Sunday, November 14, 2010

தாகம்

உன் முதல் தொடுகை
முதல் முத்தம்
முதல் அணைப்பு
எப்படி இருக்கும்
என்பதாய் துவங்குகிறது எண்ணங்கள்
இம்மாலையில்
தருணங்களுகேற்ப அமையுமா
அல்லாது மனநிலைகேற்ப?
இல்லையெனில்
சூழல் நிர்ணயிக்குமோ
இறுக்கத்தையும் நெருக்கத்தையும்

தருணங்களே எனில்
அடைமழை இரவில்
முழுக்க நனைந்து
உடல் சிலிர்த்து
உன்னை ஒரு உயர்
பார்வை பார்க்கையில்
நிகழட்டும் அது

மனநிலை எனில்
நான், நீ, நம் காதல்
தவிர்த்து மற்றவை மறைந்து போன
உன்னத நிலையில் அமையட்டும் அது

சூழல் எனில்
நடு வனத்தில்
பிணைந்தாடும் பாம்புகளின்
மோகன நடனத்தின்
அதிர்விலும் லயத்திலும்
இருக்க வேண்டும் அது

4 comments:

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு இனியா

Sugirtha said...

நன்றி லாவண்யா!! :)

santhanakrishnan said...

தருணம்,மனநிலை,சூழல்
அனைத்தையும் இணைக்கும்
ஃபெவிக்கால் காதல் அன்றோ?
கவிதை வசீகரம்.

Sugirtha said...

நன்றிங்க சந்தானகிருஷ்ணன்!

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...