Saturday, January 8, 2011

நிலை

குழந்தைகளற்றது என் தெரு
பஞ்சு மிட்டாய், பலூன் என
எவன் தொல்லையுமில்லை

அன்று கவிதை விற்க வந்தவனை
வாசலோடு அனுப்பிவிட்டேன்

பூக்காரியிடம் எனக்கென்ன பேச்சு

உனக்கும் தான்
அனுமதியின்றி அறைக்குள் நுழைவது
இன்றே கடைசியாய் இருக்கட்டும்
கதவை இறுக அடைத்துவிட்டு
சொல்லாமலே போய்விடு

இந்த அறை
மூலையில் ஒற்றை நாற்காலி
வெறிக்க ஒரு ஜன்னல்
வாசக் காரையை பெயர்க்கும் வெயில்
வசீகரம்தான் வாழ்க்கை

12 comments:

ny said...

words & flow வசீகரம் !!

Sugirtha said...

நன்றி கார்த்தி!

Li. said...

நிலை ... அதன் மனநிலை... :-)

Sugirtha said...

ஒளி! :)

"உழவன்" "Uzhavan" said...

நல்ல வசீகரம்.. :-)

Sugirtha said...

நன்றிங்க உழவன்! :)

ஹ ர ணி said...

கவிதையின் முதல் மூன்று வரிகளில் மனம் காயமடைகிறது. குழந்தைகள் அற்ற தெரு எப்படி தெருவாக இருக்கமுடியும். பஞ்சுமிட்டாய் பலுர்ன் விற்பவர்கள்தான் நமக்கு சொர்க்கத்தின் திறவுகோலை குழந்தைகள் வழி வழங்குபவர்கள். மனசு சங்கடப்படவைக்கிறதுங்கள் கவிதை.

Sugirtha said...

அப்படியான நிலையிலும் சில தெருக்கள் இருக்கலாம் இல்லையா? அதை உள்வாங்கிக் கொள்ளும்
உங்கள் மனது புரிகிறது...
உங்கள் கருத்துக்கு நன்றி ஹரணி.

rvelkannan said...

வண்ணதாசன் கதை ஒன்று நினைவிற்கு வருகிறது.
அத்தனை அழகு

Sugirtha said...

நன்றி கண்ணன்.

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு சுகி.

Sugirtha said...

நன்றி லாவண்யா! :)

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...