எதை நோக்கியது இந்தப் பயணம்?
தாய் விடுத்து, தந்தை விடுத்து,
கணவன் விடுத்து, குழந்தை விடுத்து,
யாருக்காக இந்த உழைப்பு?
எதை வேண்டி இந்தப் பயணம்?
என் குழந்தை என் அம்மாவிடம், ஆரோக்யமாய், சந்தோசமாய்!
என்னை புரிந்து கொள்ள யார்?
என் துயரம் போக்குவது யார்?
தனிமையும் துயரமும் என்னுள் புகுந்து ,
ஒவ்வொரு கணமும் என்னை உருக்குகிறது !
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
I have heard of Navadarshanam (Nd) through my friend Suma few years back. She mentioned to me that she had been to that place once for a gat...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
6 comments:
சொல்ல வார்த்தை இல்லை
ungal puridhalukku nandri ThihalmiLir!!
தவிர்ப்புகள் தேவை இல்லை,
தனிமை ஒரு துரம் இல்லை,
உறவை விடுத்து வந்த காரணத்தை "நாம்" உணந்தால்,
உரிய நடவடிக்கை எடுக்க தாமதம் இன்னும் ஆகவில்லை,
உறவை விடுத்து வந்த காரணத்தை, விரைவில நிறைவேற்ற வழி ஒன்று கண்டறிந்தால்,
தனிமை தானக சென்று விடும்,
நமது செல்லப் பிள்ளையின் தேவைகளை பூர்த்தி செய்ய, அவள் சிரித்து வாழ,
நமது இந்தப் பயணம் நல்வழியில் செல்லட்டும் !!
பறவைகள் துருவம் பறப்பது எதற்கு?
எறும்புகள் கனச்சுமை இழுத்து சுமப்பது எதற்கு?
நாணல்கள் ஒவ்வொரு காற்றுக்கும் வளைந்து மடிவது எதற்கு?
பயணத்தின் முடிவில்..
சுமையின் இறக்கத்தில்..
மீண்டும் நிமர்கையில்,
வாழ்க்கை இருக்கும் நம்பிக்கையில்...
@ Li.
உங்கள் இனிய வார்த்தைகளுக்கு நன்றி. I've read all your comments. Thanks for that and for visiting my blog too. Have a nice time!
Post a Comment