Wednesday, March 2, 2011

ஆயாசம்

கண் குறுக்கி
தளிருதடு பிரித்து
இப்புறம் அப்புறம் துழாவியின்னும்
காம்பு பற்ற விளங்காது
வயிறொட்டக் கதறுகிறது
இன்றைக்கு பிறந்த சிசு

நெடு நேரமாய்
போராடி ஈன்ற களைப்பிலும்
ஊட்ட முயன்று
தோற்றோய்ந்த தாய்க்கும்
இது முதல் குழந்தை

அழுதழுதே தொய்ந்த குழந்தை
தீராப் பசியோடே சோர்ந்துறங்க
சுறுசுறுவென
தனம் வீங்கி ஊறிய நேசம் கட்டி
மீண்டுமொரு கூர் வலியில்
உழல்கிறாள் தாய்

இப்படி
விரல் எட்டா இடுக்குகளில்
விழுந்துவிட்ட தருணங்களை, பிரியங்களை
எதைக் கொண்டு மீட்க?
இனியும்
எந்த நம்பிக்கையோடு வாழ?

4 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆயாசத்தை இத்தனை தெளிவாக
யாரும் உணரவைக்க முடியாது
மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

Sugirtha said...

நன்றிங்க ரமணி தொடர் வருகைக்கும், கருத்துக்கும்...

உயிரோடை said...

கடைசி பத்தி ஒட்டாமல் இருக்கே சுகிர்தா.

Sugirtha said...

ம்ம் ஆமாம். இன்னும் கொஞ்சம் நல்லா வந்திருக்கணும்...

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...