால் நன்றாய் இருக்குமென்று தோன்றியது.

ஒரு கட்டத்தில் உண்மையாகவே இங்கு வந்தது பெரிய பிழை போலும் அதுவும் நேத்ராவை பார்க்காமல் வந்தது மிகப் பெரிய பிழை என்று இப்போது பார்க்காமலே போய் விடப் போகிறேன் என்றும் தோன்றத் துவங்கியது. உளவியலில் ஏதாவது கை கொடுக்குமா என்று எனக்கு மிக அருகில் திகு திகு வென்று நெருப்பு எரிவது போல் கற்பனை செய்து கொண்டேன். குச்சிகள் உடைக்கும் சத்தம் நெருப்பின் சத்தம் எனக்கு காதுக்கு உண்மையில் கேட்கத் துவங்கியது. நிஜமாகவே திரும்பி பார்த்தேன் அப்படி ஒன்றும் இருக்கவில்லை. ஏற்கனவே கைடு மழையில் விறகுக் குச்சிகள் நனைந்து விட்டிருந்ததால் நெருப்பு போட முடியாது என்றிருந்தார்.பிறகு ஒரு சில நிமிடங்கள் எதுவும் பயனளிக்கவில்லை எழுந்து திரும்பிப் பார்த்தேன். கல்லூரிக் குழு கேம்ப் பையர் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். முதன் முறையாக நல்ல வேளை இவர்கள் வந்தார்கள் என்று அவர்கள் வருகை அவ்வளவு பிடித்தது. உடனே எனக்கு அங்கே ஓடத் தோன்றியது. கீதுவை எழுப்பினேன் அவள் எழவில்லை, ராஜை எழுப்பினேன் அவனும் எழவில்லை. மறுபடியும் கீதுவை எழுப்பி எனக்கு குளிருது வா அங்கே போகலாம் என்றேன். அவள் எழுந்தால் நாங்கள் இருவரும் அங்கே சென்று நின்றோம். பாதி பேர் சுள்ளி பொறுக்கிக் கொண்டு வந்து நெருப்பில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.அது நனைந்திருந்ததால் மெதுவாகவே எரிந்தது. அறை மணி நேரம் அப்படியே நின்றேன் உயிர் வந்தது.

திரும்பி வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தோம். பிறகு படுத்ததும் உடனே நான்கு மணி என்று கைடு எல்லோரையும் எழுந்துக்கச் சொன்னார். நாங்கள் முதலில் எழுந்து இறங்கத் துவங்கினோம். கால்கள் இப்போது வலிக்கத் துவங்கி இருந்தது. அந்தக் குன்றை கவனமாகக் கடந்து எல்லோரும் இறங்கட்டும் என காத்திருந்தோம். எல்லோரும் வந்ததும் கீழே நடந்து வந்து வாகனத்தை அடைந்தோம். கீழிறங்குவது கடினமாக இருக்கவில்லை. பிறகு இன்னொரு பாறைக்கு வாகனத்தில் அழைத்து சென்றார்கள். அங்கே ரேப்பெல்லிங் இருந்தது. கயிறை பிடித்துக் கொண்டு ஒவ்வொருவராக மலையில் இருந்து கீழே இறங்க வேண்டும். நிறைய நேரம் பிடிக்கும் என்பதால் நாங்கள் மூவரும் அங்கே ஒரு சிறு குட்டைக்கு அருகே செல்லலாமென சென்றோம். சுற்றிலும் மாந்தோப்புகள் இருந்தது. மாங்காய்கள் கண்ணை பறித்தது.ராஜை சென்று பறித்து வர சொன்னேன். அவன் பறித்து வந்தான். அவன் மேலேறி வந்ததும் ஒரு தாத்தா வந்து ஏதோ சத்தம் போட்டார். அதற்குள் அவன் மாங்காய்களை என் கையில் கொடுத்து விட்டு மறைச்சு வெய்யுங்க என்றான். அடப் பாவி என்று நினைத்துக் கொண்டு ஒரு குட்டி பாறைக்கு பின்னால் வைத்து விட்டு வந்து அமர்ந்தேன். அவர் கீழேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு பறித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது.

கொஞ்ச நேரம் அங்கே அமர்ந்திருந்து விட்டு திரும்பினோம். எல்லோரும் மலை இறங்கியதும் கீத்து கடைசியாக சென்று வந்தாள். பிறகு எல்லோரும் வாகனத்தில் ஏறினோம். மிக சோர்வாய் இருந்தது. அப்படியே உறங்கத் துவங்கினோம்.

Friday, May 13, 2011

ஒற்றைச் செம்பருத்தி

மையிட்டு, மலர் சூடி
உறங்குவதற்கு முன்
உறக்கத்தின் இடையில்
உறங்கி எழுந்ததும்

என எத்தனை கனவுகள்
அப்போதெல்லாம்

தொலையுமெனில்,
கலையுமெனில்,
எல்லாமே எல்லாமே
எல்லாமே எதற்கு?

