Tuesday, October 5, 2010

பெயர்

கிருபா
தயா
தாட்சண்யா
என் மகளுக்கென
தேர்வு செய்திருந்த பெயர்கள்
இவற்றுள்
ஒன்றுக்கும்
நட்சத்திரப் பொருத்தமில்லை

7 comments:

கமலேஷ் said...

தாட்சன்யா..
என் அருமையான பேரு...
கடைசியா என்னதான் வட்சீங்க...
சுகிர்தாவா..

Li. said...

நிஜம்தான்...அந்த பெயர்களுக்கு ராசியில்லை... ;-)

Sugirtha said...

@ கமலேஷ் - வெச்ச பேரு நேத்ரா
:-)
@ ஒளி - ராசியில்ல, இப்டி கூட சொல்லிக்கலாம் இல்ல? :-)

santhanakrishnan said...

நட்சத்ரா என்று வைத்திருக்கலாம்.

Sugirtha said...

ம்ம்ம், நட்சத்ரா... நல்ல பெயர் தான் :)

rvelkannan said...

பெயரில் ஒன்றுமே இல்லை சுகிர்தா.
மூன்றுமே அருமையா பெயர்.
மூன்றைவிட அருமை நேத்ரா
உங்களின் மகளுக்கு எனது வாழ்த்துகளை சொல்லுங்கள்.
(சரி நட்சத்திரம்(?) பார்த்து வைப்பார்கள் எதற்கு வேலை மெனக்கெட்டு பெயர்களை தேர்வு செய்தீர்கள்.
அட.. ஆமா.. இதற்கு பெயர் தான் டைம் பாஸா...?.. (சும்மா .. சொன்னேன். கோபம் வேண்டாம்))

Sugirtha said...

வாழ்த்துக்கு நன்றி கண்ணன்.. கோவம் எல்லாம் எதுக்குங்க? என்னோட டைம் பாஸ் படிச்சு கமெண்ட் போட்டிருக்கீங்க... நன்றி தான் சொல்லணும்.. நன்றி :)

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...