Friday, March 5, 2010

வெட்க நிலாக்கள்

கீழ் மூக்கில்
எதையோ
இழுத்து இழுத்து
ரசித்து சுவைக்கும்
ஒரு கிளியின்
ஆர்வத்தோடு
உனைச் சுவைக்க
நான் நெருங்க

கூச்சலிடும்
கிளிக் குஞ்சுகளாய்
என்னை உன்னிடம்
நெருங்க விடாது
பின் இழுத்துக் கொள்கிறது
இந்த வெட்கம்

எத்தனை முயன்றும்
வெட்கம் தொலைத்து
வெளிவர முடியாத தவிப்பில்
உன்னை பார்க்கையில்
கண்களில் வழியும்
குறுஞ்சிரிப்போடு
நீயும் ஏதேதோ
செய்கிறாய்

கடைசி முயற்சியாய்
பல வண்ணக் குப்பிகளில்
என் வெட்கத்தை நிரப்பி
இறுக மூடி
கிளைக்கொன்றாய்
அதில் தோரணம் அமைக்கிறாய்

தொந்தரவுகளற்று
நிசப்தத்தின் இசைக்கு
இசைந்தபடி
நம்மை மறந்து
ஆழ்ந்து நேசிக்கையில்
உயிர்பெற்று பிரகாசிக்கும்
வெட்க நிலாக்கள்
பூரண வெளிச்சத்தில்
கொஞ்சும் கிளிகள்

6 comments:

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு சுகி

"உழவன்" "Uzhavan" said...

arumaiya irukku

Sugirtha said...

நன்றிங்க உழவன்!

நன்றி யாத்ரா! :)

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு சுகிர்தா.

ராஜா சந்திரசேகர் said...

சுகி
கிளி உருவகமும் வெட்க பாவங்களும்
சரியான சித்திரங்களாகி இருக்கின்றன கவிதையில்.வாழ்த்துக்கள்.நேத்ரா நலமா?

Sugirtha said...

நன்றி லாவண்யா!

நன்றிங்க ராஜா! நேத்ரா நல்லா இருக்கா! :)