வாசச் செடியில்
ஒற்றைச் செம்பருத்தி
அதனாலென்ன
இருந்துவிட்டு போகட்டும்

அடுக்களை ஜன்னலைத்தான்
திறப்பதேயில்லை
அந்தப்புரம் ஜோடிப் புறாக்கள்

Saturday, May 7, 2011

இறுக்கம் கழைந்து

மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந்து விழுந்த கேள்வியை எதிர்கொள்ள அவகாசம் வேண்டி இறுக்கமென எதை சொல்கிறாய் திருப்பி அவளிடமே கேட்டேன். ஒரு நேசத்தை வெளிப்படுத்த ஏன் இத்தனை தயங்குகிறோம், நேசம் மட்டுமல்ல எல்லா உணர்வுகளையுமே ஏன் இப்படிக் கட்டுப் படுத்திக் கொண்டு இறுகிக் கிடக்கிறோம். இலகுவாக எதையும் வெளிப்படுத்த ஏன் அஞ்சுகிறோம். இப்படி எங்கேயோ பார்த்துக் கொண்டு கேட்ட தொடர்ச்சியான கேள்விகளை அவள் உரக்கச் சிந்திக்கிறாள் என்று ஒன்றும் பேசாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டு என் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

இந்தப் படத்தின் ஏதோ ஒரு காட்சி தான் அவளை பாதித்து இந்த ரீதியில் சிந்திக்கத் தூண்டி இருக்கும் அது எதுவாய் இருக்கும் என்று தனி கோட்டில் அலையத் துவங்கிய மனதை அவள் என்னை பார்த்துக் சொன்ன அடுத்த வாக்கியம் திருப்பிக் கொண்டுவந்தது. நீ கூடத் தான் அப்படி இருக்கிறாய் என்றாள். எதை வைத்து சொல்கிறாய் கேட்டுவிட்டு எது என்று தெரிந்து கொள்வதற்கு முன்னேயே பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியாய் அப்படி இல்லையென எப்படி நிரூபிப்பது என்பதாய் மனம் சிந்திக்க துவங்கியது. அவள் என் கேள்வியில் ஆர்வமில்லாமல் நான் கூடத்தான் அப்படி இருக்கிறேன் என்றாள். துரித கதியில் சென்று கொண்டிருந்த மனம் சற்று நிதானமாகி அவள் என்ன சொல்கிறாள் என்று கவனிக்கத் துவங்கியது. தனியாக குற்றம் சாட்டப் படும்போது வருகிற பதற்றம் நானும் கூட இருக்கிறேன் எனும்போது ஆசுவாசம் அடைகிறது. குற்றம் என்பதை விட வரவேற்கப்படாத ஒரு செயல் அல்லது பழக்கம். எப்போதுமே பிடித்தமானவர்களின் குட் புக்ஸில் இருப்பதைத்தான் விரும்புகிறோம். யார் என்ன நினைத்தால் என்ன இது தான் நான் என்று வெளிக்காட்டிக் கொள்கிற தைரியம், தெளிவு எப்போதும் கூடவே இருப்பதில்லை.

திடீரென்று அனு, ஜூலியட்டைப் பாரேன் ஒரு பறவை போல் இருக்கிறாள் என்றாள். ஜூலியட் எங்கள் பல்கலைகழகத்திற்கு வந்திருக்கும் கேரளத்துப் பெண். இதுவரை பேசியதற்கு சம்பந்தமே இல்லாமல் அவளைப் பற்றி எதற்கு பேசுகிறாள் என்று தோன்றியது. இவள் இப்படிதான் ஒரு விசயத்திலிருந்து மற்றொரு விசயத்திற்கு தாவி விடுவாள். சில சமயம் சுவாரஷ்யமாய் இருக்கும் சில சமயம் எரிச்சலாய் இருக்கும். எங்கேயாவது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் முடிச்சிருக்கும் ஒரு கட்டத்தில் அவிழும்போதுதான் எதற்கு சொல்கிறாள் என்று புரியும். ஜூலியட் என்றதும் எனக்கு அவள் ஒரு நாள் ரூமில் திருட்டு தம்மடித்து கொண்டிருந்தது நினைவில் வந்தது. பயப்படாம தம்மெல்லாம் அடிக்கறா அதனால சொல்றியா என்றேன். நீயும் எல்லோர் மாதிரியுந்தான் அவளைப் பாக்கற எனக்கு இப்போ ஜூலியட் வேற மாதிரி தெரியறா என்றாள். வேற மாதிரின்னா? ஒரு வகையில் அவள் ஒரு தேவதை போலவும், பல வண்ணப் பட்டாம்பூச்சி போலவும், பறவை போலவும் இப்படி எல்லாம் என்றாள். ஏன் திடீர்ன்னு என்றேன்? நான் நிறைய நாள் அவளைப் பாத்திருக்கேன். ஏன் தேவதைன்னு சொல்றேன்னா, அந்த தாத்தா இருக்காரில்ல தகர வீட்டு தாத்தா என்றாள். நாங்கள் தினமும் நடக்கும் வழியில் நாலு தகர சுவர்கள் அமைந்த போன் பூத்தை ஒத்த தகர வீட்டில் ஒரு கண் தெரியாத தாத்தா இருப்பர். அவரை பார்க்கும் போதெல்லாம் எங்கள் மனம் மிகுந்த சங்கடம் கொள்ளும் ஆனால் ஒரு நாள் கூட அவரோடு பேசியதில்லை. அந்த தாத்தாவுக்கு என்ன என்பது போல் அனுவைப் பார்த்தேன். இன்று வகுப்பு முடிந்து வருகையில் ஜூலியட் தாத்தா கையை பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள். நமக்கு ஒரு நாள் கூட அவர்கிட்ட பேச தோணல இல்ல, உபயோகமில்லாத பரிவு அவசியமில்லாதது இல்லையா என்றாள். சட்டென நினைவு வந்தது போல் மஞ்சு கூப்ட்டா அப்போவே என்னன்னு கேட்டுட்டு வந்தர்றேன் என்று சென்றேன்.

