Thursday, June 16, 2011

அதீத மயக்கம்

நெடுநேரம் போராடி
நடுநிசியில் துய்த்த அவளுக்கு
அவனும்
நீராடியும் வடிந்திராத அவனுடற் சூடும்
கலைந்த சிகையும்
மதுவுண்டு சிவந்த விழிகளும்
அதை மறைக்காத இமைகளும்
காதோரம் இறைக்கும் நாசியும்
கிளர்த்தும் மீசையும்
சூழ்ந்த புகைக்கிடையில்,
சற்றே நடுங்கும் உதடுகளும்
அது கொடுத்த புகை முத்தமும்
அதன் சுகந்தமும்
இதழ் கடித்த பற்களும்
அதை தடவும் நாவும்
தன்னை சுமந்த மார்பும், அங்கே குருமுடிகளும்
விரல் துளைக்கும் விரல்களும்
கால் பின்னும் கால்களும்
துவங்கும் மிதமும்
வெடிக்கும் வேகமும்
முனகும் மோகமும்
கொடுத்த விழிப்பை
ஊளையிட்டு சபித்தன
உறக்கம் பிடிக்கா நாய்கள்

10 comments:

sangeetha said...

சுகி,
படிக்க படிக்க திகட்டும் ரொமாண்டிக் கவிதை இது...நல்லா இருக்கு ..

Sugirtha said...

அப்டியா சங்கீ! உன்னோட கமெண்ட் படிக்க மகிழ்ச்சியா இருக்கு :)

"உழவன்" "Uzhavan" said...

நல்லாயிருக்குங்க

Sugirtha said...

நன்றிங்க உழவன்...

santhanakrishnan said...

மனசுக்குள் பூக்களை
உதிர்க்கிறது
உங்கள் கவிதை
வசீகரம்.

Sugirtha said...

உங்கள் வருகையும்,கருத்தும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது சந்தானகிருஷ்ணன். நன்றி! :)

shri Prajna said...

எண்ணங்கள் வார்த்தையாகவும்
வார்த்தைகள் வண்ணமாகவும்
வண்ணங்கள் வடிவமாகவும்
மாறி மயக்கத்தை தருகிறது ..
அழகு கொஞ்சும் கவிதை ..
நல்ல இருக்கு சுகிர்தா..

Sugirtha said...

நன்றி ஸ்ரீ, உங்க உணர்வை அழகு வார்த்தைகள் கொண்டு வெளிப்படுத்தி இருக்கீங்க...

Paul said...

எதேச்சையாக தான் உங்கள் பதிவை படிக்க நேர்ந்தது.. படித்த போது மிகவும் ரசித்தேன்..!

..Paul

Sugirtha said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பால்!

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...