Friday, January 30, 2009

எழுத்தாளன்

கவலைப்படாதே
கதையில் வராது
நம்பிப் பகிர்ந்த அந்தரங்கம்

Wednesday, January 28, 2009

என் மகள்

இன்றெல்லாம் அவள் நினைவு,
நாசியில் துவங்கி இதயத்தில் மணக்கிறது
அவளின் பால் மணம்!

Monday, January 26, 2009

கவிதை எனும் மருந்து!

நீ எனக்கு எழுத நேரமில்லை என்றாய்,
என் தோழிக்கு அத்தனை பக்கங்களும் எப்படி நிரப்பினாய்?
என் முழு இருதயம் முழுக்க உன்னை நிரப்பி நேசித்தேன்.
ஏன் என்னிடமிருந்து விலகி விலகி சென்றாய்?
என் கவிதைகள் சொல்ல சொல்லி கேட்டு ரசித்தாய்.
அது உனக்கானது என்று புரியாமலா ரசித்தாய்?

என்னை தவிர்த்து அவளை நேசித்தாய்!
உன் புகைப்படம் பார்த்து நான் எத்தனை நாட்கள் குமுறி அழுதேனென தெரியுமா
உனக்கு?
என்னோடு என்னை தேற்ற யாருமே இல்லை அப்பொழுது.
என் இதயம் எத்தனை காயப்பட்டது தெரியவில்லை,
அது முழுக்க வலி ஆழமாய் ஓடியது.

அவள் உருவானதோ நெருப்பின் வண்ணத்தில்,
நானோ நெருப்பு விட்டு சென்ற சுவடின் நிறத்தில்,
அது மட்டும் தான் காரணமா நீ என்னை விட்டு செல்ல??

என் வலிகள் புரியவில்லை உனக்கு.
எத்தனை கெஞ்சியபோதும் இறங்கவே இல்லை நீ...
உனக்கு நிராகரிப்பின் வலி உணர்த்த,
ஒரு முறை மட்டுமே நான் நிராகரித்த வலியை தாங்கவில்லை நீ...

என்னை முழுவதுமாய் உதறி சென்றாய்,
நீ கொடுத்த தழும்பின் பள்ளத்தை இப்போது நான் கவிதையால் நிரப்புகிறேன்...

Wednesday, January 21, 2009

நான் மற்றும் தனிமை...

தனிமை ஒரு இனிய அனுபவம்,
அதன் மௌனம் இப்போது இனிய சுகம்,
என்னோடு அது...
வானம் ரசிக்கிறது,
தேன் ருசிக்கும் பட்டாம்பூச்சி பார்க்கிறது,
வீடடையும் குருவியின் குதூகலம் காண்கிறது,
சமயங்களில்
என்னோடு அழுகிறது,
என் நிஜம் புரிகிறது,
தேற்ற முடியாமல் தள்ளி நிற்கிறது,
என் மௌனம் அதற்கு புரிகிறது,
என்னோடு அதையும் அனுபவிக்கிறது,
என்னை எனக்காகவே நேசிக்கிறது,
என்னை விட்டு விலகாமல் எப்போதும் துணை வருகிறது...

Sunday, January 18, 2009

Granma and I have a 'Secret Garden'

Of late I developed more liking for trees and plants. So I'm all for growing plants and trees at home now. Last time when I came to native there was one custard apple plant coming out near curry plant. I told my mom not to cut that. But then this time when i came here it was already cut. When I ask my mom, she says it's not good for the family if we grow that near the house. I don't have any belief in that. Started getting angry. My only hope now is my grandma. I love my grandma though at times she tests our patience to the core...She is 80 + now but then she is always active. She walks few miles and goes to our farm everyday. She'll not listen to anyone but for me. If I tell her to take care of my plant she will not let anyone cut at least they'll have that fear.

There is one more small one coming out now. I told her to take care of that one and one more plant. She has hidden that 2 plants now by covering with some bamboo basket. Today when I removed that and saw the plants..it's been watered and very fresh...I don't know how long can she protect that but then we have a 'SECRET GARDEN'. This feel is lovely and I'll cherish that forever.

அப்பாவும் நானும்

நானும் அப்பாவும் last week morning walk போனோம். மார்கழியில் அப்பாவோடு 5 மணிக்கு தென்னந் தோப்புக்குள்ள வாக்கிங் போறது ரொம்ப ரம்யமா இருந்தது. அதுவும் பௌர்ணமி நிலவின் ஒளியில்...ஒரு பக்கம் சோள கதிர்கள், மறு பக்கம் தோப்பு, நான் என் மனதுக்குள் மிக ஆழமாய் அந்த கணத்தை பதித்துக்கொண்டேன். அந்த சுத்த காற்று நான் எத்தனை எத்தனை miss பண்ணரேன்னு எனக்கு சொல்லிட்டே இருந்தது...

Saturday, January 3, 2009

பேச துடிக்கும் உணர்வுகள்...

அன்று ஏன் சொல்லவில்லைஎன்பதற்கு
என்னிடம் காரணம் எதுவும் இல்லை.
இன்று ஏன் சொன்னேன் என்பதற்கும்,
என்னிடம் காரணங்கள் ஏதுமில்லை.
மன்னிக்கவும், உன்னைக் காயப்படுத்தியிருந்தால்...
அன்று குழப்பங்கள் சூழ்ந்து நின்றேன்,
அதனால் சொல்லவில்லை.
இன்று உன்னிடம் சொல்லி விட்டேன்.
சொல்லிய பின் குழப்பங்கள் சூழ்ந்து நிற்கிறேன்.
அன்று சொல்லியிருந்தால் என்னவாகியிருக்கும்? தெரியவில்லை.
இன்று சொன்னதாலும் எதுவும் மாறிவிடவில்லை.
எனினும் சில விஷயங்களை மட்டும்...
இன்றும் உன்னிடம் சொல்ல முடியவில்லை.
உனக்கும் எனக்கும் மட்டும் புரிந்தது,
ஊருக்கு புரியாது, புரியவும் வேண்டாம்.
நமக்கு மட்டும் புரிந்த, நமக்குள் மட்டும் இருந்து விட்டு போகிற,
இந்த அழகை நான் ரசிக்கிறேன்.
நான் உணர்ந்ததை நீயும் உணர்ந்ததில்
எனக்கு நிறைய மகிழ்ச்சி.
இந்த அழகு, இப்படியே, இப்போதுபோலவே
எப்போதும் ரசனைக்குரியதாய் நம் மனதுக்குள் மட்டும் பேசிக்கொண்டே இருக்கட்டும் ...


 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...