எங்கள் அறைக்கு நேர் எதிர் அறைதான் மஞ்சுவுடையது என்றாலும் நேருக்கு நேராய் போக முடியாது. தொட்டி வீடு போல இது தொட்டி விடுதி. வட்ட வடிவம் போல் இருக்கும் விடுதியில் எல்லார் அறைக்கு முன்னேயும் சுற்று கைச் சுவர் இருக்கும். இடையில் வட்டமாய் இருக்கும் வெற்று இடத்தில் செம்மண் போட்டு தோட்ட தாத்தா நிறைய செடிகள் வைத்திருப்பார். அதன் மத்தியில் தான் நடை பாதை இருக்கும். நான் சுற்றிக்கொண்டு மஞ்சுவின் அறை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். மஞ்சுவும் நானும் ஒரே துறை. அவள் அறையில் எப்போதும் என் துறைத் தோழிகள் இருந்து கொண்டே இருப்பார்கள். அவள் சகஜமாக, சரளமாக உரையாடுவாள். எப்படி வந்தது என்று தெரியாது அவளை எல்லோரும் சித்தி என்று அழைப்போம். நான் வகுப்பு முடிந்து அனேக தினங்கள் அனு வரும் வரை மஞ்சுவின் அறையில் இருப்பேன். அங்கே நிலவும் குதூகலம் எனக்கு பிடிக்கும். ஒரு கட்டத்துக்குமேல் எல்லாம் சலித்து அனு எப்போது வருவாள் என்றிருக்கும். அனு வேறு துறை வகுப்பு முடிந்ததும் நேராக அறைக்கு வர மாட்டாள். அவளுக்கு அவள் வகுப்பில் எல்லோருமே நெருக்கம். அவளிடம் எல்லோருமே எப்படி வெகு சீக்கிரம் பழகிவிடுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கும். அனுவும் நானும் பேசாத விசயங்களே இருக்காது. அனுவோடு யாராவது பேசினாலோ அவள் யாரை பற்றியாவது சிலாகித்து பேசினாலோ எனக்கு ஒருவித அமைதியின்மை வந்து விடுகிறது.

ஒரு நாள் எனக்கு மழையில் நனைந்து கொண்டே பாட்டுக் கேக்கணும் என்றேன் அனுவிடம். ஆசையை வெளியிட்ட அடுத்தநாள் லேசாகத் தூறியது அவள் வாக்மேனை எடுத்துக் கொண்டு வா போகலாம் என்றாள். நாங்கள் தூறலில் இயர் போனை ஆளுக்கொரு காதில் வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் பாட்டுக் கேட்டுத் திரும்பினோம். அதென்ன ரோட்டோர டீ கடைல பசங்க தான் டீ குடிக்கனுமா ஏன் நாம குடிக்கக் கூடாதா என்ற மறு நாள் ஆண்களுக்கு மத்தியில் நாங்கள் இருவர் மட்டும் டீ குடித்துக் கொண்டிருந்தோம். அனுவின் வார்த்தைகளில் மற்றுமின்றி செயல் படுத்தும் தைரியம் எனக்கு மிகப் பிடிக்கும். அனு என்னை நிறைய வேளைகளில் கூட்டை கிழித்து விட்டு வெளியே அழைத்து சென்றிருக்கிறாள்.இப்போது மஞ்சு கூப்பிட்டாள் என்று எதற்கு பொய் சொன்னேன் என்று என்னையே திட்டிக் கொண்டு சென்றேன். என் வாழ்வில் அனு போன்ற ஒரு ஆத்மாவை கண்டெடுத்தது அதிர்ஷ்டம், மனம் அதை பாதுகாக்க வேண்டுமே என்று அலைமோதித் தவித்தது. ஏன் இப்படி? யார் அன்பை திருடி விட முடியும். எனக்கானது எப்போதும் எனக்கு இருக்கும் இல்லையா? அவள் அன்பு மொத்தமும் எனக்கே வேண்டும் என்று நினைக்கிறேனா? இது இயல்பா இல்லை இதனால் அவளைமுற்றிலும் இழந்து விடுவேனா? ஓரிருமுறை இந்த உரிமை நிலைநாட்டலை நான் வெளிகாட்டிக் கொண்டபோதே அவள் அதை ரசிக்கவில்லை. மாறாக அது அடிமைத் தந்திரம் என்றாள். வென் யு ரியல்லி லவ் சம்திங் யு ஹாவ் டூ லெட் தட் ப்ரீ என்பாள். அதனால் நான் அவள் யாரோடு பேசினாலும் உள்ளுக்குள் எத்தனை பயந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்திருக்கிறேன். அவளுக்கு இதெல்லாம் புரிவதே இல்லை. இப்போதும் அவள் ஜூலியட்டை பற்றிப் பேசுகையில் எங்கே வெளிக்காட்டி விடுவேனோ என்று பயந்து மஞ்சு அழைப்பதாய் பொய் சொல்லி வந்தேன்.

