Thursday, June 24, 2010

பாப்பா பாட்டு

அந்த புதிய கட்டிடம்
அழைத்துச் செல்லும் தெரு
வழியெல்லாம்
இறைந்து கிடக்கும் மணலில்
சின்னஞ்சிறு பாதங்கள்

சிவப்பு ரிப்பன் கட்டிய சிறுமி
அவள் மேலே
தாவி ஏறும் நாய்க்குட்டி
விளையாட்டு முடிவில்
நாய் வாலில் ஆடும் ரிப்பன்

என் கண்களில் வழியும் நீர்
அழண்டா சரியாயிரும் என
கண் துடைத்து தேற்றுகையில்
தாய் அவள் குழந்தை நான்

சிக்னலில் நிற்கும் வாகனங்கள்
என்னை எட்டிப் பார்க்கும் குழந்தை
மெல்ல கன்னம் கிள்ளையில்
அந்த ஜொள்ளில் வழியும் கவிதை

மாலை நேரப் பூங்கா
சாட் பூட் த்ரீ என
அந்த சந்தோசக் கூச்சலில்
மீள்கிறதென் பால்யம்

10 comments:

யாத்ரா said...

:)

உயிரோடை said...

வெள்ளிக்கிழ‌மை கால‌ங்காற்தால‌ இப்ப‌டி ஒரு க‌விதை ப‌டித்தால் போதும் நாள் முழுக்க‌ உற்சாக‌ம் தான்.

Sugirtha said...

நன்றி லாவண்யா,நன்றி யாத்ரா! :)

Li. said...

:-) அருமை. ( 'ஜொள்ளில்' - 'எச்சிலில்' என்று போட்டிருக்கலாம்னு தோணிச்சு...)

Sugirtha said...

@ ஒளி - அப்படியா! நன்றி :)

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

santhanakrishnan said...

இனிது இனிது கவிதை இனிது.

Sugirtha said...

நன்றிங்க கமலேஷ்!
நன்றிங்க சந்தான கிருஷ்ணன்!

Gowripriya said...

soooooooooo sweeeeeeeeeeet

Sugirtha said...

நன்றி கௌரி... :))

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...