Friday, May 13, 2011

ஒற்றைச் செம்பருத்தி

மையிட்டு, மலர் சூடி
உறங்குவதற்கு முன்
உறக்கத்தின் இடையில்
உறங்கி எழுந்ததும்

என எத்தனை கனவுகள்
அப்போதெல்லாம்

தொலையுமெனில்,
கலையுமெனில்,
எல்லாமே எல்லாமே
எல்லாமே எதற்கு?

வாசச் செடியில்
ஒற்றைச் செம்பருத்தி
அதனாலென்ன
இருந்துவிட்டு போகட்டும்

அடுக்களை ஜன்னலைத்தான்
திறப்பதேயில்லை
அந்தப்புரம் ஜோடிப் புறாக்கள்

8 comments:

santhanakrishnan said...

ஒற்றைச் செம்பருத்தி
தீயாய்ச் சுடுகிறதே?

Sugirtha said...

ம்ம்ம்ம்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்தான கிருஷ்ணன்.

sangeetha said...

ஒற்றைச் செம்பருத்தி வலியை
வி(வ)ரித்திருக்கிறது அதன்
இதழ்களில்...

Sugirtha said...

Welcome Sangee!
எத்தனை அழகா சொல்லி இருக்கே உன்னோட உணர்வை. நன்றி...

shri Prajna said...

அன்பு சுகிர்தா

ஜன்னலை திறக்காவிட்டால் தான் என்ன ...வாசல் வெளி வந்தால் ஆயிரம் நிகழ்வுகள் ...

நேற்றைய பொழுதுகளின் முன்னுரையோ ..நாளைய பொழுதுகளின் முகவுரையோ இல்லாமல் தொலைந்து போன நினைவையும்..கலைந்து போன கனவையும் காலடியில் நசுக்கி நகர்கிறது (நிகழ்) காலம் ...

இதுதானே இப்படித்தானே வாழ்க்கை..

"வாசச் செடியில்
ஒற்றைச் செம்பருத்தி"

எப்படி இருந்தாலும் ரசிக்கவைக்கிறது

Sugirtha said...

அன்பு ஸ்ரீ,

நீங்கள் சொல்வது உண்மைதான். காலம் அப்படிதான்...நிகழ்வுகளும் அப்படிதான்...

கருத்துக்கு நன்றி பா...

உயிரோடை said...

கனவென்பது தெரிந்து பின் கலைந்து போனதென்று வருத்தம் கொள்ளவது அழகா சுகிர்தா.

Sugirtha said...

கலைந்த பிறகுதானே கனவென்றே புரிகிறது லாவண்யா...

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...