மஞ்சுவின் அறைக்கு சென்று பார்க்கையில் மஞ்சு அறையில் இல்லை துணி துவைக்க சென்று விட்டாள் என்று கல்பனா சொன்னாள். திரும்பி வருகையில், ஜீ 50 அனுராதா என்று மூன்று முறை ரிசப்சன் போன் பூத் மைக்கில் அழைத்தார்கள். எங்களுக்கு போன் வந்தால் அறை எண், பேரை சொல்லி அப்படிதான் அழைப்பார்கள். நான் ரிசப்சனை கடக்கையில் அனு போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளை கடந்து வந்து வெறுமனே மூடி இருந்த அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன். மூடி இருந்ததால் அறையும் இறுக்கமாகவே இருந்தது. ஒரு மூன்று நிமிடத்தில் போன் பேசி முடிந்து அனு வந்தாள். முகத்தில் ஒரே சந்தோச களை. மஞ்சு கிட்ட பேசிட்டியா என்றாள். முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு அவ ரூம்ல இல்லே என்றேன். அதை அவள் கவனிக்காமல் அக்கா கூப்டாங்க பெரியக்கா என்றாள். அப்டியா என்றேன். ம்ம் கன்சிவா இருக்காங்க என்றாள். எல்லாவற்றையும் மறந்து என்னது என்றேன் சற்று உரக்க நம்ப முடியாமல். அவள் பெரியக்காவுக்கு பத்து வருடமாய் குழந்தைகள் இல்லை. சின்னக்காவுக்கு ரெண்டு குழந்தைகள். எனக்கும் தாள முடியாமல் சந்தோஷம். ரொம்ப சந்தோசமா இருக்குடீ என்றேன். ஆமா என்னால கூட முதல்ல நம்பவே முடில எவ்ளோ நாள் ஏக்கம் தெரியுமா என்றாள். எனக்கும் தெரியும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு வாட்டியாவது புலம்பி விடுவாள். அக்கா இப்போவே ரெண்டு பெட்டி நிறைய துணி சேத்த ஆரம்பிச்சாச்சு என்றாள். ஒன்னு பொண்ணு துணி இன்னொன்னுல பையனுக்கு என்றாள்.ம் இருக்காதா பின்னே என்றேன் சிரித்துக் கொண்டே. அன்று வெளியே சென்றபோது அனு இரண்டு மர பொம்மைகள் வாங்கினாள். திரும்பி வருகையில் ஜூலியட் தகர வீட்டு தாத்தாவோடு பேசிக் கொண்டிருந்தாள். அனு வா நாமும் பேசலாம் என்றாள். எங்கிருந்து தான் வந்ததோ அத்தனை இறுக்கம், நீ வேண்டுமானால் பேசிவிட்டு வா நான் இங்கேயே இருக்கிறேன் என்றேன். அவள் எதையும் கண்டுக்காமல் ரோட்டை கடந்து சென்று ஐந்து நிமிடம் தாத்தாவோடும், ஜூலியட் உடனும் பேசிவிட்டுத் திரும்பினாள்.

சமீபமாக ஜூலியட் அனுவைப் பார்க்க அறைக்கு வருகிறாள். எவ்வளவு தான் நான் பேச தவிர்த்தாலும் ஜூலியட் என்னையும் எப்படியாது அவர்கள் சம்பாசனையில் இணைத்து விடுவாள். அவளின் கொஞ்சும் தமிழ், கலகலப்பு என எனக்கும் ஜூலியட்டை பிடிக்கதுவங்கியது.எனக்கு எப்போதும் மலையாள மொழி மீது ஒரு வித ஈர்ப்பு இருந்தது. நீங்க பேசினாலே பாட்டுப் பாடற மாதிரி இருக்கு என்பேன் ஜுலியட்டிடம். ஜூலியட் எனக்கு சில வார்த்தைகள் சொல்லிக் கொடுத்தாள். நானும் அவளோடு ஆர்வமாய் பேசினேன். நான் உணர்ந்து முடிக்கும் முன்னேயே எனக்கும் அவள் நல்ல தோழியானாள். தூய அன்புக்கு முன்னால் வேறு எது நிற்கும்?அதற்குதானே சதா ஓயாத தேடல். கிடைக்கும்போது பற்றிக் கொள்ளத்தானே துடிக்கும் மனது.

வகுப்பு முடிந்து மாலையில், தற்போது ஊருக்கு போயிருக்கையில் பார்த்த அக்காவின் வீங்கிய வயிற்றையும், உப்பின கன்னங்களின் அழகையும் வியந்து சொல்லிக் கொண்டே இருந்தாள் அனு. இன்னும் ஒரு வாரத்தில் டெலிவரி என்றாள். கோவை முழுக்க சுற்றி நிறைய குட்டி குட்டி துணிகள் வாங்கினோம். அந்த நாளுக்கென ஆர்வமாய் காத்திருந்தோம். இரண்டு நாட்கள் கழித்து அனுவிற்கு போன் வந்தது சென்றாள்.போன் என்ற அழைப்பைக் கேட்டு ஜூலியட் அறைக்கு வந்தாள். ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள என்னிடம் அனுவுக்கு போனா என்றாள். ம்ம் இப்போ அனு திரிச்சு வரும் என்று புன்னகைத்தேன். சில நிமிடங்களில் அனு அழுது கொண்டே திரும்பி வந்தாள். இதை சற்றும் எதிர்பாராத நாங்கள் என்னாச்சு என்றோம் ஒரு சேர பதறி. குழந்தை இறந்துடுச்சு என்றாள். எப்புடி என்றேன். அசைவில்லாம இருக்குன்னு டாக்டர் கிட்ட போனப்ப தெரிஞ்சுருக்கு, தொப்புள் கொடி சுத்திடுச்சாம், அதனால குழந்தை இறந்துடுச்சு. ஆபரேஷன் பண்ணி வெளியே எடுத்திருக்காங்க. அக்கா என் குழந்தையப் புதைக்காதீங்க, என்கிட்டே குடுத்துடுங்க, வயித்துக்குள்ளேயே வெச்சுகறேன்னு, எடுக்க விடாம பைத்தியமா கத்திட்டிருக்காளாம் என்று சொல்லி வெடித்து அழுதாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஜூலியட் அவளை கைகளை பிடித்து இழுத்து மடியிலிட்டு, அவள் அழுது ஓயும் வரை ஒன்றுமே பேசாமல் முதுகை தடவிக் கொண்டே இருந்தாள். நடுக்கம் குறையாத நான் எழுந்து ஜூலியட்டிற்கு வெகு அருகே சென்று அவளை ஒட்டி அமர்ந்து கொண்டேன்.

