Friday, July 31, 2009

தளும்பும் நினைவுகள்

நான் பார்க்கும்
இடங்களிலெல்லாம்
உன் பெயரையோ
உன் நினைவுகளையோ
பரப்பி வைத்திருக்கிறாய்
எனக்கு மட்டும் தெரியவென்று
நான் பார்த்தவுடன்
அதையே காட்டி காட்டி
அழைத்து செல்கிறாய்
நான் நீ
என்றில்லாது
நாமாயிருந்த
அந்த நாட்களுக்கு
நினைவுகள் தளும்பும்
அந்த கணங்களின்
சுமையில்
நீ எனக்கு கொடுத்த
அந்த தலையாட்டி பொம்மை
தலையை ஆட்டி ஆட்டி
கேட்டுக்கொள்கிறது
நான் உனக்கு சொல்வதை
எப்போதும் புன்னகைக்கும்
அதன் கண்களிலும் வழிகிறது
உனக்கான என் மாறாத நேசம்

4 comments:

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு சுகிர்தா,

//நினைவுகள் தளும்பும் அந்த கணங்களின் சுமையில் நீ எனக்கு கொடுத்த அந்த தலையாட்டி பொம்மை தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக்கொள்கிறது நான் உனக்கு சொல்வதை//

அருமை.

Sugirtha said...

நன்றி யாத்ரா!!

மண்குதிரை said...

sugirtha rompa nalla irukku evvalavu nal ithai paarkka thavarivitteene

thodarnthu ezhuthungkal

Sugirtha said...

நன்றிங்க மண்குதிரை!