Tuesday, July 13, 2010

அது

வெகு நேரமாய்
பார்த்தபடி இருக்கிறேன்
அது அமைதியாய் நிற்கிறது
உள்ளே செல்வார்
வெளியே வருவார்
எவருமின்றி தனியாய் நிற்கிறது
என்னையே பார்த்தபடி
அதன் பழுப்பு நிறக் கண்களிலிருந்து
புறப்பட்ட அந்த நிசப்தம்
என்னை ஊடுருவித் துளைக்கிறது
உரையாடல்கள் எதுவுமின்றி
மொழிகளுக்கப்பாற்பட்ட
ஒரு புரிதல் நிகழ்கிறது ஆங்கே
யாருமற்ற மைதானத்தில்
சுழலும் புழுதியிலேறி
போகிறோம் மேலே மேலே
அதன் ஒற்றைக் கர ஸ்பரிசம் தூண்டி
என்னில் கனிந்தவைகளை சுவைத்து
உப்பி பெருக்கிறது அது
முதலில் நான்
பிறகு அது
உச்சங்கள் தொட்டு விலகையில்
உத்திரத்திலிருந்து வழிகிறது
ஒரே சீராய் மங்கு வெயில்

6 comments:

யாத்ரா said...

romba nalla irukku sugi


\\சுழலும் புழுதியிலேறி
போகிறோம் மேலே மேலே \\

superb

உயிரோடை said...

//உத்திரத்திலிருந்து வழிகிறது
ஒரே சீராய் மங்கு வெயில்//

அழகான வரிகள். மொழி தேறி வருது உங்களிடம்.

ஆரம்பத்தில் வேறு தளமாகவும் முடிவில் வேறு ஒன்றாகவும் வாசிக்க வைக்கிறது.

santhanakrishnan said...

வாசிக்கையில்
பலவித அர்த்தங்களை
கொடுக்கிறது அது.
மிக நன்று.

Sugirtha said...

நன்றி யாத்ரா! நன்றி லாவண்யா! நன்றி சந்தானகிருஷ்ணன்!

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்குங்க..
அழகா வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

Sugirtha said...

நன்றி கமலேஷ்.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...