Monday, February 25, 2013

சும்மா ஒரு ஹலோ

அமுதன்,

நலமா? போன வாரம் உங்களை பார்த்தது எனக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது. நீங்கள் என்னோடு நிறைய பகிர்ந்து கொண்டீர்கள். மிகவும் இயல்பாக இருந்தீர்கள். நண்பர்களோடு அமர்ந்திருந்த இரவில் உச்ச போதையில் நீங்கள் என்னிடம் சொன்னீ ர்கள் உங்களுக்கு பெண்களைப் பிடிக்கும் என்று. இன்னும் சரியாக சொல்லப் போனால் பெண்களை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று. ஆண்கள் போதையில் எப்படி இத்தனை அழகாக, உண்மையாக (உண்மை என்று நம்பலாமா:-)?) பேசுகிறீர்கள். சுற்றிலும் உயர்ந்து நின்ற மரங்கள் எத்தனை அமைதியாய் இந்த ஆர்ப்பாட்டங்களை கண்டு ரசித்தது.

என்னை வார்த்தைக்கு வார்த்தை தோழி என்று விளித்து உங்கள் தோழியாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நண்பர்களுக்கு இடையில் தான் கவிதை ஆகும் தருணங்கள் எத்தனை எத்தனை. எனக்கு உங்களிடம் கேட்க ஒரே ஒரு கேள்வி இருக்கிறது.  எப்படி அத்தனை பெண்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. இதைப் படிக்கும்போது நீங்கள் உரக்க நகைப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.இருந்தாலும் கேட்கத் தோன்றியது.

 நண்பர்களோடு இருக்கும்போது நாம் ஏன் சந்தோசமாக இருக்கிறோம் என்று  பேசிக் கொண்டோம். நான் அதை இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்கள் நம்மை விட்டுப் போய்விடுவார்கள் என்ற பயம் இன்றி மிக இயல்பாக இருப்போம் அதனாலா? ஏதாவதொரு வகையில் நாம் நம் நேசத்தை வெளிப் படுத்துவோம் அதனாலா? இந்த அன்பு நம்மை நசுக்காது அதனாலா? எனக்கு உறுதியாய் தெரியவில்லை அமுதன் ஆனால் நண்பர்கள் இல்லாத ஒரு வாழ்கை என்னைப் பொறுத்தவரை சாத்தியமில்லாதது . இப்படி உரையாட ஒருவரும் இல்லாத இரவில் கடிதமென ஒன்றை எழுதவேணும் நண்பர்கள் வேண்டும் இல்லையா?

அன்புடன்,
இனியா

8 comments:

யாத்ரா said...

//இப்படி உரையாட ஒருவரும் இல்லாத இரவில் கடிதமென ஒன்றை எழுதவேணும் நண்பர்கள் வேண்டும் இல்லையா?//

ம்,,,
மறுபடியும் நீங்கள் தொடர்ச்சியாக எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது,,,

Sugirtha said...

நன்றி யாத்ரா.

Maddy said...

I second Yatra here

Sugirtha said...

thanks Maddy...

shri Prajna said...

”நண்பர்கள் நம்மை விட்டுப் போய்விடுவார்கள் என்ற பயம் இன்றி மிக இயல்பாக இருப்போம் அதனாலா? ? இந்த அன்பு நம்மை நசுக்காது அதனாலா?”

இப்படி உரையாட ஒருவரும் இல்லாத இரவில் கடிதமென ஒன்றை எழுதவேணும் நண்பர்கள் வேண்டும் இல்லையா?

எவ்வளவு அழகாக கோர்க்கப்பட்ட உண்மையான வார்த்தைகள் இவை..
எனக்கு மொத்த கடிதமுமே பிடித்திருக்கிறது...

Sugirtha said...

நன்றி ஸ்ரீ...

அகநாழிகை said...

ஹ்ம்ம்ம்... அருமை.

Sugirtha said...

நன்றி வாசு!