நான் வசிக்கும் குடியிருப்புக்கு
அன்று அவள் புதியதாய் குடி வந்தாள்
என் இடத்திலிருந்து
அவள் வீட்டின் சமையலறை தெரிந்தது
அவளை பார்த்ததும் எனக்கு பிடித்தது
தினமும் காலையில் அவளைப் பார்ப்பேன்
ஒரு நாள் அவள் என்னை பார்த்து விட்டாள்
சில நொடிகள் என் கண்களையே பார்த்திருந்தாள்
அவள் கணவன் அலுவலகம் சென்றான்
அவள் உண்ண அமர்ந்தாள்
என்ன தோன்றியதோ எனக்கு
சுற்றிலும் பார்த்தபடியே
அவள் வீடு நுழைந்தேன்
அவளும் அனுமதித்தாள்
எனக்கும் உணவிட்டாள்
எங்களுக்கு அன்றாட வாடிக்கையானது இது
எங்கள் தனிமையை பகிர்ந்துகொண்டோம்
ஒரு நாள் இன்னொருத்தி
இவளைத் தேடி வந்தாள்
அவள் என்னை கவனிக்கவில்லை
அல்லது கண்டுகொள்ளவில்லை
தன் கழுத்தை தடவி
ஒரு கயிறை இவளிடம் காட்டி
ஆவேசமாய் ஏதேதோ சொன்னாள்
எனக்கு புரியவில்லை
அவள் சென்றதும் இவள் நிறைய அழுதாள்
எனக்கு தேற்றும் வழி தெரியவில்லை
பரிதவித்து என் பாஷையில் ஏதேதோ சொன்னேன்
அவளுக்கு விளங்கவில்லை
அங்கும் இங்கும் மாறி மாறி அமர்ந்தேன்
அவள் சேலையின் நுனியை என் மூக்கால் பற்றினேன்
என்னை நிராகரித்து
ஒரு பெட்டி எடுத்து
தன் உடைகளை நிறைத்தாள்
கிளம்புவதற்கு முன்
ஒரு முறை திரும்பி என்னை பார்த்தாள்
மறுபடி பெட்டியை திறந்தாள்
இடமாறி அமர்கையில் விழுந்திருந்த
என் இறகுகள் இரண்டை
எடுத்து வைத்து பூட்டினாள்
தெருவை கடந்து மறைந்து போனாள்
Saturday, October 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
10 comments:
நட்பு, பிரிவு, ஞாபக சின்னம் எல்லாம் எவ்வளவு அழகாக சொல்லி விட்டீர்கள்....
nice.......
nithaanamaana vasippil purikirathu
அருமை. அற்புதமான சொற்சித்திரம். பறவையின் மொழியில் எல்லாம் விளங்குகிறது. வாழ்த்துக்கள்.
நன்றிங்க Maddy! நன்றிங்க மண்குதிரை! நன்றிங்க மாதவராஜ்!
உங்களின் பாராட்டு எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது.
இதை ஒரு சிறுகதையாக போலவே வாசித்தேன். நல்ல கவிதை. வாழ்த்துகள்
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க சுகிர்தா
//ஒரு பெட்டி எடுத்து
தன் உடைகளை நிறைத்தாள்
கிளம்புவதற்கு முன்
ஒரு முறை திரும்பி என்னை பார்த்தாள்
மறுபடி பெட்டியை திறந்தாள்
இடமாறி அமர்கையில் விழுந்திருந்த
என் இறகுகள் இரண்டை
எடுத்து வைத்து பூட்டினாள்
தெருவை கடந்து மறைந்து போனாள்//
உணர்வு ரொம்ப அருமையாக காட்சியாகவும் வார்த்தைகளாகவும் வந்திருக்கிறது.
அன்பு இனியா,
அழகான கவிதை, இந்த பதிவின் வாசிப்புக்கு பிந்தைய கனங்கள், கவிதையின் வீர்யத்தை இன்னும் அடர்த்தியாக்குகிறது.
வாழ்த்துக்கள்!
அன்புடன்
ராகவன்
நன்றி ராகவன் உங்க வருகைக்கும் பகிர்வுக்கும்.
சுகி
கவிதை அழகு.
அது தருகிற வலி ஆழம்.காலம் முறித்துப் போடும் பிரியங்களின் கூட்டுத்தொகை அதிகம்தான்.
நன்றி ராஜா!
Post a Comment