Thursday, November 18, 2010

காரணங்கள்

ஒன்று
இரண்டு
மூன்று என
ஆயிரம் காரணங்கள் வரை இருக்கலாம் என்னிடம்
பறவைகள் கூடடைவதை
இரைச்சல்கள் என சபிக்கவும்
ஒற்றைப் பனித்துளி ஏந்திய
ரோஜாவை அலட்சியித்தொதுக்கவும்
சம்பங்கி பூவினை சுற்றியாடும்
தேன்சிட்டை வெறுக்கவும்
கண்டதும் காலை நக்கும்
நாய்க்குட்டியை அருவெருக்கவும்
கலகலப்புகள் நிறைந்திருக்கும் கூடத்தில்
தனிமைப்படுத்திக்கொள்ளவும்
வாழ்தலின் சுவாரசியங்களை
என்றைக்குமாய் மறுதலிக்கவும்
இவைகளற்ற இன்றோ
நீ இருந்தாய்
நீ மட்டுமே இருந்தாய்

9 comments:

Unknown said...

அவைகள் இருந்தாலும் தெரியப்போவதில்லை
நீ அருகில் இருக்கும்பொழுது ...
கவிதை அருமை !

Sugirtha said...

நன்றிங்க சுரேந்திரகுமார்...

santhanakrishnan said...

மீண்டும் ஒரு காதல் கவிதை.
வழக்கம் போல் வசீகரம்.
நிறைய எழுதுங்கள்.

உயிரோடை said...

கவிதை நன்று

Sugirtha said...

நன்றிங்க சந்தான கிருஷ்ணன் தொடர் வருகைக்கும், கருத்துக்கும்! முயற்சிக்கிறேன் :)


நன்றி லாவண்யா!!

போளூர் தயாநிதி said...

//வாழ்தலின் சுவாரசியங்களை
என்றைக்குமாய் மறுதலிக்கவும்
இவைகளற்ற இன்றோ
நீ இருந்தாய்//
parattugal
polurdhayanithi

Sugirtha said...

நன்றிங்க தயாநிதி முதல் வருகைக்கும், கருத்துக்கும்!

Learn said...

அருமை பாராட்டுக்கள்

Sugirtha said...

நன்றி..