Saturday, October 8, 2011

ஏவாளின் ஆதாம்

திருத்தி எழுதப்பட்ட
இப்புத்தகத்தில்
ஆதாமல்ல இந்த ஏவாளே
முதல் மனுஷி

தனியே இருந்த அவளை
சிசு தாங்கு சுவருதிர்ந்து
கசியும் அடர் உதிரமாய்
இடையற்ற வெறுமை
துவாரம்தோரும் துளிர்த்து
கிளைத்தூர்ந்து துரத்த

ஏதேன் தோட்டத்தின்
வசந்தங்களை கொய்து
குழைத்து தீட்டிய ஓவியத்தில்
முளைத்த ஆதாம்
இப்போது ஏவாளில்
பருவங்களை விதைக்கிறான்

11 comments:

Ragav Sri said...

Nalla Padaippu Sugi. Nice words.

Ragav Sri said...

Nalla Padaippu Sugi!!!

"ஆதாமல்ல இந்த ஏவாளே
முதல் மனுஷி"

Nice pa

Sugirtha said...

நன்றி சுமதி! முதல் வருகையும், கமெண்டும் சந்தோசமா இருக்கு :-)

shri Prajna said...

என் அன்பு சுகிர்தா...

”சிசு தாங்கு சுவருதிர்ந்து
கசியும் அடர் உதிரமாய்
இடையற்ற வெறுமை”
இப்படி ஒரு தனிமையை எப்படி சொல்லமுடிந்தது..excellent..

பின் வரும் வரிகளும் அருமை..
எல்லாப்பருவங்களையும் விதைக்கத்தான் வேனும்
தீராத்தனிமையை தொலைக்க

ஒரு வேண்டுகோள்..
எழுது சுகி...இன்னும்...

Sugirtha said...

அன்பு ஸ்ரீ,

உன்னோட கமெண்ட் ரொம்ப சந்தோசமா இருக்கு.
எழுதறேன் பா :-)

உயிரோடை said...

சுகி ரொம்ப நாளை பிறகு வாசிக்கிறேன். கவிதை மொழியில் நல்ல மாற்றம். வாழ்த்துகள்

Gowripriya said...

”சிசு தாங்கு சுவருதிர்ந்து
கசியும் அடர் உதிரமாய்
இடையற்ற வெறுமை”


அருமை..

Sugirtha said...

நன்றி லாவண்யா! ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து எப்படி இருக்கீங்க?

Sugirtha said...

நன்றி கௌரி...

அன்பேசிவம் said...

பேக் வித் பேங்...
அட்டகாசம் சு. இன்னும் எழுதுங்க..

Sugirtha said...

Murali - Thank you!
ம்ம் எழுதலாம்... :)