Monday, December 14, 2009

இணைந்த கைகள்

இருவரும் மாறி மாறி
காகிகத்தில்
இடது கை விரல்களை
விரித்து வைத்து
விரல் வடிவம்
வரைந்தபடி இருந்தோம்
ஒரு கட்டத்தில்
விளையாட்டு சலித்து
உன் காகித்தை
கசக்கி அறையின்
மூலையில்
எறிந்து விட்டுப்
போய்விட்டாய் நீ
பின்னே ஓடி வந்து
நீ படி இறங்கிப்
போனதை
உறுதி செய்து கொண்டு
கசங்கிய
உன் காகிதத்தின்
தாள் நீவி
உன் வெற்றுக் கையுள்
என் கை வைத்து
நிரப்பினேன்
காகிதக் கையில்
ரேகை வரிகள்
முளைக்கிறது
மெதுவாய்
முதலிரு கோடுகள்
இணைகிறது
மென்மையாய்
காகிதம் துடிக்கிறது

5 comments:

Li. said...

வீசிச் சென்ற காகிதத்தில்
வீசும் காதல்..

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு சுகி.

இந்தக் கவிதையின் உணர்வுத்தளம் ரொம்பப் பிடித்திருக்கிறது.

//காகிதக் கையில்
ரேகை வரிகள்
முளைக்கிறது// அருமை.

மண்குதிரை said...

nice...

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌ சுகிர்தா

Sugirtha said...

நன்றி Li!
விரிவான கருத்துக்கு நன்றி யாத்ரா! :)
நன்றி மண்குதிரை!
நன்றி லாவண்யா!

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...