Friday, March 4, 2011

திரையோவியம்

திரைச்சீலையின் முடிவில்
கிடந்த சிலையின் மேல்
சிறகு விரித்த பறவையொன்று
இளைப்பாற இறங்க
கோச்சை சேவலின்
வீரியம் கொண்டெழுந்தது சிலை
திடீர் உயிர்தலில் திடுக்கிட்டுப் பறக்கும்
பறவையின் கால்களைப்பற்றி
தன்மேல் கிடத்திய சிலை
அலகுமுட்டி, இறகுவருடி சொல்கிறது
இதுவரையும் கேட்டிறாத கதைகளை பறவைக்கு
சொல்லியும் கேட்டும் களித்த வேளையில்
நடு சாமக் கனவின் சாபம் தொற்ற
சிலைக்கு முளைத்தன இருபெரும் சிறகுகள்
பறவைக்கு வாய்த்தது பேரழகுச் சிலையுரு
உருமாறிய அதிர்வில் குழைந்த சீலையில்
கலங்கிப் போயின பின்னான காட்சிகள்

Wednesday, March 2, 2011

ஆயாசம்

கண் குறுக்கி
தளிருதடு பிரித்து
இப்புறம் அப்புறம் துழாவியின்னும்
காம்பு பற்ற விளங்காது
வயிறொட்டக் கதறுகிறது
இன்றைக்கு பிறந்த சிசு

நெடு நேரமாய்
போராடி ஈன்ற களைப்பிலும்
ஊட்ட முயன்று
தோற்றோய்ந்த தாய்க்கும்
இது முதல் குழந்தை

அழுதழுதே தொய்ந்த குழந்தை
தீராப் பசியோடே சோர்ந்துறங்க
சுறுசுறுவென
தனம் வீங்கி ஊறிய நேசம் கட்டி
மீண்டுமொரு கூர் வலியில்
உழல்கிறாள் தாய்

இப்படி
விரல் எட்டா இடுக்குகளில்
விழுந்துவிட்ட தருணங்களை, பிரியங்களை
எதைக் கொண்டு மீட்க?
இனியும்
எந்த நம்பிக்கையோடு வாழ?

Sunday, February 27, 2011

வேண்டியவர்கள்

எல்லோருமே வாழ்வின் அழகான தருணங்கள் மனதில் உறைவதை விரும்புவோம் இல்லையா? நானும் அது போலவே உறைந்த நிமிடங்களை எழுத்தில் சேமிக்க விழைகிறேன். அவ்வப்போது என்னுடைய விருப்ப செயலாக, கடந்த வருடங்களில் இந்த மாதத்தில் வாழ்க்கை எனக்கு என்ன கொடுத்துக் கொண்டிருந்தது, எந்த மனநிலையில் இருந்திருக்கிறேன் என்பதை நான் நாட்க்குறிப்பில் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை படித்து, அப்படியே திரும்பி பார்த்துக் கொள்வேன். அதனால் தொடர்ந்து என்னை ஏதோ ஒரு வகையில் பாதித்தவைகளை எழுத்தில் வடித்து வைக்க முயல்கிறேன். அந்த முயற்சியின் விளைவாக இதோ இன்று கிடைத்த சுவாரஷ்ய உறவை எழுதி உங்களோடு பகிர்கிறேன். அது நீடிக்குமோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் அந்த நிமிடங்களில் நாங்கள் பகிர்ந்து கொண்ட அந்த இதம் சேமிக்கப்படுவது முக்கியம் என நினைக்கிறேன். இளைப்பாருதலாய் யாராவது கிடைப்பார்களா என்கிற வேளையில் எதிர்பாராமல் வந்து சேர்ந்துகொள்கிற மனிதர்கள் அற்புதங்கள் என்றே நினைக்கிறேன்.

