Saturday, October 10, 2009

வன மோகினி

அந்த வீட்டின் அருகே
மூங்கில் மரங்களுண்டு
அதில் மாலை நேரத்தில்
கூவித் திரியும்
குயில்களை தொடர்ந்து
ஒரு நாள் நானும் செல்ல
என்னை அடர் வனத்தின்
உச்சியில் விட்டு விட்டு

தொலைந்து போயின குயில்கள்
சுற்றிலும் பார்க்கையில்
புகையாய் இறங்கி நிற்கும்
பொதி மேகங்கள்
பெரும் பாறைகள்
அருகேயே அதன் குட்டிகள்
நிறைய மரங்கள்
அதில் சிவந்து நின்ற
சிறு சிறு பழங்கள்
என்றோ வடிந்திருந்த
அருவியின் தடம் பற்றி
நடந்தேன் நடந்தேன்
நீர் அடித்து வளு வளுப்பாய்
கிடந்த கற்களை பொறுக்கியபடி
மேல் செல்கையில்
ஒரு பெரும் பாறையின்
சிறு பிளவில் சிக்கிக்கொண்டு
பட படத்தது ஒரு நீண்ட சிறகு
மெல்ல விடுவிக்க
வெளியே வந்தது
ஒரு தேவதை

உற்றுப் பார்க்கையில்
நொடிக்கொரு முறை
மாறியததன் முகம்
பார்த்திருந்த ஒரு நொடியில்
வந்து போனதென் முகமும்


6 comments:

மண்குதிரை said...

wow excellent

enakku inthap payanam romba pitiththirukkirathu.

Sugirtha said...

நன்றிங்க மண்குதிரை!

சுகுணாதிவாகர் said...

நல்ல கவிதை!

மாதவராஜ் said...

நல்லா இருக்குங்க.

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.

Sugirtha said...

சுகுணா, மாதவராஜ், யாத்ராவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...