Tuesday, May 11, 2010

பணிப் பெண்

அலுவலகம் வரும் முன்
இன்னும் பால்மணம் மாறா
என் செல்லக் குழந்தையை
வழியில் காப்பகத்தில் விட்டு
என்றும் சொல்வதை போலவே
இன்றும் சொன்னேன்
பத்திரமா பாத்துக்கோங்க
நீல பாக்ஸ்ல இருக்கறத
இப்போ கொடுத்துடுங்க
பாலை பிரிட்ஜ்ல வெச்சுடுங்க
ஒரு மணி நேரம் கழிச்சு
மறக்காம கொடுங்க
கொடுத்த பிறகு தூங்க வெச்சுடுங்க
அப்பப்போ போன் பண்ணறேன்
ஆயாவும் பொறுமையாக கேட்டு
புன்னகைத்து வழியனுப்பினாள் இன்றைக்கும்

கலங்கிய கண்களுடன்
அலுவலகம் வந்து
பரபர வேலைகள் முடித்து
இ-மெயில் செய்துவிட்டு
குழந்தை என்ன செய்கிறதோ
என்ற எண்ணத்தின் முடிவில்
காப்பகத்துக்கு தொடர்பு கொள்ள
என் குழந்தையின் அழுகுரலில்
நனைகிறதென் மேலாடை

4 comments:

யாத்ரா said...

:)

நல்லா இருக்கு சுகி

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்கு இனியா. வாழ்த்துக‌ள்

சுரேஷ் குமார் மு said...

Akka,
Is this happening in your life? Lets not allow it.....

Li. said...

// குழந்தையின் அழுகுரலில் நனைகிறதென் மேலாடை..//

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...