Monday, July 5, 2010

இயல்பு

மலர் வீழின்
இலகுவாய் சுமந்திருந்து
அமிழ்த்தும் பாரங்களை
மூழ்கடித்து வீழ்த்தி
அசூயைகள் ஒதுக்கி
பறவைகளின் எச்சங்கள் விழுங்கி
பழகியிராத வழிகளும்
பயங்களற்று பயணித்து
திசையறியா வனங்களிலும்
பாதைகள் அமைத்து
வளைந்து நெளிந்து
மேலேறி கீழிறங்கி
சலனமற்று பரவி
பரவசமாய் ஆர்பரித்து
என்னில் மகிழ்ந்திருந்தவனின்
தாகங்கள் தீர்த்து
முத்தமிட்டு கடந்து
விரைகிறேன் நெடுந்தூரம்
இலக்குகளற்று
பயணமே முதல் முடிவாய்

4 comments:

உயிரோடை said...

அம்மாடி நவீன கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா... ம்ம் மொழி நல்லா இருக்கு.

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...அழகா எழுதி இருக்கீங்க..

Li. said...

:-) உங்கள் கவிதையின் அர்த்தம் புரிவது எனக்கு பிடித்த விளையாட்டு.. கொஞ்சம் கொஞ்சமாய் அடுத்த அடுத்த கடி நிலைகளுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.. நல்ல இருக்கு...

@உயிரோடை : செம்மொழியாச்சே !

Sugirtha said...

நன்றிங்க லாவண்யா! :)
நன்றிங்க கமலேஷ்! உங்களோட கவிதைகள் இப்போதான் படிக்க துவங்கி இருக்கேன். அற்புதமா இருக்கு ஒவ்வொன்னும்.
அப்டியா ஒளி, வாழ்த்துக்களும் நன்றியும்! :)

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...