Sunday, September 5, 2010

உமாக்கா

உமாக்காவை மிக பிடிக்கும் எனக்கு
உமாக்கவை பார்த்த உடனேயே பிடித்தது
உமாக்கா என் அறைத் தோழி
உமாக்காவுக்கு மிக பெரிய கண்கள்
உமாக்கா பெரிய பொட்டு வைப்பாள்
உமாக்காவுக்கு அழகானதொரு தெத்துப் பல்
உமாக்கா ஒரு குஜராத்தி
உமாக்கா சென்னை வாசி
உமாக்காவுக்கு சிரிக்கும் உதடுகள்
உமாக்காவுக்கு அமைதியான முகம்
உமாக்காவுக்கு நைட் ஷிப்ட், எனக்கு பகலில் வேலை
உமாக்காவை நான் அரிதாய்ப் பார்ப்பேன்
உமாக்காவுக்கு குட் மார்னிங் நோட் எழுதி அவள் கட்டிலில் ஒட்டி வைப்பேன் தினமும்
உமாக்கா எனக்கு வேலை கிடைத்தபோது ஒரு வாழ்த்து அட்டை கொடுத்தாள்
உமாக்கா எல்லாரிடமும் ஜஸ்ட் கால் மீ உமா, டோன் கால் மீ அக்கா என்றாள்
உமாக்கா என்னை மட்டுமே அக்கா என அழைக்க அனுமதித்தாள்
உமாக்காவோடு ஒரு பத்து முறை பத்து நிமிடங்கள் பேசியிருப்பேன்
உமாக்காவுக்கு இரண்டு குழந்தைகள்
உமாக்கா தன் கராத்தே மாஸ்டரை காதல் கல்யாணம் செய்து கொண்டாள்
உமாக்காவுக்கு அப்போது பாய்ஸ் படம் பிடித்திருந்தது
உமாக்கா எப்போதும் ஆங்கிலப் புத்தகம் படிப்பாள்
உமாக்கா என்னிடம் ஹாரி பாட்டர் வாங்கிப் படித்து பிடித்திருந்தது என்று சொன்னாள்
உமாக்காவிடம் நான் செய்த தவறொன்றை சொன்னேன்
உமாக்கா நீ அதை செய்திருக்க கூடாது என்றாள்
உமாக்கா நானும் உன்னோடு வருகிறேன் நாம் இதை சரி செய்யலாம் என்றாள்
உமாக்கா என்னோடு வந்து எனக்காக பேசினாள்
உமாக்கா என் தவறை சரி செய்தாள்
உமாக்கா சென்னைக்கு மாற்றலாகி போய்விட்டாள்
உமாக்கா ஒரு தேவதை
உமாக்காவை மிக பிடிக்கும் எனக்கு

4 comments:

rvelkannan said...

நிஜமாக (மிக) சில மாற்றங்கள் செய்தால் நல்ல கவிதை இது சுகிர்தா ...
வாழ்த்துகள்

Sugirtha said...

நன்றிங்க கண்ணன். வருகைக்கும் கருத்துக்கும்.

உயிரோடை said...

உமாக்கா என்று தான் என் அக்கா மகன்கள் அனைவரும் என்னை அழைப்பார்கள். :)

சில விசயங்களை தவிர்ந்து சொல்லி இருக்கலாம் அல்லது ஒரு கட்டுரை போல எழுதி இருக்கலாம் சுகி

Sugirtha said...

அப்டியா, கேக்க சந்தோசமா இருக்கு லாவண்யா :)
உங்கள் கருத்திற்கு நன்றி, கவனத்தில் கொள்கிறேன்.