Friday, February 20, 2009

இம்முறை பாசாங்கின்றி

முதன் முதலில் உன்னை பார்த்தேன்
நீ கை கொடுத்து விடை பெரும் வரை
பார்த்துக்கொண்டே இருந்தேன்
பேச எண்ணி வந்ததெல்லாம்
சடாரென மறந்ததெப்படி

கனவுகள் அப்படியே பலிக்குமா என்ன
நீ நிஜமாகியதை
நம்பவே முடியவில்லை என்னால்
மனதுக்குள் மிக இனிமையான ராகம் வழிந்தோடியது
யாரிடமாவது இதை சொல்ல துடித்தேன்
யாரிடம் சொல்வது
தோழியை அழைத்தேன்
பின் என்னென்னவோ பேசினேன் உன்னைத்தவிர

நீ என் வாழ்வில் வந்தாய்
நிறைய பேசினாய்
நீ பேசுவதை கேட்பது எப்பொழுதுமே
பிடித்தமான தருணம் எனக்கு
அதற்காகவே உன்னிடம் நான் ஊமையாகிவிடுகிறேன்

நீ என்னோடு நடந்தாய்
நாம் சேர்ந்து நடப்பதை
தள்ளி நின்று மனது ரசித்தது
என்னருகே வந்து அமர்ந்தாய்
நானோ உன்னை ஆழமாய் சுவாசித்தேன்

உன் பதவிசு பிடித்தது எனக்கு
எனக்கான உன் கோபங்கள் பிடித்தது
நாம் கோபத்தில் பேசாதிருந்த பொழுதுகள்
கொடுத்த வலிகள் பிடித்தது

அன்றொரு நாள்
என்னை ஊஞ்சலில் அமர்த்தினாய்
பின் உன் அன்பையெல்லாம் திரட்டி
மெதுவாய் ஆட்டினாய்
மகிழ்ச்சி தொட்ட உயரம் அறியேன்

நாம் சந்தித்துக்கொண்ட பூங்காவில்
அமர்ந்திருந்த மரத்தடியில்
நாம் தெரிகிறோமா
இன்றும் பார்கிறேன்

வார்த்தைகளில்லை என் அபிமானங்கள் முழுதும் சொல்ல
உனக்கும் எனக்கும் என்ன ஒரே இதயமா
நீ நினைப்பதை நானும்
நான் பேசவிருப்பதை நீயும்
எப்போதும் ஒன்றையே பேசுகிறோம்

நினைவுகளின் சுமையில் இங்கு நான்
மறுபடியும் துவங்கலாம் வா நீ

Thursday, February 5, 2009

அயன் பாடல்கள்

I liked 3 songs in that and I don't how many times did I listen to that in these 3 days.


Nenje Nenje Magathi's voice in this song is just fantabulous

Vizhi Moodi Karthik is as always good

Oyaayiye Yaayiye lyrics ...முக்கியமாக இந்த வரிகள்... ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும் மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும் சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே ...
இதழ் பூவென்றால் அதில் தேனெங்கே இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன்
....

Saturday, January 31, 2009

Slumdog millionaire

நான் அந்த படத்தை விமர்சிக்க இங்கு வரவில்லை. அதை யார் இயக்கினார் மற்றும் இதர தகவல்களிலும் நாட்டமில்லை. அதன் நிறைகளும் குறைகளும் புரிகிறது. While watching I was neither interested to know if he became a millionaire nor if the climax was good/happy ending. But getting to know their life...My god.............

இப்போது இதுவரை எனக்கு தெரியாத சேரியின் வாழ்கையை தெரிந்துகொண்டேன். அவர்களின் வலியும், வேதனையும் புரிந்தது. சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தையைப் பார்த்தால் எனக்கு இந்தப் படம் நினைவில் வருகிறது. அதற்க்கு யார் காரணம் என்று யோசிக்க வைக்கிறது. வாழ்கையில் மிகவும் கொடுமையான நிமிஷம் எதுவென்றால் இவர்களுக்கு நம்மால் எதுவும் செய்ய முடியாமல் போகும் இயலாமை புரிவதுதான்.

I have seen lot of kids begging at the signals. Once I was waiting for my hubby in front of a restaurant. When I was observing a kid (begging at d signal), I saw him looking somewhere and his face was filled with fear. Suddenly he began to run to the other side of the road. After reaching the median he just kept the coins (collection) which he had in his hand there and ran away. I was perplexed after seeing this. When I was trying to make out what happened I saw a lady shouting at him and trying to chase him. By then my hubby came and I left the place. I don't know if someone took a notice of this. I didn't know why the lady chased him and why he ran. I was wondering why should a kid run away from his mother. But after seeing this movie I seem to get some answer for this. அவன் யாருடைய குழந்தை. எதற்கு இந்த தண்டனை?

I don't thank god for all the good things which I have in my life. I just want to question him what mistake did the kid/kids do to go through all this pain and agony? Why should they go through all such things for no fault of theirs?

When the dog bites and bee stings....

Favorite things

Friday, January 30, 2009

எழுத்தாளன்

கவலைப்படாதே
கதையில் வராது
நம்பிப் பகிர்ந்த அந்தரங்கம்

Wednesday, January 28, 2009

என் மகள்

இன்றெல்லாம் அவள் நினைவு,
நாசியில் துவங்கி இதயத்தில் மணக்கிறது
அவளின் பால் மணம்!

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...