Monday, November 16, 2009

ஒற்றை புள்ளி

உற்றுப் பார்க்கிறேன்
மெல்ல சுற்றத் தொடங்கியது
முதலில் மெல்ல மெல்ல
பிறகு கொஞ்சம் வேகமாய்
அதற்கு பிறகு
இன்னும்
கொஞ்ச வேகமாய்
ஒரு கட்டத்தில் வேக வேகமாய்
பின் திடீரென நின்று போனது
ஒற்றை புள்ளியாய்

12 comments:

உயிரோடை said...

ஒற்றைப்புள்ளி தானே ப‌திவிக்கும் அனைத்திற்க்கும் தொட‌க்க‌ம் ந‌ல்ல‌தொரு க‌விதை

யாத்ரா said...

மிக நல்ல கவிதை, உண்மை தான், ஒற்றைப் புள்ளியை நாம் எப்படியெல்லாம் அவதானிக்கிறோம் இல்லையா, ஆனா அது எப்பவும் புள்ளியாகவே நிலையாகத்தான் இருக்கு.

Sugirtha said...

நன்றி யாத்ரா! நன்றி லாவண்யா!

மண்குதிரை said...

ம்ம் இதுவும் நல்லா இருக்கு

Sugirtha said...

நன்றி மண்குதிரை!

ராஜா சந்திரசேகர் said...

உற்றுப் பார்க்கிறேன்
மெல்ல சுற்றத் தொடங்கியது
முதலில் மெல்ல மெல்ல
பிறகு கொஞ்சம் வேகமாய்
அதற்கு பிறகு
இன்னும் கொஞ்ச வேகமாய்
ஒரு கட்டத்தில் வேக வேகமாய்
பின் திடீரென நின்று போனது
ஒற்றை புள்ளியாய்

i feel this poem needs some edit.sugi pls read this version.its my view only.

உற்றுப் பார்க்கிறேன்
மெல்ல சுற்றத் தொடங்கியது
மெல்ல மெல்ல
கொஞ்சம் வேகமாய்
இன்னும் கொஞ்ச வேகமாய்
வேக வேகமாய்
பின் நின்று போனது
ஒற்றை புள்ளியாய்

Sugirtha said...

உங்களோட view நல்லா இருக்கு ராஜா. அடுத்த முறை இன்னும் கொஞ்சம் better ஆ எழுத இது நிச்சயம் உதவும். நன்றிங்க!

Maddy said...

சுற்ற தொடங்கியது
ஒரு வட்டம்..
ஒற்றை புள்ளி மையத்தை
உற்று நோக்கினேன்
மெல்ல ஒரு புள்ளியாய்
பின் சிறு வளையமாய்
கொஞ்சம் பெரிதாய்
இன்னும் கொஞ்சம் பெரிதாய்
வேகமாய் அதிவேகமாய்
சுழன்று சுழன்று
சுருங்கி..........
வட்டம்
ஒரு பெரிய புள்ளியாய்
என் கண்முன்னே நின்று போனது!

Sugirtha said...

நன்றி Maddy!

Li. said...

மின் விசிறிக்கு ஒரு விசிறி... :-)

நல்ல கவிதைக்கு கரு தூணிலும் இருக்கும் fan-இலும் இருக்கும்னு மறுபடி ஒருமுறை நிருபித்து விடீர்கள்...

Sugirtha said...

நன்றி Li! ரொம்ப நாள் கழிச்சு இந்தப்பக்கம் வந்திருக்கீங்க!!:)

Li. said...

நீங்க தேடுனீங்க... நெஜமாவே யாரோ நம்மள தேடறாங்கனு நெனைக்கும்போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கு ....இல்ல ? :-) அதான் வந்திட்டேன் ...

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...