சுமந்து கொண்டிருந்த எதையோ இறக்கி வைப்பதான எண்ணத்தில் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த என் தோழியை பார்க்க சென்றேன். கிட்டத்தட்ட பத்து வருடங்களாய் தொடர்ந்து கொண்டே இருக்கும் இந்த நட்பை நான் ஆராதிக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். அவள் ஒரு தேவதை என்பதைத் தவிர வேறு ஒன்றும் அவளை பற்றி சொல்வதற்கில்லை. அவளுக்குத் தெரியாததென்று என்னிலும் எதுவும் இல்லை. என்னை முழுவதுமாய் அதாவது என் பைத்தியக்காரத்தனங்கள் முதலான சகல குணங்களோடும் ஏற்றுக்கொண்டு நேசிக்கும் ஒரே ஜீவன். பொதுவாக எல்லோரிடமும் எனக்கு நிறைய பேச வராது. அறியாதவர்களிடம் பேச்சை துவங்க தெரியாது. அறிந்தவர்களிடம் ஓரளவு பேசுவேன், அவளிடம் மட்டும் நான் நிறையப் பேசுவேன். அந்த அளவுக்கு வேவ் லென்த் ஒத்துப் போகும். சரி இன்று நடந்ததை சொல்கிறேன் என்றேனல்லவா சொல்கிறேன். அவளும் நானும் காப்பி ஷாப்க்கு சென்றோம். கொஞ்சம் காபி நிறையப் பேசினோம். பிறகு ஒவ்வொரு தெருவாய் நடந்தோம். வாகன இரைச்சல்கள் இல்லாத மரங்கள் நிறைந்த அவள் குடியிருப்பு நடப்பதற்கு ஏதுவாய் இருந்தது. திடீரென்று சொன்னேன் நிறைய கிளைகள் உள்ள ஒரு மரத்தில் ஒற்றை குரங்கு எப்படித் தாவும், அது அடுத்து எந்தக் கிளைக்கு தாவும் என்று யாராவது சொல்ல முடியுமா அந்த மாதிரியான ஒரு மனநிலையில் இருக்கிறேன் தற்போது என்றேன். இப்படியும் அப்படியுமாய் எங்கள் பேச்சு பத்துவருட காலங்களில் நடந்த நிகழ்வுகள் சிலவற்றை பற்றிக் கொண்டு தொடர்ந்த படியே இருந்தது. சொல்லப் போனால் எங்கள் பேச்சு நாங்கள் நடந்த எல்லாத் தெருக்களையும் நிறைத்தது. ஒருவழியாய் கால்வலிக்க நடந்த பிறகு வெளியில் வந்து மரத்தடியில் இருந்த கல்லில் ரோட்டை பார்த்து அமர்ந்து கொண்டோம்.

அந்த மரத்தை தெருவிளக்குகள் அவ்வளவாய் ஊடுருவ முடியவில்லை ஆதாலால் நாங்கள் அமர்ந்திருந்த அந்த இடம் ஓரளவிற்கு இருண்டுதான் இருந்தது. சற்று நேரத்தில் அவள் பக்கத்தில் ஒரு அம்மா வந்து அமர்ந்தார்கள். டைம் என்னாச்சும்மா என்றவர்களிடம் ஒன்பது என்றாள். பிறகு எப்போது எழுந்து போனார்கள் என்பதை கவனிக்க வில்லை. இப்படிதான் அவளோடு பேசும்போது எனக்கு எல்லாமே மறந்து விடும். இன்னும் சிறிது நேரம் பேச்சில் கரைந்த பிறகு அந்த பக்கத்திலிருந்து ரோட்டைக் கடந்து ஒரு அம்மா வந்து பஸ் பரத்தா (பஸ் வருமா) என்றார்கள். ஸ்டாப் மாட்த்தாரா கொத்தில்லா என்றேன் உடைந்த கன்னடத்தில் (ஸ்டாப் பண்ணுவாங்களா தெரியாது). பிறகு அவர்களே தொடர்ந்து கன்னடத்தில் இது ஸ்டாப் தான், ஆனா பஸ் வருமான்னு கேட்டேன் என்றார்கள். அப்படியா என்று சிரித்து பஸ் வருமா தெரியலையே என்றேன். எங்களுக்குளாக இது வரை எதாச்சு பஸ் போச்சா என்று வினவிக் கொண்டே ஒருவேளை நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம் என்று முடித்துக் கொண்டோம். அவர்களும் சற்றுத் தள்ளி அவள் பக்கத்தில் அமர்ந்தார்கள்.

எப்படித்தான் பேசுவதற்கு இத்தனை கிடைக்கிறதோ. இப்போது சமூகம், குடும்பம், அதை ஒட்டிய நிகழ்வுகள் என்று தொடர்ந்து, நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்று சுய பச்சாதாபப் பட்டு பிறகு ஒரு கட்டத்தில் போதும் என்று எழுந்து கொண்டோம். இருவரும் எதிரெதிர் புறமாக நடக்கத் துவங்க அந்த அம்மாவின் குரல் என்னை நிறுத்தியது. சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியாததால் மறுபடி கேட்டேன். எந்தப் பக்கம் போறே என்றார்கள் நான் சொன்னதும் நடந்து போறியா என்றார்கள். ஆமாம் என்றேன். பிறகு சரி நானும் வர்றேன் என்றார்கள். நடை பாதை சற்று இருட்டாய் இருந்ததால் அவர்களுக்கு நடக்க ஒரு துணை தேவைப் பட்டிருக்கலாம். எனக்கு இந்த நேரத்தில் நடப்பது பிடிக்கும். ஒரு சில இடைஞ்சல்களைத் தவிர இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் நடப்பது மிக அழகானது. அவர்கள் பையை எடுத்துக் கொண்டு எழுந்து வர அவகாசம் கொடுத்து காத்திருந்தேன். பிறகு இருவரும் சேர்ந்து நடந்தோம். அத்தனை அலைச்சலிலும் அத்தனை சிரித்தார்கள். அது எனக்கு தொற்றிக் கொள்ள நானும் சிரித்துக் கொண்டே பேசினேன்.

