Saturday, October 9, 2010

ரோஜா

கல்லறைத் தோட்டத்தினை
கடக்கும்
ஒவ்வொரு முறையும்
அத்தனை நேரம்
உடன் வந்த எண்ணங்கள்
உறைந்துவிடுகிறது

தின்றுகொண்டிருந்த பொழுதின்
சூனியத்தை கழிக்கவென
ஓர் நாள்
உள்செல்ல விழைந்தேன்
ஒரு ரோஜாவோடு?

கல்லறை படுக்கைகளின்
உள்ளே
உடல்கள் உறங்குவதாயும்
வெளியே
உயிர்கள் அலைவதாயும்
பார்க்கும் நிலைகேற்ப
காட்சிகள்
மாறி மாறி புலப்பட

ஒரு நேரம் நிலவும்
உறக்கத்தின் அமைதியில்
புழுங்கியது
பாழ் நினைவுகள்

உயிர்கள் எழுப்பும்
விதிர்க்கும் ஓலத்திலோ
எழும்பிடும் துர் எண்ணங்கள்

இறுகப் பற்றிக்கொண்ட
அவைகளுக்கு
என்னிரு கரங்களை
துண்டித்து ஈய

மறுத்த இரண்டுக்கும்
தேவைப் பட்டதென்னவோ
இதுவரை
நான் பற்றி இருந்த
ஒற்றை ரோஜா

8 comments:

உயிரோடை said...

நல்லா இருக்கு இனியா. நீண்ட நாட்களுக்கு அப்பறம் இன்று தான் இணையம் வர இயன்றது. மற்ற பதிவெல்லாம் இனி தான் படிக்கனும்

Sugirtha said...

மெதுவா படிங்க... நன்றி! :)

santhanakrishnan said...

உங்கள் கவிதை வேறொரு
தளத்திற்கு இட்டுச் செல்கிறது.
எல்லோருக்கும் தேவை படத்தான் செய்கிறது ஒற்றை ரோஜா.

Sugirtha said...

நிச்சயமாக! நன்றிங்க சந்தானகிருஷ்ணன்...

rvelkannan said...

விரக்தி, வெறுமை , தனிமை - ஆகியவற்றை கேள்விக்குள்ளக்குகிறது சுகிர்தா ...
உண்மையில் நண்பர் சந்தன கிருஷ்ணன் சொன்னது சரியே.. வேறு தளத்தில் இருக்கிறது கவிதை

Sugirtha said...

நன்றிங்க கண்ணன்...

Unknown said...

கல்லறை தோட்டத்தில்தான் வாழ்கையின் முழு அர்த்தமும் புரிகிறது இல்லையா?

Sugirtha said...

ம்ம் ஆமாங்க! வருகைக்கு நன்றி...

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...