நீ எனக்கு எழுத நேரமில்லை என்றாய்,
என் தோழிக்கு அத்தனை பக்கங்களும் எப்படி நிரப்பினாய்?
என் முழு இருதயம் முழுக்க உன்னை நிரப்பி நேசித்தேன்.
ஏன் என்னிடமிருந்து விலகி விலகி சென்றாய்?
என் கவிதைகள் சொல்ல சொல்லி கேட்டு ரசித்தாய்.
அது உனக்கானது என்று புரியாமலா ரசித்தாய்?
என்னை தவிர்த்து அவளை நேசித்தாய்!
உன் புகைப்படம் பார்த்து நான் எத்தனை நாட்கள் குமுறி அழுதேனென தெரியுமா உனக்கு?
என்னோடு என்னை தேற்ற யாருமே இல்லை அப்பொழுது.
என் இதயம் எத்தனை காயப்பட்டது தெரியவில்லை,
அது முழுக்க வலி ஆழமாய் ஓடியது.
அவள் உருவானதோ நெருப்பின் வண்ணத்தில்,
நானோ நெருப்பு விட்டு சென்ற சுவடின் நிறத்தில்,
அது மட்டும் தான் காரணமா நீ என்னை விட்டு செல்ல??
என் வலிகள் புரியவில்லை உனக்கு.
எத்தனை கெஞ்சியபோதும் இறங்கவே இல்லை நீ...
உனக்கு நிராகரிப்பின் வலி உணர்த்த,
ஒரு முறை மட்டுமே நான் நிராகரித்த வலியை தாங்கவில்லை நீ...
என்னை முழுவதுமாய் உதறி சென்றாய்,
நீ கொடுத்த தழும்பின் பள்ளத்தை இப்போது நான் கவிதையால் நிரப்புகிறேன்...
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
No comments:
Post a Comment