நாளைக்கு என்னோட தம்பி வீடு கிரக பிரவேஷம் அதனால சிக்பேட் போய் துணி எடுத்து வந்தேன் என்றார்கள். பேச்சை துவங்குபவர்களை எனக்கு மிக பிடிக்கும். காரணம் எனக்கு அது சுத்தமாய் வராது மேலும் அவர்கள் தன்னோடு என்னை சேர்த்துக் கொள்வதாய், என் துணையை நாடுவதாய் தோன்றுவதால் பிடிக்கும். ஒருவரின் நெருக்கம் மற்றவரால் வேண்டப் படும்போது அவருக்கு வரும் மகிழ்ச்சி எனக்கும் வந்தது. என்னுடைய ப்ரோகேன் கன்னடாவில் அங்கே கம்மியா கிடைக்கும் கேள்விப் பட்டிருக்கிறேன் என்றேன். இந்து எழு வருடத்தில் நான் அங்கு ஒரு முறை கூட போனதாய் நினைவில்லை. அவர்கள் இல்லம்மா எல்லாப் பக்கமும் ஒரே விலைதான் என்றார்கள். நான் அப்டியா என்று புன்னகைத்தேன். இந்த அலைச்சல்ல போயிட்டு வரதுக்கு இங்கயே பத்து முப்பது ஜாஸ்தி கொடுத்து எடுத்துக்கலாம் என்றார்கள். நான் அதுவும் சரி தான் என்று நினைத்து புன்னகையை இடைக்கால பதிலாக்கி கன்னடத்தில் வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தேன்.

தெருவிளக்கு அடியில் நடக்கும்போது ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசியும் மற்றபடி கீழே பார்த்து நடந்துகொண்டும் தொடர்ந்தோம். எழுமிச்சம் பழ நிறம் என்பார்களே அப்படி ஒரு நிறம் அவர்கள். அழகாய் பெரியதாய் மரூன் கலர் பொட்டு முக்கியமாய் ஓயாத சிரிப்பு. பேச்சுக்கு பேச்சு கனோ கனோ என்று விளித்தார்கள். என்னடாவில் டா / என்னம்மாவில் மா போல நெருக்கத்தை குறிக்கும் இந்த கனு/கனோ கன்னடத்தில் எனக்கு நிரம்பப் பிடித்த வார்த்தை. நீங்க வேலைக்கு போறீங்களா என்றேன். இல்லம்மா என்று பதில் வந்தது. அவர்கள் பையை சுட்டி உங்களுக்கு அது கனமா இருக்கும் கொஞ்ச தூரம் நான் கொண்டு வருகிறேன் என வாங்கிக் கொண்டேன். உபகாரம் பெற்றுக் கொள்ளும்போதான சங்கடப் பட்டுக் கொண்டே கொடுத்து சற்று தூரத்தில் திரும்ப வாங்கிக் கொண்டார்கள்.

பேச்சைத் தொடர உங்களுக்கு குழந்தைகள் என்றேன். ஒரு பொண்ணு பெரியவ அப்றோம் ரெண்டு பசங்க என்றார்கள். சொல்லும்போது உன்ன மாதிரி ஒரு பொண்ணு என்று சொன்னது எனக்கு அவர்கள் மேல் விசேஷ அக்கறையை அன்பைக் கொடுத்தது. எல்லாருமே வொர்கிங். பொண்ணு கல்யாணம் ஆயிடுச்சு என்றார்கள். பேரு சுமதி என்றார்கள். உனக்கு என்ன வயசும்மா என்றார்கள். நான் முப்பது என்றேன். சற்று சூழும் மௌனத்தை குழைக்க உங்க வீடு எங்கே இருக்கு என்று கேட்டேன். சரியாக கேட்கவில்லை போல ஏனு கனோ என்றார்கள். என்ன கண்ணா என்பதைப் போல் அத்தனை பாந்தமாய் இருந்தது. இதைக் கேட்டு ஓவராய் உருகியதில் கன்னடம் என்னை கைவிட தமிழில் சற்று தடுமாறி ஆங்கிலத்தைக் குழைத்து கேட்பதர்க்குள்ளேயே நீ தமிழாமா என்றார்கள். ஆமாம் என்றேன். நானும் தமிழ் தாம்மா என்றார்கள். இனி வார்த்தைகளை தேட வேண்டியதில்லை புதியதாய் ஒரு உற்சாகம் எனக்கு. நீங்க பெங்களூர் தானா என்றேன். இல்லை என்று நான் தமிழ் அவர் கன்னடா என்றார்கள். எனக்கு மதுரை என்றார்கள். அப்டியா நான் அவ்வளவாய் போனதில்லைன்னாலும் கேள்விப் பட்ட அளவிலேயே எனக்கு மதுரை ரொம்ப பிடிக்கும். இப்போது என்னை பற்றி கொஞ்சம் சொல்லத் தோணியதில் நான் இங்க வந்து ஏழு வருஷம் ஆச்சு ஊரு கோயம்பத்தூர் பக்கம் என்றேன்.எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கு என்றேன். அப்படியா என்று ஆச்சர்யமாய் பார்த்தவர்கள் (நம்புங்கப்பா) கல்யாணம் ஆனா மாதிரியே தெரியல என எனக்கு ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும் கூச்சமுமாய் இருந்தது. கிட்டத்தட்ட என்னோட அப்பா வயதுள்ள என் வீட்டு ஓனர் என்னை ஆன்டின்னுதான் கூப்டுவார். ஆமாங்க பெங்களூர் ல இதெல்லாம் சகஜம். என்ன சகஜம்முன்னு தேத்தினாலும் வேதனைப் பட்டுக் கொண்டிருந்த மனசுக்கு உற்சாகமாய் தான் இருந்தது. ஒருவேளை இந்த ட்ரஸில் அந்த மாதிரி தெரிந்திருக்கும் என்று மனதுள் பறந்து கொண்டிருந்த என்னை கீழிறங்க செய்தேன். சின்ன பெண்ணாய் அடையாளம் காணப்படும் நேரங்களில் ஒரு குழைந்தமை வெளிவருகிறது. இப்போது என்னுள்ளும் அது என்னை இயக்கத் துவங்கியது

