நினைக்கிற பொழுதில்
வந்துவிடுவதில்லை நீ
நடு இரவில் மெல்ல உரசிப் போகிறாய்
அகல கண்கள் கொண்டு விகசித்து விவரிக்கையில்
என்னை உன் காட்சிகளால் நிரப்புகிறாய்
அவசரமாக எழுந்து
உன்னை எழுத முயல்கையில்
எங்காவது ஓடி ஒளிந்துகொள்கிறாய்
நெருங்கையில் வெட்கி விலகும்
இளம் காதலி போல
விளக்கை அணைத்து உறங்கலாம் என்று
படுக்கையில் தலை சாய்க்கையில்
என்ன சொல்லி போனாய்
யோசித்து யோசித்தே
விடிகிறது என் இரவு
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்...
-
குழந்தைகளற்றது என் தெரு பஞ்சு மிட்டாய், பலூன் என எவன் தொல்லையுமில்லை அன்று கவிதை விற்க வந்தவனை வாசலோடு அனுப்பிவிட்டேன் பூக்காரியிடம் எனக்கென...
8 comments:
good one. rasiththeen.
Thanks for dropping by and for your comments.
நல்லா இருக்குங்க கவிதை
இந்த கவிதைக்கு தலைப்பு 'கவிதை' ! :-)
Really nice!
நன்றிங்க Yatra!
Li க்கு - You are right! Am surprised :-) Thanx!
நல்ல கவிதைங்க.
ராவணனின் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.
Post a Comment