Monday, September 6, 2010

குட் மார்னிங் தாத்தா

பரீட்சை நேரத்து மணியோசை
எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்
மரங்களுக்கடியில்
புத்தகக் குவியல்கள்
இலைகளை மேயும்
பட்டு புழுக்களாய்
பத்திகளை மேயும்
சுந்தரும் சாந்தியும்
எனக்கு நேற்று பார்த்த சினிமா
இப்பத்தான் ஞாபகம் வரணுமா
சாந்தீ இழுக்கிறேன்
நிமிரக் கூட இல்லை
இந்த பிள்ளை
எப்போவுமே இப்பிடித்தான்
யாரிடம் சொல்ல
நேற்றுப் பார்த்த கதையை
சுற்றிலும் பார்க்க
ஒரே பரபரப்பு
குட் மார்னிங் தாத்தா
வந்து விட்டிருக்கிறார்
குட் மார்னிங் தாத்தா
மிக பிரசித்தம் என் பள்ளியில்
அவர் வாக்கு அப்படியே பலிக்குமென
அவரை நெருக்கிக் கொண்டு
தாத்தா குட் மார்னிங்
குட் மார்னிங் தாத்தா
கூட்டத்தில் நானும் தான்
இன்னிக்கு அந்த சனியம் புடுச்ச
சமூக அறிவியல் பரீட்சை வேறயா
தாத்தா வாக்கு என்னவோ எனக்கு
அட சீக்கிரம் இங்க பாருய்யா
ஆ என்னத்தான் பாக்குறாரு
இப்போ சொல்லிருவாரு
நீ பெயிலாப் போயிருவ
அடச்சீ
இந்த கார்த்தி முன்னால
ஏன்யா சொன்ன
மனசுக்குள்ள சொல்லிகிட்டாலும்
சத்தமாத்தான் சொன்னேன்
இந்த வாக்கெல்லாம் நான் நம்பறதில்லப்பா

6 comments:

மாதவராஜ் said...

ரசித்தேன்.

Sugirtha said...

நன்றிங்க மாதவராஜ், வருகைக்கும் கருத்துக்கும்!

உயிரோடை said...

நல்லா இருக்கு இனியா.

Sugirtha said...

நன்றி லாவண்யா!

rvelkannan said...

ஐ ... ஐ .. நல்ல இருக்கு சுகிர்தா

Sugirtha said...

கண்ணன், நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!:)