Wednesday, June 10, 2009

துரோகமும் வலியும்

எனக்கு எப்போதுமே நீங்கள் தான் வழிகாட்டி. உங்களை தவிர வேறு யாரையுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆனால் நீங்கள் என்னோடு இல்லை இன்று. உங்களுக்கு எழுதுவதாய் நினைத்து இதை எழுதுகிறேன்.

இந்த நாளை என்னால் மறக்க முடியுமா தெரியவில்லை. சமீப காலத்தில் இப்படி ஒரு நிம்மதியற்ற இரவை நான் கழித்ததில்லை. இப்படி ஒரு பச்சை துரோகத்தை எனக்கு யாரும் செய்திருக்கவில்லை இதுவரை. என்னால் ஏற்றுகொள்ளவே முடியாத ஒரு துரோகம் இது. துரோகத்தில் என்னது ஏற்று கொள்ள முடிவது, ஏற்று கொள்ள முடியாதது. எல்லா துரோகமுமே ஏற்று கொள்ள முடியாததுதான். செய்வதை எல்லாம் செய்து விட்டு அதற்க்கு சப்பை கட்டு கட்டுவது தான் சகிக்க முடிய வில்லை. ஐந்து வருடமாய் என் மனதில் கட்டி வைத்திருந்த ஒரு மிக அழகிய பிம்பம் தூள் தூளாய்.எனக்கு நடந்ததை யோசிக்க யோசிக்க கண்ணீர் பெருகுகிறது. எல்லாவற்றிலும் ஒரு கொடுமை என்னவென்றால் என் வலியை பகிர்ந்து கொள்ள கூட எனக்கு யாரும் இல்லை. என்னை புரிந்து கொள்ள கூடிய யா..ருமே... இல்லை. நான் என்றுமே ஒரு தனி மரம் தான். என் மனதை ஒட்டி வந்த நீங்களும் என்னோடு இல்லை. இந்த நிதர்சனம் எனக்கு புரிகிறது. ஆனால் நான் யாரிடம் சொல்வது. இந்த ஷணம் நான் உங்களை மிகவும் மிஸ் பண்ணறேன். என்னால் அழுகை என்ற உணர்வை கட்டுப்படுத்த முடிந்ததே இல்லை. இன்று எல்லாம் நடந்த பிறகும் எதுவுமே நடக்காதது போல புன்னகைத்து கொண்டு என் தனிமையான நேரம் வரும் வரை காத்திருந்து அழ வேண்டி இருக்கிறது. பன்னிரண்டு மணி நேரம் பொறுத்திருந்து மனதை மிகமும் பாதித்த ஒரு விஷயத்துக்கு ரியாக்ட் செய்வதை விட கொடுமை வேறென்ன? எனக்கு இரண்டு விஷயம் ஒப்புக்கொள்ளவோ செய்யவோ இயலாதது. மனதின் உணர்ச்சிகளுக்கு முகத்தில் திரை போட என்னால் முடியாது. இன்னொன்று என் விஷயத்தை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. உங்களுக்கே தெரியும்.

முன்னொரு சமயம் கிட்டத்தட்ட இந்த மாதிரி சம்பவம் எனக்கு நிகழ்ந்தபோது உங்களால் மட்டுமே என்னை சமாதானம் செய்ய முடிந்தது. இன்றும் உங்களோடு பேச முடிந்திருந்தால் எனக்கு சற்றேனும் ஆறுதலாய் இருந்திருக்கும். நீங்கள் என்னோடு இல்லை. இனி எப்போதும் நீங்கள் என்னோடு இல்லை. ஏன் சென்றீர்கள் என்னை விட்டு தொலை தூரம்? ஏன்?

2 comments:

யாத்ரா said...

ஏன் என்ன ஆச்சு, என்ன நடந்துச்சு, alone helpless pain லாம் எழுதியிருக்கீங்க, எதுவாயிருந்தாலும் இதை எழுதி முடித்த பிறகு எல்லா வலிகளும் நீங்கியிருக்கும் என நம்புகிறேன்.

இந்தப் பதிவு ஒரு புனைவு மட்டுமே எனவும் நம்புகிறேன்.

Sugirtha said...

ம்ம் இந்த பதிவு எழுதி முடித்தபிறகு நிச்சயமாக சஞ்சலம் சற்று ஓய்ந்தது. பிறகு வாசுதேவன் அவர்களின் பதிவிற்கு பின்னூட்டம் இடவும் முடிந்தது. இது பற்றி விசாரித்த உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் என் நன்றிகள்.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...