Sunday, January 2, 2011

கோரிக்கை

யாரேனும்
யுத்தத்திற்கு பழக்குவியுங்கள்
என் விரல்களையல்லாது
மனத்தை
சதா சளைக்காது போரிட்டு
சாய்த்திடும்
இந்த அன்பை தோற்கடிக்க

7 comments:

santhanakrishnan said...

வைரத்தை வைரத்தால்
அறுப்பது போல்
அன்பை அன்பால்தான்
வெல்லமுடியும்.
அன்பு செய்ய பழகுவோம்.

Sugirtha said...

ம்ம் :)

மண்குதிரை said...

சுகிர்தா வெகு நாள் கழித்துப் பார்க்கிறேன்.

ஆமாம் சென்னைக்கு வந்திருந்தீர்களாமே

Sugirtha said...

ம்ம் வெகு நாட்களாயிற்று இங்கே உங்களைப் பார்த்து :)

ஆமாம் சென்னை வந்திருந்தேன் உங்களைத்தான் பார்க்க முடியாமல் போயிற்று. எப்படி இருக்கீங்க? புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Li. said...

அன்பு யுத்தத்தில் , தொற்பவரே வென்றவர் என்பது அறிந்தும், வெல்ல நினைக்கலாமா? ;-)

ஹ ர ணி said...

அன்பே சிவம் என்றார் திருமூலர். அன்பின் வழியது உயர்நிலை என்றார் ஔவை. செம்புலப்பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனேவே என்கிறது சங்க இலக்கியம். மதுமிதா சொன்னதுபோல அன்பை வெல்லமுடியாது. அன்பால் உலகை வெல்லலாம். அன்பைப் பேணுதல் என்பதுதான் சத்தியம்.

சாய்த்திடும் என்பது சாய்திடும் என இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Sugirtha said...

'சாய்த்திடும்' மாற்றிவிட்டேன்...உங்கள் கருத்துக்கு நன்றி! :)

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...