திரண்டு நிற்கும் வயது
தொடுகையில் கனிகிறது
சுருண்டு விரிந்து
திமிறித் துடிக்கிறது
உச்சி முடி பற்றி இழுத்து
உதடுகளில் சொல்கிறது
தேவையை
ஊர்கிற விரல்களில்
வெடிக்கிறது வெட்கம்
புரண்டு நழுவி
சேர்ந்து விலகி
உருகி கரைந்து
எல்லாம் தீர்ந்ததும்
மறுபடி துவங்க
மனது கேக்க
களைத்து புன்னகைக்கிறதுடல்
Friday, June 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
11 comments:
இயல்பான அருமையான கவிதை
O, what an expression, really superb, the words u select to flower this poem is awsome.
sorry there is no tamil font here.
ரொம்ப உண்மையா இருக்குங்க.
அழகாக.
சுகிர்தா,
அருமையான வெளிப்பாடு. இந்தக் கவிதையில் எனக்குத் தோன்றுவது என்னவென்றால் இது வாசிப்பு சுவாரசியம் உள்ள கவிதைதான் இது என்றாலும், பரவலாக எழுதக்கூடி கரு. ஏற்கனவே எழுதப்பட்ட என்னுடைய கவிதை கூட இது போல ஒன்று இருக்கிறது. மற்றபடி கவிதையின் வரிகள் இயல்பாக உள்ளது. ‘வயது‘ என்ற வார்த்தை மட்டும் இல்லாமலிருந்திருக்கலாம்.
‘வெக்கம்‘ என்ன சொல்லை ‘வெட்கம்‘ என்றே போடலாமே.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நல்லா இருக்குங்க..
நல்லா இருக்குங்க..
நன்றி நந்தா.
நன்றிங்க யாத்ரா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ராவணன்.
வெட்கம் மாற்றிவிட்டேன். உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க வாசுதேவன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கோகுலகிருஷ்ணன்.
சரளமாய் வருகிறது வரிகள்.
உங்கள் மற்ற பதிவுகளையும் படிக்கணும்.
மாதவராஜ் - உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
அருமையான கவிதை.
//
எல்லாம் தீர்ந்ததும்
மறுபடி துவங்க
மனது கேக்க
களைத்து புன்னகைக்கிறதுடல்
//
அட்டகாசமான வரிகள்.
வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி Joe
Post a Comment