Saturday, August 15, 2009

சிறைக் காலம்

மாலை நேர மொட்டை மாடி
தனிமையில் நான்
தூரத்தில் தெரியும் பச்சை மலை
மலை குத்தி நிற்கும் மேகம்
பிசிற் பிசிறாய் தன்னை விடுவித்து
மறுபடியும் ஒன்றோடொன்று கலந்து
மௌனமாய் மிதக்கிறது
பார்வையை பிரித்து
கீழே பார்க்கையில்
தூரத்தில் ஒரு குடிசை
வாசலில் கால் நீட்டி
அமர்ந்திருக்கும் வயதான மூதாட்டி
குடிசையை ஒட்டிய
மலை அடிவாரத்தில் மேயும் ஆடுகள்
விளையாடி முடித்து வீடு திரும்பும்
குழந்தைகளின் ஆரவாரம்
இப்படி பதிவு செய்திருந்த
மனதை நெருங்கிய காட்சிகள்
அத்தனையும் நினைத்து பார்க்கையில்
இன்றும் நெகிழ்கிறது மனது
இப்போது குடியிருக்கும்
அடுக்கு மாடி கட்டிடத்தில்
அதே மாலை நேரம்
வெளியே பூட்டியிருந்த எதிர் வீட்டில்
பால்கனி கம்பிகளை பிடித்தபடி
ஒரு சின்ன தேவதை

8 comments:

பா.ராஜாராம் said...

நல்லா இருக்குங்க சுகிர்தா.

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு சுகிர்தா.

//இப்போது குடியிருக்கும்
அடுக்கு மாடி கட்டிடத்தில்
அதே மாலை நேரம்
வெளியே பூட்டியிருந்த எதிர் வீட்டில்
பால்கனி கம்பிகளை பிடித்தபடி
ஒரு சின்ன தேவதை//

சிறைக்காலம் :(

மண்குதிரை said...

irantu katsikalai nalla pathivu panniyirukkireengka sukirthaa

thodarnthu ezhuthungka

Sugirtha said...

நன்றிங்க ராஜாராம்!
நன்றி யாத்ரா!
நன்றிங்க மண்குதிரை!

நேசமித்ரன் said...

சுகிர்தா

கவிதை
நல்லா இருக்குங்க

Sugirtha said...

நன்றிங்க நேசமித்ரன்!

Maddy said...

அருமையான காட்சிகளை கண்முன்னே நிறுத்திட்டு நிஜத்தையும் பொட்டுன்னு போட்டு உடச்சீடீங்க!

Sugirtha said...

நன்றிங்க Maddy வருகைக்கும் பகிர்தலுக்கும்!