Sunday, September 19, 2010

இப்பொழுது விடியுமா

இல்லாத ஒன்றை
இருக்கிறதாய் எண்ணி கொள்வதும்
இருக்கிற ஒன்றை
இல்லை எனக் கொள்வதும்
இதோர் வேடிக்கையான மனது

எனக்கு பிடித்த நானாய்
மற்றும் எல்லோருக்கும்
பிடித்த நானாய்
இருந்தே
அலுத்துப் போகிறது எனக்கு

தேகங்களை உரித்து போட்டு
அலையும் காற்றுக்குள்
அரவமற்று
உயிரை புகுத்தி கொள்ளும்
உத்தி கற்பிக்கப்படுமெனில்
ஆங்கே முதல் மாணவியாய் நான்

அளந்து அளந்து பேசியது போதும்
வெட்கத்தை அவிழ்த்து விட்டே கேட்கிறேன்
வானை கிழித்து வரும்
மின்னலென வந்து தான்
எடுத்து போய்விடேன்
உன்னோடு என்னை

இந்நோய் முற்றிவிட்டது போல
பார்
ஏதேதோ பிதற்றியபடியே இருக்கிறேன்
உன்னை சேரும்
ஓர் வழி புலப்படுமா என

6 comments:

உயிரோடை said...

இலக்கற்று விரிந்திருக்கிறது கவிதை இனியா.

//அலையும் காற்றுக்குள்
அரவமற்று
உயிரை புகுத்தி கொள்ளும்//

வித்தியாசமான சிந்தனை

Sugirtha said...

நன்றிங்க உமாக்கா :)

rvelkannan said...

//இலக்கற்று விரிந்திருக்கிறது கவிதை இனியா//
நானும் இனியா

Sugirtha said...

நன்றிங்க கண்ணன்!

Li. said...

இனியா முத்திரை... இது உங்கள் கவிதை அல்ல... என் கவிதை... மனதில் இருந்து மையாய் மாறும் வழியில் தொலைந்த என் கவிதை...இன்னும் லட்சம் பேரின் கவிதை.. அருமை...

Sugirtha said...

நன்றி ஒளி! கேக்க சந்தோசமா இருக்கு... :)