உங்க பசங்களுக்கு கல்யாணம் ஆகலையா கேட்டேன். பாத்துட்டிருக்கோம்மா என்று கூறி நீ சொல்லு உனக்கு தெரிஞ்சா என்றார்கள். அவசர அவசரமாய் யாராச்சும் இருக்காங்களா யோசித்தேன். கண்டிப்பா சொல்றேன் என்று அவர்கள் எண் வாங்கிக் கொண்டேன். பெயர் கேட்ட போது உமா என்றார்கள். உங்கள ஆன்ட்டின்னு கூப்டனுமா அக்கான்னு கூப்டனுமா அவர்களையே கேட்டேன். ஆன்டினே கூப்டு மா என்றார். உமா ஆன்டி என்று நம்பர் பதிவு செய்தேன். வீட்டுக்கு வாயேன் பெரிய பையனையும் அவரையும் அறிமுகப் படுத்தறேன் என்றார்கள். இல்ல பரவால்ல ஆன்டி இந்த நேரத்துல அவங்க என்னை எதிர்பார்க்க மாட்டாங்க என்றேன். இல்லம்மா எனக்கு ரொம்ப பிடிச்சாதான் பக்கத்துல சேர்ப்பேன் அவங்களுக்கு தெரியும் என்றார்கள். இவ்ளோ சீக்ரம் இந்த நேரத்துல வீட்டுக்கு கூப்டறளவு நெகிழ்ந்திருக்கும் மனம் என்னை ஒத்துக் கொள்ள செய்தது.

வீட்டுக்குள் அழைத்து இவளோட தான் நடந்து வந்தேன் நம்ம சுமன் மாதிரி என்று என் முதுகை தொட்டு அறிமுகப் படுத்தினார்கள். சில நிமிடங்கள் பார்த்த ஏதோ ஒரு பொண்ணை தன் பொண்ணோடு ஒப்பிடுவதை விரும்பாமலோ என்னவோ ஆட்டோவில் வந்திருக்கலாமே என்றார். நான் எதிர்பார்த்த மாதிரியே விருந்தாளிகளை சிறிதேனும் எதிர்பாராத ஒரு நேரத்தில் பரீட்சயமில்லாத ஒரு பெண்ணை எந்தளவுக்கு வரவேற்பார்களோ அதே தயக்கமான வரவேற்ப்பை அவர்கள் மகன்,கணவரிடம் கண்டேன். ஜூஸ் சாப்பிட சொன்னவர்களிடம் வேணாம் நீங்க டயர்ட் ஆ இருப்பீங்க கிளம்பறேன் என அவர்கள் விடாமல் கொடுத்தார்கள். கிளாசில் பாதி நிரப்ப நிரப்ப முதல்ல தண்ணி குடிக்கிறியாமா என்றார்கள். இல்லை பரவால்லை என்று அதை வாங்கிக் குடித்தேன். அங்கிள் பேசவே இல்லை. பனியனோடு இருந்த பையனுக்கு கூச்சம் மேவ அவன் எழுந்து உள் சென்றான். இங்க வாப்பா என்று ஆன்டி அழைக்க சூழலை சுமூகமாக்கும் முயற்சியில் நானும் வாங்க நாந்தான் உங்களுக்கு பொண்ணு பாக்கப் போறேன் என்றேன். ஆன்டி நாக்கை கடித்து கொண்டார்கள். அச்சூ இந்த ஓவரா உரிமை எடுத்துக்கறது நான் எப்போ விடப் போறேனோ,கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனம் நான் அதை சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கையிலே அதை ஊர்ஜிதப் படுத்தும் ஒரு பார்வையோடு அவன் திரும்ப வந்து அமர்ந்தான். சில பல தகவல்களை கேட்டுப் பெற்றுக் கொண்டபின் உங்களை பாத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் வரேன் என்று கிளம்பினேன். ஆன்டி கேட்க்கு வழியனுப்ப வந்தார்கள். சாரி நான் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமா பேசிட்டேன் என இல்ல பரவால்ல அவன் கல்யாணம் இப்போ வேண்டாங்கறான். வீடு கட்டிட்டு பாக்கலான்னு சொல்றான் என்றார்கள். நான் என்ன சொல்றேன்னா அது பாட்டுக்கு அது நல்லா குணமான பொண்ணு கிடைச்சா பண்ணிட வேண்டியதுதானே என்கிறேன் என்றார்கள். நானும் நீங்க சொல்றது சரிதான் என்று, நானும் முயற்சிக்கிறேன் என்றேன்.எனக்கு ஜாதி முக்கியமில்லம்மா நல்ல குணமான பொண்ணு இருந்தா போதும். உன் பிரண்ட்ஸ் யாரும் இல்லையா என்றார்கள். இல்ல ஆன்டி எல்லோருக்குமே கல்யாணம் ஆயிடுச்சு என்றேன். உன்னைப் பார்த்ததுல எனக்கும் சந்தோஷம் என்றார்கள். நான் திரும்ப உங்களை பாத்தது எனக்கும் ரொம்ப சந்தோஷம் என்று கிளம்பினேன். இரண்டடி நடந்த பிறகு இன்னும் ஒரு சில நொடிகள் இதை நீட்டிக்கவோ என்னவோ சற்று உரக்க குட் நைட் மா என்றார்கள். திரும்பி குட் நைட் ஆன்டி என்றுவிட்டு நகர்ந்தேன்.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...