மொட்டை மாடியின் பக்கச் சுவர்களை
பற்றியபடி இருந்தது
அண்டை வீட்டு மரத்தின்
கீழிறங்கிய இரண்டு வாதுகள்
காற்றின் ஓருரசலில்
விழுந்தது அதனின்றொரு பழுத்த இலை
காற்றின் சிறு வருடலுக்கும்
சிணுங்கியபடி தள்ளித் தள்ளிப் போனதவ்விலை
சிணுங்களை ரசித்த காற்று துரத்த தொடங்கியது
தப்பிக்க அங்குமிங்கும் ஓடிக் களைத்த இலை
மாடிப்பரப்பின் சிற்சிறு குழிகளின் ஒன்றில்
தன் கூர்முனை குத்தி நின்றது இளைப்பாற
இலையையே சுற்றி சுற்றி வந்த காற்று
தன் தீராத காதலை சொல்ல
நின்றபடியே மெல்ல காற்றின் ஆளுமைக்கு
இசைந்து கொடுத்தது இலை உடல் அசைத்து
வெட்கத்தில் மேகங்கள் கருத்தது
மழை ஜோடனைக்கு கச்சிதமாய் காற்றசைந்தது
உடன் இலை பரந்தாடியது
இலையிட்காற்றும் காற்றிலிலையும்
மாறி மாறி ஆடியபடியே கடந்து போகையில்
ஒற்றை துளி விசிறி மீட்டெடுத்தது என்னை
உன் நினைவுகளிலிருந்து
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்...
-
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
2 comments:
ரொம்ப நல்லா இருக்கு சுகி.
:-) அழகு.
Post a Comment